Monday 5 December 2022

 அகில இந்திய  வானொலியில் இளம் வயது பள்ளி மாணவர்  ஆர்.ஜெ வாக அசத்தல் 




மதுரை - ஆக - அகில இந்திய மதுரை வானொலியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம்  வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்  ஆர்.ஜெ வாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் அசத்தினார்.

                                                          அகில இந்திய மதுரை வானொலி நிலையத்திற்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்  பிரிஜித்   நிகழ்ச்சி ஆர்.ஜெ வாக செயல்பட தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வானொலி நிலையத்தருடன் பேசி தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்றார்.மதுரை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தலைவர் தாராதேவி, ஒலிபரப்பு பொறுப்பாளர்கள் வேல்முருகன்  , சதீஸ்குமார்  ஆகியோர் மாணவியை  வரவேற்று ஒலி பதிவு அறைக்கு அழைத்து சென்றனர். கண்ணாடி மாளிகை என்கிற நிகழ்ச்சியை மாணவர்  ஒரு மணி நேரம் முழுவதும் நேரலையில் நேயர்களுடன் தொலைபேசி வழியாக பேசி நெறிப்படுத்தினார்.அகில இந்திய மதுரை வானொலியில் மாணவர்கள் ஆர்.ஜெ.வாக செயல்படும் இந்நிகழ்வில் மாணவர் பிரிஜித்   பங்கேற்று தேர்ந்த ஆர்.ஜெ.வாக சிறப்பான  முறையில் நேயர்களுடன் பேசி ஒருங்கிணைத்தது பாராட்டுக்குரியது என நிகழ்ச்சி  தலைவர் தாரா தேவி வாழ்த்து தெரிவித்து மாணவருக்கு  புத்தகம் பரிசாக வழங்கினார். ஒலிப்பதிவில் உறுதுணையாக நெறியாளர் தாமரை    உடனிருந்தார். மாணவிக்கு பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி   பயிற்சி அளித்திருந்தார். ஆறாம்  வகுப்பு மாணவர்  நெறியாளராக வானொலியில் ஒரு மணி நேரம் முழுவதும் நேயர்களை ஒருங்கிணைத்தது பாராட்டுக்குரியது என நேயர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.


பட விளக்கம் : அகில இந்திய மதுரை வானொலியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆறாம்  வகுப்பு பயிலும் பள்ளி மாணவர் பிரிஜித்   ஆர்.ஜெ வாக செயல்பட்டு அனைவரையும் ஆச்சிரியத்தில் அசத்தினார்.நிகழ்ச்சி  தலைவர் தாரா தேவி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=F4_8z61Ge4M



https://www.youtube.com/watch?v=aOMZT7JhuqA
https://www.youtube.com/watch?v=ge8-kjCgkWI&t=17s



No comments:

Post a Comment