Tuesday 21 June 2022

யோகா செய்து அசத்திய மாணவர்கள் 

 சர்வதேச  யோகா தின விழா


உடலும் ,மனமும் புத்துணர்வு பெற  யோகா செய்யுங்கள் 

 போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சு 










 

 
  தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
                                               ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை  வகித்தார் .தேவகோட்டை நகர் காவல் நிலைய    ஆய்வாளர் சரவணன்  தலைமை தாங்கி   பேசுகையில்  , உடலும் ,மனமும் சேர்ந்து புத்துணர்வுடன் இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும்.அதற்கு அனைவரும் இளம் வயது முதலே யோகாவை கற்றுக்கொண்டு தினமும் யோகா செய்ய வேண்டும். 16 வயது முதல் யோகா செய்கின்றேன்.தொடர்ச்சியாக யோக செய்வதால் பல்வேறு நன்மைகள் எனக்கு கிடைத்து வருகிறது. யோகாவை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி கொள்ளுங்கள்..இவ்வாறு பேசினார்.உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா பயிற்சியில் மாணவர்களின் யோகா நிகழ்வும் நடைபெற்றது.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக யோகா தினம் விழாவில்  தேவகோட்டை நகர் காவல்  ஆய்வாளர் சரவணன்   சிறப்புரையாற்றினார்  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.

 

வீடியோ :  

 https://www.youtube.com/watch?v=KWMWp0pihUs

 

No comments:

Post a Comment