Sunday 18 December 2022

நன்றாக தேர்வு எழுதுவது எப்படி?

வட்டார கல்வி அலுவலர் அறிவுரை 








தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தேர்வு எழுதுவது தொடர்பாக மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார்.பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.
                                      ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி நிகழ்வுக்கு தலைமை தாங்கி மாணவர்களிடம் பேசுகையில், தேர்வு எழுதும் போது, முதலில் தெரிந்த வினாக்களுக்கும், பின் ஓரளவு தெரிந்த வினாக்களுக்கும், இறுதியாக பதில் தெரியாத வினாக்களுக்கும், உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதவும். அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிப்பது முக்கியம்.முழுவதும் எழுதிய பிறகு , குறைந்தது 5 நிமிடமாவது எழுதியதை படித்து பார்க்க நேரம் வைத்துக்கொள்வது முக்கியம்.இளம் வயதிலேயே நீங்கள் நன்றாக தேர்வு எழுத கற்றுக்கொண்டால் மேல் வகுப்புகளில் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று பேசினார்.பள்ளி வளாகத்தில் பலன் தரும் மரக்கன்றுகளும் நடப்பட்டது.ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தேர்வு எழுதுவது தொடர்பாக மாணவர்களுக்கு தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லெட்சுமி தேவி அறிவுரை வழங்கினார்.பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.











No comments:

Post a Comment