Wednesday 7 December 2022

 காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு





































































தேவகோட்டை - காவல் நிலைய நடை முறைகள் குறித்து சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 
                                                  சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியை செல்வமீனாள் ஆகியோர் காவல் நிலைய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  தேவக்கோட்டை  நகர் காவல் நிலையத்திற்கு  அழைத்து சென்றனர்.தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன்  காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கி, வாக்கி டாக்கி, கைதியை விசாரிக்கும் அறை, கணினி அறை, காவலர்கள் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முறை, பதிவேடு அறை, புகார் எழுதும் முறை, ஓய்வறை, ஆகியவை மாணவர்களுக்கு காண்பித்து விளக்கம் அளித்தார் . மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். முன்னதாக காவல் நிலைத்தின் சார்பாக   மாணவர்களுக்கு இனிப்பு  வழங்கி வரவேற்பு வழங்கப்பட்டது.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சரவணன் காவல் நிலைய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

வீடியோ : 

https://www.youtube.com/watch?v=EUDPnLQa9eg

https://www.youtube.com/watch?v=2BGoL9NTVsA

https://www.youtube.com/watch?v=AJYSLD6uNVM



No comments:

Post a Comment