Thursday 8 December 2022

 தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்


தொழுநோயை தடுக்க சத்துள்ள காய்கறி,கீரைகளை சாப்பிடுங்கள் 

  தொழுநோய் மேற்பார்வையாளர் அறிவுரை 







   

தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கு தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு  நடைபெற்றது.
                                                        ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை  அரசு ஆரம்ப சுகாதார நிலையை மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்  ஜெபமாலை மேரி மாணவ,மாணவிகளை முற்றிலுமாக பரிசோதனை செய்து மாணவ,மாணவியரிடம் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.    இது முற்றிலும் குணப்படுத்த   கூடிய நோய தான். இந்நோயை தடுக்க இளம் வயது முதலே சத்தான காய்கறிகள் ,கீரைகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக முருங்கை கீரை, பாசிப்பயிறு கூட்டு வைத்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.பிராய்லர் கோழி சாப்பிடுவதை இளம் வயது முதலே  பெண் குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.இளம் மாணவர்களாகிய நீங்கள் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வை உங்களை சுற்றி உள்ள அனைவரிடமும் சொல்லி இந்நோய் பரவமால் தடுக்க முயற்சி எடுங்கள் என பேசினார்கள் .தொழுநோய் தொடர்பான உறுதிமொழி அனைவரும் எடுத்துக்கொண்டனர். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்   நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தொழு நோய் கண்டுபிடித்தல் மற்றும் விழிப்புணர்வு முகாமில் தேவகோட்டை  அரசு ஆரம்ப சுகாதார நிலையை மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ஜெபமாலை மேரி  மாணவர்களை பரிசோதனை செய்தார் .பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

வீடியோ 

https://www.youtube.com/watch?v=fEIOKkSCwSk


https://www.youtube.com/watch?v=t5uWZjGXJaY


https://www.youtube.com/watch?v=tmPWt-zslRw


https://www.youtube.com/watch?v=5bR3UWraDTk

No comments:

Post a Comment