Wednesday, 14 August 2024

 சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் 

சுதந்திர தின விழா 



 





 

 



















































தேவகோட்டை – ஆக- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் சுதந்திர  தின விழாவில் மாணவர்களுக்கு சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.

           ஆசிரியை முத்துலெட்சுமி  வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை  தாங்கி கொடி ஏற்றி பேசினார்.மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு
வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.  மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும்,சுதந்திர தின விழா தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தீபா,கனிஸ்கா,முகல்யா .லெட்சுமி ,ஓவியா ஆகியோருக்கு  பரிசுகளும் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி கொடி ஏற்றி மாணவர்களுக்கு பரிசுகளையும் ,கடலாய் மிட்டாய் இனிப்பையும் வழங்கினார்.

 

வீடியோ : https://www.youtube.com/watch?v=K9ndsG2Vpss

No comments:

Post a Comment