Tuesday 7 June 2022

     மிகப்பெரிய ஆறும், பீச்சும் நெடுஞ்சாலையின் இருபுறமும் செல்ல அதனில் பயணம் 

 

 சிமோக சுற்றுலாவின் இரண்டாம் நாள் தொடர்ச்சி 

 

சிருங்கேரி மடம், கொல்லூர் மூகாம்பிகை கோவில், மருநாந்தே பீச் பார்த்த அனுபவங்கள்   

 


 

   

































                   

            மறுநாள் காலையில் அதே டிரைவர் தான் மீண்டும் எனக்கு போன் செய்தார். எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம்! டிரைவர் மாறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதே டிரைவர் போன் செய்தார். இருந்தாலும் பரவாயில்லை. அவரை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு காலையில் கிளம்பி அவரை ஹோட்டல் அறைக்கு வரச் சொன்னோம். 

                                        ஆறு முப்பதுக்கு எல்லாம் வந்துவிட்டார். நாங்களும்  ஹோட்டலை காலி செய்துவிட்டு அங்கிருந்து  செல்வதற்கு ஆயத்தமானோம். செல்லும் வழியில் டிரைவர் என்னிடம் பணம் வாங்கி பெட்ரோல் போட்டார். அப்பொழுது எனது மகன் தற்செயலாக நாம் எங்கே செல்கிறோம்?  என்று கேட்க நான் சிருங்கேரி செல்கிறோம்  என்று கூறினோம்.

                               ட்ரைவரோ  எனக்கு இரவு பதினொன்றரை மணிக்கு தான் வாட்ஸ் அப்பில் வந்தது, நான் பார்த்த பொழுது கொல்லூர் செல்வதாக இருந்தது என்று தெரிவித்தார் ,பிறகுதான் அவர் பார்த்தது இரண்டாவதாக வந்த வாட்ஸ்அப் தகவல், முதலாவதாக வந்த வாட்ஸ்அப் தகவலில் சிருங்கேரியில் இருந்து கிளம்பி கொல்லூரில் தங்குதவதாக இருந்தது. 

                                   இதனிடையில்  4 கிலோ மீட்டருக்கு மேல் திசைமாறி வந்துவிட்டார். மீண்டும் திசையை மாற்றி சிருங்கேரி நோக்கிச் சென்றார். சிருங்கேரியை  ( 94 கிலோமீட்டர் பயணம் ) காலையில் 9 மணிக்கு எல்லாம் சென்று அடைந்து விட்டோம். 

                                 அங்கே காலை உணவை நல்ல ஹோட்டலில் சாப்பிட்டோம். அங்கிருந்து சிருங்கேரி கோயிலுக்குச் சென்றோம். கோயிலின் அருகே உள்ள ஆற்றில் யானை குளிப்பதை பார்த்தோம். கோவிலின் ஆறு  பெரிய ஆறாக  இருந்தது. தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது. பெரிய பெரிய மீன்கள் அங்கே தானாக வலம் வந்து கொண்டிருந்தது. அவற்றையும் சிறிது நேரம் ரசித்துவிட்டு, கோயிலை நன்றாக சாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து நாங்கள் அருகே உள்ள ஸ்ரீமனே ( 14 கிலோமீட்டர் ) அருவி ஒன்றுக்கு சென்றோம். 

                                              அருவி செல்லும் வழியில் சிலபேரை  கேட்டபொழுது அருவியில் தண்ணீர் வரவில்லை என்று தெரிவித்தார்கள். எங்களது அண்ணன் அண்ணாமலை அவர்களோ நன்றாக விசாரித்துக் கொள்ளுங்கள். அருவி  நன்றாக இருக்கும் .அருவி சென்று பார்த்து வாருங்கள் என்று தெரிவித்தார். 

                                       எங்களது டிரைவர் முதலில் செல்ல முடியாது என்று தெரிவித்தார். பிறகு செல்கிறேன் என்று கூறி ஏழு கிலோமீட்டர் தொலைவில் ஒரு கோயிலை அடைந்தோம். அந்த கோவிலுக்குள் சட்டையை கழற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும். நாங்களும் சென்றோம். அங்கு வலம்புரி விநாயகர் இரண்டு கைகள் கொண்டுள்ளவர் இருந்தார். சுயம்பு சிவலிங்கம் இருந்த ராஜ லிங்கம் என்று தெரிவித்தார்கள். 

                                        அங்கிருந்து அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம் என்று கிளம்பிய போது கன்னடத்தில் அருவியில்  வேலை நடைபெறுவதால் அருவி மூடப்பட்டுள்ளது என்கிற தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதைப் படித்து விட்டு மீண்டும் காடுகளின் வழியே தான் சென்றோம். 

                                          மீண்டும் காடுகளின் வழியே வெளியே வந்தோம். வரும் வழியில் செங்கலை  பார்த்தோம். செங்கல் என்றால் மிகப்பெரிய செங்கல். அந்த செங்கல் தான் சுட்ட செங்கல் என்று தெரிவித்தார்கள் .அதை வைத்துதான் பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டப்படுவதாகவும் தெரிவித்தார்கள். பிற்பாடுதான் சிருங்கேரி  மடம் மிக அருமையாக இருக்கும் என்று அண்ணன் அவர்கள்  தெரிவித்தார். நாங்கள் சிருங்கேரி மடத்தை பார்க்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 

                                            மீண்டும் அந்த கோயிலில் இருந்து நாங்கள் கொண்டபுரா  நோக்கி சென்றோம். கொண்டபுரா  செல்லும் வழியில் ( 31 கிலோமீட்டர் )  ஆகும்பே நோக்கி சென்றோம். ஆகும்பே என்பது சிரபுஞ்சி போன்று மிக அதிக அளவில் மழை பொழிய கூடிய இடம். ஆகும்பே செல்வதற்கே நாங்கள்  மிகப்பெரிய காடுகளின் வழியாக செல்ல வேண்டியிருந்தது. 

                                   மலைகளின் ஊடே மிகப்பெரிய காடுகளின் வழியாக நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். ஆகும்பே  மிகவும் உச்சியில் இருந்தது. அங்கே சன்செட் மறைவதை பார்ப்பதற்காக வழி ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அதனையும் பார்த்துவிட்டு அந்த பகுதி முழுவதும் கிங் கோப்ரா அதிகமாக காணப்படும் என்று ஆங்காங்கே தகவல் எழுதி வைத்திருந்தார்கள். 

                                 அங்கிருந்து நாங்கள் மீண்டும் கிளம்பி ஜோகி குண்டா நீர்வீழ்ச்சிக்கு சென்றோம். நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரவில்லை என்றும், அட்டை பூச்சிகள் மட்டுமே இருப்பதாக வனக்காவலர் எங்களிடம் தெரிவித்தார். ஏமாற்றத்துடன் மீண்டும் அருகிலுள்ள மற்றொரு நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம் என்று எண்ணினோம். அங்கேயும் தண்ணீர் வரவில்லை. 

                                  கொரோனோவுக்கு  பிறகு திறக்கப்படவில்லை என்கிற தகவல் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது.  மனதை தேற்றிக் கொண்டு அங்கிருந்து நாங்கள் சோமேஷ்வரம் ஊரின் வழியாக மருநாந்தே பீச் ( 75 கிலோமீட்டர் ) நோக்கி சென்றோம். செல்லும்போது வழியில் எங்கேயேனும் சாப்பிடலாமா என்று வாகன ஓட்டுநரிடம் கேட்டதற்கு , அவரோ கொண்டப்பூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தள்ளி சென்றால் நல்ல ஹோட்டல் இருக்கும் என்று தெரிவித்தார். 

                                    ஆனால் கொண்டபுரா  என்கிற ஒரு மிகப்பெரிய ஜங்ஷன் ஆக மிகப் பெரிய ஊராக இருந்தது. நாங்கள் அங்குள்ள ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் எந்த ஓட்டலில் உணவு நன்றாக இருக்கும் என்று கேட்டோம். அப்பொழுதே நேரம் 2 30 மணி. நல்ல ஹோட்டல் ஆட்டோ டிரைவரும் எங்களுக்கு தெரிவித்தார்.    அங்கிருந்து நாங்கள் அந்த ஹோட்டலுக்கு சென்று மதிய உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் மருநாந்தே பீச் நோக்கி சென்றோம். 

                                          பீச்  செல்லும் வழியில் மூன்று கிலோமீட்டருக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய ஆறும் , சாலையின் மறு பகுதியில் மருநாந்தே பீச்சும் காணப்படுகின்றது. பீச்சில் அதிகமான அலைகள்  வரும் என்கிற காரணத்தினால் அங்கே கற்களை போட்டிருந்தார்கள். யாரையும் குளிக்க அனுமதிக்கவில்லை. 

                                 சப்தம் என்றால் மிகப் பெரிய சத்தம். மிகப்பெரிய பீச். இந்த இடத்திற்கு மாலை 4 மணிக்கு பிறகுதான் செல்ல வேண்டும். அப்போதுதான் வெயில் போக சிறிது நேரம் அங்கிருந்து ,அலைகளின் அழகை காணாலாம்.அங்கிருந்து நாங்கள் அதற்கு நேர் எதிரில் உள்ள ஆற்றுக்கு சென்றோம்.அங்கு சில நிமிடங்கள் இருந்து விட்டு மீண்டும் கொல்லூர் நோக்கி சென்றோம்.

                          கொல்லூர் தாய்முகாம்பிகை கோயிலை அடைவதற்கு 39 கிலோ மீட்டர்கள் காடுகளின் வழியாக, அதுவும் அடர்ந்த காடுகளின் வழியாக எங்கள் பயணம் அமைந்தது.

                             அந்தக் காடுகளின் வழியாக நாங்கள் கோயிலைச் சென்று அடைந்த பொழுது மாலை ஐந்து முப்பது மணியளவில்  லலிதாம்பிகை ஹோட்டலில் ரூம்  இருக்குமா என்று தேடினோம் . ஆனால் ரூம் அங்கே கிடைக்கவில்லை. 

                                  எனவே அருகே உள்ள அபியமான்  லாட்ஜில் தங்கினோம். அபிமான லாட்ஜில் 1500 ரூபாய்க்கு ஒரு நாள் இரவு தங்குவதற்கு வாடகை. ஆனால் அதைவிட மிக அருமையான லாட்ஜ்கள்  இருப்பது எங்களுக்கு பிற்பாடுதான் தெரியும். அடிடா என்கிற லாட்ஜ் மிக நன்றாக இருப்பதாக தெரிவித்தார்கள். 

                                      இரவு உணவை கோயிலில் கொஞ்சமாக சாப்பிட்டோம். பிறகு அங்கிருந்து கணேஷ் ஹோட்டலில் இரவு உணவை முடித்தோம். கோவிலில் ரெண்டி, ரெண்டி தான், அதாவது செல்லுங்கள், செல்லுங்கள் என்றுதான் கூறுகிறார்கள். 

                                  அர்ச்சனை போன்ற விஷயங்கள் காசை கொடுத்துவிட்டு டோக்கனை வாங்கிக் கொண்டால் வெளியில் வந்த பிறகு பிரசாதம் வருகிறது. அவ்வளவுதான் அர்ச்சனை. இதுபோன்றுதான் அங்கே பல கோயில்களிலும் காணப்படுவதை நாங்கள் அறிந்தோம்.

                             இன்று ஒருநாள் பயணத்தில் நாங்கள் மொத்தம் 272 கிலோமீட்டர் பயணம் செய்து இருந்தோம்.மிகவும் அதிகமான பயணம் தான்.இன்று முழுவதும் எனது மகனுக்கு தொடந்து வாந்தி எடுத்தது .ஏனெனில் தொடர்ந்து மலைகளின் வழியாக பயணம் செய்ததால் எனது மகனுக்கு அது ஒத்துவரவில்லை. 

                                     இன்றைய முழு நாள் பயணத்திலும் அண்ணன் அண்ணாமலை அவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.அண்ணன் அவர்களுக்கு மீண்டும் நன்றிகள் பல.

சுற்றுலா தொடரும்.

அன்புடன் 

லெ .சொக்கலிங்கம்,

காரைக்குடி.

 

 

 

 

 

No comments:

Post a Comment