Wednesday 8 June 2022

 18 அடி உயரமுள்ள செங்குத்தான ராஜகோபுரம் உள்ள கோவில் , நீர்வீழ்ச்சிகள்,யானா கேவ்ஸ் , உலக புகழ் பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி , வெளிநாட்டினர் குவியும் பீச்சுகள் - சுற்றுலா அனுபவம் 






































 

               இரண்டாம் நாள் இரவு கொல்லூரில் தங்கிவிட்டு காலையில் கிளம்பினோம். பயணத்திட்டத்தை  மீண்டும் இரவு பதினோரு மணி வரை அண்ணன் அண்ணாமலை அவர்கள் சரிசெய்து மீண்டும் எங்களுக்கு வாட்சப் அனுப்பினார்கள்.

                                     காலையில் ஆறரை மணிக்கெல்லாம் கொல்லூரில் இருந்து எங்களது பயணத்தை ஆரம்பித்தோம்.  அண்ணன் அண்ணாமலை அவர்கள் இரவு 11 மணிக்கு அனுப்பிய புதிய பயணத்திட்டத்தை  எடுத்துக்கொண்டு  எங்களது பயணத்தை ஆரம்பித்தோம். 

                              கொல்லூரில் ( 60 கிலோமீட்டர் ) இருந்து அடர்ந்த காடுகளின் வழியாக ஒன்பது மணிக்கெல்லாம் முருதீஸ்வரர் ஆலயம் சென்றோம். அங்கே ஹோட்டலில் முதலில் உணவு சாப்பிட்டோம். பிறகு முருதேஸ்வரர் ஆலயத்தை உள்ளே நுழைந்தோம். 

                                          கோவிலில் மிகப்பெரிய கோபுரம். ராஜகோபுரம் 18 மாடி உள்ளது .இந்த 18 மாடியில் லிப்டின் மூலமாக சென்று பார்க்கலாம். சிறுவர்களுக்கு ஐந்து ரூபாய். பெரியவர்களுக்கு 10 ரூபாய் என்று இருந்தது. 18 மாடி லிபிட்டில் சென்று நாங்கள் பார்த்துவிட்டு, 18 அடி உயரத்தில்  இருந்து பார்க்கும்போது   கடல் மற்றும் சிவன் சிலை ஆகியவை மிக அருமையாக தெரிந்தது. 

                            கோவிலை நன்றாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக பார்த்து விட்டு , அங்கு உள்ள பீச்சிலும் சிறிது நேரம் இருந்துவிட்டு சிவன் சிலையும் நன்றாக பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

                     பீச் மிக அருமையாக அதிக அலை இல்லாமல் குளிப்பதற்கு ஏதுவாக ,அதிக மணல் இல்லாமல் நல்ல முறையில் இருந்தது.சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அங்கு நாம் நேரத்தை செலவிடலாம்.

                                    கோவிலின் அருகில் மீன்கள் படகு மூலம் வந்து அதிக அளவில் விற்பனை ஆகின்றது.குளிப்பதற்கு அருமையான பீச்.மணல் அதிகம் ஒட்டவில்லை .

                                      முர்தேஸ்வர் ஆலயத்தில் இருந்து இடுக்குண்ட கணபதி ஆலயத்தை நோக்கி ( 19 கிலோமீட்டர் ) இடி குண்டப்பா என்கிற விநாயகர் ஆலயத்தை நோக்கி சென்றோம். அதுவும் நல்ல காட்டுப் பகுதியின் வழியாகவே செல்ல நேர்ந்தது. 

                                நாங்கள் இருப்பதோ ஷிமோகாவில் இருந்து 160 கிலோ மீட்டர் தள்ளி என்று எங்களது வாகன ஓட்டுனர் எங்களிடம் தெரிவித்தார் .அந்த விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகர் சிலையை தரிசித்துவிட்டு, அங்கிருந்து மீண்டும் நாங்கள் அப்சரா குண்டா என்கிற நீர்வீழ்ச்சி  நோக்கி சென்றோம். 

                                அப்சரா குண்டா நீர்வீழ்ச்சி தனியார் நீர்வீழ்ச்சி. செயற்கையாக இயற்கையிலிருந்து லேசாக பிரித்து நீர்வீழ்ச்சி வருவதுபோல் ஏற்பாடு செய்திருந்தார்கள் .ஒரு கோயிலின் பின்பாக அந்த நீர்வீழ்ச்சி அமைந்திருந்தது. அங்கே ஆட்கள் யாரும் அதிகமாக இல்லை. 

                               ஒரு ஐந்து முதல் ஆறு இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அங்கு சென்ற பொழுது நான் மட்டுமே அங்கே குளித்தேன். குளிப்பதற்கு நல்ல சூழ்நிலை ஆக இருந்தது. 

                               ஒரு அரை மணி நேரம் அங்கேயே இருந்துவிட்டு , மேலே மெரைன் பார்க் இருப்பதாக தெரிவித்தார்கள். அந்த பார்க்கையும்  பார்வையும் பார்த்துவிட்டு கிளம்பினோம்.

                              கணபதி கோயிலில் இருந்து நாங்கள் வரும்பொழுது ( 46 கிலோமீட்டர் )  மிர்சன்  கோட்டையை அடைந்தோம். மிர்சன் கோட்டையை நாங்கள் அடையும்போது மதியம் 12 மணி . நல்ல உச்சி வெயில் .கோட்டை மிக அருமையாக இருந்தது. 

                                           கோட்டையின் உள்ளே அந்தக் காலத்தில் சாமானியர்கள் வருவதற்கு கீழே வழி வைத்துள்ளார்கள். ராஜ வம்சத்தினர், பெரிய அதிகாரிகள் வருவதற்கு  நன்றாக மேலே ஏறி வைத்துள்ளனர்.

                                   கோட்டையின் உள்ளே ஆங்காங்கே கிணறுகளும் மிகப்பெரிய அளவில் இருக்கின்றன, அந்த கிணறுகளுக்கு செல்வதற்கும் நல்ல முறையில் வழி வைத்து கட்டி உள்ளார்கள். கோட்டையின் முடிவில் மிகப்பெரிய ஆறு ஓடுகிறது. 

                               அந்த ஆற்றின் கரையில் தான் இந்த கோட்டை அமைத்துள்ளார்கள் . ஆற்றை சுற்றிலும் தென்னை மரங்களும் ,பாக்கு மரங்களும் குவிந்து கிடக்கின்றது. இந்த கோட்டையை சுற்றிலும் அகழி போன்று வெட்டி தண்ணீர் அதிகமாக தேங்கும் அளவிற்கு இடம் உள்ளது. 

                              சாமானியர்கள் அந்தத் தண்ணீரின் வழியாக நடந்து வந்துதான் கோட்டையின் உள்ளே வர முடியும் என்று பிற்பாடு தெரிந்து கொண்டோம். மிக நல்ல கோட்டை .மிகப்பெரிய கோட்டை. 

                                    மிர்சன் கோட்டை அவசியம் பார்க்க வேண்டிய ஒரு இடம்.இந்த இடத்திற்கு மாலை 3 மணி அளவில் செல்வதுதான் நல்லது.நல்ல வெயிலில் அதிகம் சுற்றி பார்க்க இயலவில்லை.ஆனால்  நாம் பல நூறு கிலோமீட்டர் தாண்டி செல்வதால் வெறு வழி இல்லாமல் நாம் அந்த வெயிலில் பார்க்க வேண்டி உள்ளது .

            மதியம் 12.45 மணி போல் மிர்சன் கோட்டையில் இருந்து ( 22 கிலோமீட்டர் ) கோகர்ணா என்ற பீச் மற்றும் கோயிலை நோக்கி பயணித்தோம். கோகர்ணா கோயிலை நாங்கள் அடைந்தபோது 01:30 மணி. 

                                         எங்களது டிரைவர் 1 30 மணிக்கு கோகர்ணா கோயில் அடைத்து விடுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால் கோயில் அடைக்கவில்லை. இரண்டு மணிக்குத்தான் அடைப்பதாக தெரிவித்தார்கள். அதுவும் பத்து முதல் பதினைந்து நிமிடம் மட்டுமே அடைக்கப்படும் என்று தெரிவித்தார்கள் .

                                     மற்ற கோயில்களில் கர்நாடகாவில் சட்டையை கழட்டி விட்டு செல்ல வேண்டும் .ஆனால் கோகர்ணாவில்  பேண்ட்டைக் கழற்றிவிட்டு, வேஷ்டி கட்டிக் கொண்டு செல்ல சொன்னார்கள். 

                                             முதலில் அந்த கோவில்  செக்யூரிட்டி என்னிடம் சொன்னது எனக்கு புரியவில்லை. நேரம் கழித்து அவர் காட்டிய சைகைகள்  மூலமாக புரிந்து கொண்டு, அங்கேயே வேஷ்டி 100 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஆனால் மிகவும் சுமாரான வேஷ்டி .

                             மக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு விதமான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று எண்ணிக்கொண்டே அந்த வேஷ்டியை வாங்கி,நாம் பேண்டின்  மேலே கட்டிக் கொள்ளலாம். 

                                    வேஷ்டியை பேண்டின் மேலே கட்டிக்கொண்டு நாங்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்து, நல்ல முறையில் அங்கிருந்து மீண்டும் கிளம்பி வந்தோம். இந்த கோகர்ணா கோயிலுக்கு ராவணன் கணபதி இணைந்த ஒரு கதையை கூறினார்கள் . அதையும் கேட்டுக்கொண்டோம்.

                                    கோவிலில் இருந்து வெளியே வந்த பிறகு திராட்சை, காய்ந்த பேரீச்சம் பழம் போன்ற நல்ல பொருட்கள் சரியான விலையில் கிடைத்தது. அவற்றையும் வாங்கிக் கொண்டு கோவிலில் இருந்து அருகில்  இருக்கும் பீச்சுக்கு  சென்றோம். 

                                கோகர்ணா பீச் மிக சூப்பர் என்று தான் கூற வேண்டும். நல்ல அமைதியான பீச் .நிறைய பேர் குளித்தார்கள் .ஆனால் மதியம் இரண்டரை மணி என்பதால் நாங்கள் குளிக்கவில்லை. 

                          மாலை சுமார் மூன்று மணிக்கு இந்த பீச்சுக்கு சென்றால் அருமையான குளியல் குளித்து விட்டு மாலை வரை நேரத்தை என்ஜாய் செய்து விட்டு வரலாம். ஒரு 20 நிமிடம் அந்த பீச்சில் நின்றுவிட்டு காலார நடந்து விட்டு , சாப்பிட அருகில் உள்ள உணவகத்திற்கு வந்தோம். 

                                 கோகர்ணா பீச் அருகே உணவகத்தில் இந்தியன் சவுதலி  வைத்திருந்தார்கள். அதையும் சப்பாத்தியும் வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து  கிளம்பி ( 7 கிலோமீட்டர் ) ஓம் பீச் சென்றோம். 

                                        நல்ல அடர்த்தியான காடுகளின் வழியாக ,மரங்களின் நடுவே ஓம் பீச்சை அடைந்தோம். மதியம் 1.30 மணி போல் ஓம் பீச் மிக அருமையாக இருந்தது. நிறைய வெளிநாட்டினர் ஓம் பீச் உள்ளே   இருந்தார்கள். 

                                    பீச் உள்ளே சிகியூபா டிரைவிங் எல்லாம் இருந்தது. நிறைய பேர் குளித்தார்கள். சுற்றிலும் மாமரம், பலாமரம் என்று பெரிய பெரிய மரங்கள் அங்கே அமைந்திருந்தது. அவற்றிலிருந்து நாம் கடற்கரைக்கு வரும் பொழுது நிறைய கடல் தொடர்பான பவளப்பாறைகள் அதிகமாக அமைந்து இருக்கின்றது. 

                               அந்த பாறைகளையும் கடற்கரைகளையும் 30 நிமிடங்கள் பார்த்து விட்டு , அங்கிருந்து கிளம்ப தயாரானோம். இந்த பீச்சில் காலையில் உணவை எடுத்துக்கொண்டு சென்று விட்டால், மாலை வரை ஒரு நாள் முழுவதும் இருந்து என்ஜோய் செய்து விட்டு வரலாம்.குளிக்க, ஓய்வு எடுக்க அருமையான இடம்.

                                            ஓம் பீச்சில் இருந்து யானா கேவ்ஸ் ( 53 கிலோமீட்டர் ) செல்லலாம் என்று எண்ணினோம். ஜோக் பால்ஸ் செல்லும் வழியில்தான் யானா கேவ்ஸ் பென்சில் வடிவங்களை போன்ற சிற்பங்கள் இருக்கும் என்று எங்கள் அண்ணன் அண்ணாமலை அவர்கள் தெரிவித்தார்கள். 

                                நாங்கள் ஓம் பீச்சில் இருந்து கிளம்பும்போது மாலை 4 மணி. நாங்கள் மாலை  6 முதல் 7 மணிக்குள் தான் வெளிச்சத்தில் ஜோக் பால்ஸ் சென்றால்தான் பார்க்கலாம் என்று அண்ணன் அண்ணாமலை அவர்கள் தெரிவித்தார்கள். 

                                        எங்களது ட்ரைவரோ  ஐந்து மணிக்கெல்லாம் ஜோக் ஃபால்ஸ் மூடி விடுவார்கள் என்று தெரிவித்தார். ஆனால் எங்களது அண்ணன் அண்ணாமலை அவர்களோ ஜோக் பால்ஸ் பகுதியில் உள்ள ஒருவரிடம் பேசி விட்டு 8 மணி வரை ஜோக் ஃபால்ஸ் இருக்கும் என்றும், ஆறரை மணிக்குள் சென்று விடுங்கள் என்றும் தெரிவித்தார்.

                                      அதனால் நாங்கள் யானா கேவ்ஸ் செல்லாமல் ( 98 கிலோமீட்டர் ) ஓம் பீச்சில் இருந்து மாலை 4 மணி அளவில் கிளம்பி சரியாக 6.20 மணிக்கு ஜோக் பால்ஸை அடைந்தோம்.  நல்ல வெளிச்சம் இருந்ததுஅதுவும் சரியான காடுகளுக்குள் தான் நாம் செல்ல வேண்டியிருந்தது. 

                               உலகிலேயே மிக பெரிய அருவியான ஜோக் அருவியை பார்க்க மட்டுமே இயலும்.ஜோக் அருவியை நன்றாக பார்த்துவிட்டு மீண்டும் 7 20 மணி போல் அங்கிருந்து கிளம்பினோம். 

                            ஜோக் அருவியில் இருந்து ஷிமோகாவை  எங்கள் வாகன ஓட்டுனர் 9 மணிக்குள் அடைந்துவிட்டார் .மிகவும் வேகம். 

                           இருந்தபோதிலும் அவரும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற நோக்கில் வெகுவேகமாக சாதுரியமாக வண்டியை செலுத்தி எங்களை ஷிமோகாவில்  காரில் கொண்டு வந்து விட்டார். பிறகு அவரிடம் மூன்று நாட்களுக்கான தொகையை கொடுத்துவிட்டு, நாங்களும் மறுநாள் காலை கிளம்புவதற்காக தயாரானோம். 

                                 இந்தப் பயணத்தில் மூன்று நாட்களில் சுமார் 950 க்கும் மேற்பட்ட கிலோமீட்டர்களை  காரில் பயணித்தோம்.                      பயணத்திட்டம் முழுவதையும் அருமையாக எங்கள் அண்ணன் அண்ணாமலை அவர்கள் கொடுத்திருந்தார்கள். 

                                          நாங்கள் ஒரு நாளைக்கு 300 கிலோமீட்டர் பயணிப்பது என்று திட்டமிட்டு பயணித்தோம்.ஆனால் எங்களுடைய கருத்து ஒரு நாளைக்கு 200 கிலோ மீட்டருக்கு மேல் பயணிப்பது சிரமம் .

                               ஏன் என்றால் எனது மனைவியும், எனது மகனும் மிகவும் சோர்ந்து விட்டார்கள். எனவே ஒரு நாளைக்குள் 200 கிலோ மீட்டருக்குள் நாம் பயணித்தால் நமக்கு நன்மை ஏற்படும். இல்லை என்றால் மிகவும் சிரமம் தான். 

                                     இருந்தபோதிலும் சுற்றுலாவை சுற்றிப்பார்க்க வேண்டும் என்கிற நோக்கில் நாங்கள் அலாதி பிரியத்துடன் இத்தனை இடங்களையும் பார்த்தோம்.

                                       இரண்டு நாட்களும் எனது மகன் பல்வேறு இடங்களுக்கும் வர இயலவில்லை. தொடர் ஆராய்ச்சிகளின் காரணமாக அசந்து விட்டார் .

                                        இருந்தபோதிலும் இந்த பயணம் எங்களுக்கே மனதிற்கு மகிழ்ச்சியாகவும் ஒரு புதிய அனுபவத்தையும் ஏற்படுத்தியது. இந்த பயணத்தை தொடர்ந்து மறுநாள் காலையில் எஸ்வன்பூர் கிளம்பி பெங்களூர் வந்து பெங்களூரில் இருந்து நாங்கள் சேலம் வந்தடைந்தோம் . 

                           நண்பர்களே இந்த முழு பயணத்திலும் எங்கள் அண்ணன் திரு. அண்ணாமலை அவர்கள் மிகுந்த அளவில் எங்களுக்கு பலமுறை போன் செய்த போதும்,  எங்களுக்கு தொடர்ந்து பல்வேறு தகவல்களை தெரிவித்து உதவி செய்தார்கள். 

                                        ஐந்தாவது நாளும்  யானை குளிக்கும் இடத்தையும், யானை தொடர்பான பகுதிகளையும் சென்று பார்க்கலாம் என்று தெரிவித்து இருந்தார்கள் . ஆனால்  ட்ரெயின் டிக்கெட் கிடைக்காது என்ற சூழ்நிலையால் நாங்கள் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. 

                                   எனவே இது போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொழுது நல்ல திட்டமிடலுடன் ட்ரெயின் டிக்கெட் எல்லாம் புக் செய்து விட்டு சென்றால் சுற்றுலா மிகவும் இன்னும் இனிமையாக இருக்கும் என்பது எங்களது கருத்து. நன்றி.இப்போதைக்கு ஷிமோகா சுற்றுலா நிறைவடைந்தது.

நன்றி.

லெ .சொக்கலிங்கம்,

காரைக்குடி.

 

 

 

 

No comments:

Post a Comment