Wednesday 1 June 2022

பாக்கு மரங்களும்,தென்னை மரங்களும் வளர்ந்து நின்று வரவேற்கும் கள்ளத்கிரி 

ரோஜா கார்டனுடன் , சூரியன் மறைவதை காணும் கெம்மென் குண்டா

தீடிர் மழை சாரலுடன் உயரே,உயரே இருந்து கொட்டும் ஹபி அருவி

 குளிரில் நடுங்க வைக்கும் முள்ளங்கிரி பீக் 

செக்கொத்த பழம் சாப்பிட்ட அனுபவம் 

 


 


































                                              ஷிமோகாவில் இரண்டாவது நாள் காலையில் 5 30 மணிக்கு க எல்லாம் எங்களது கார் ஓட்டுனர் எனக்கு தொலைபேசியில் அழைப்பு கொடுத்தார். 

                               அரை மணி நேரத்தில் தயாராகி விட்டு தங்களை அழைக்கின்றேன் என்று நான் கூறினேன். 6 மணிக்கு நான் போன் செய்தேன். ஆனால் அவரோ ஆறு முப்பது வரை மிகவும் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தார். முதலிலேயே வாருங்கள் என்று தெரிவித்திருக்கலாம்.


                       நாங்கள் எடுத்திருந்த வாகனத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய். ஒரு நாளைக்கு 300 கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும். 300 கிலோ மீட்டர் ஓடினாலும், ஓடாவிட்டாலும் 3000 ரூபாய் கொடுக்கவேண்டும். அதனுடன் 500 ரூபாய் டிரைவருக்கு பேட்டாவும்  கொடுக்க வேண்டும். டிரைவருக்கு காலை மதியம், உணவு எங்களுடையது என்று பேசப்பட்டது. 

                                      காலையில் 6 40 மணிக்கெல்லாம் சிமோகா ஜுவல் ராக் ஹோட்டலில் இருந்து கிளம்பி சுமார் 49 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமிர்தபுரா கோவிலுக்கு சென்றோம்.  போகும் வழியில் பாக்கு மரங்களும்,தென்னை மரங்களும் வளர்ந்து நின்று நம்மை அன்புடன் வரவேற்கிறது.


                        தொன்மைமிக்க அமிர்தபுரா கோயிலுக்கு சென்று இருந்தோம். அங்கு சிவலிங்க வழிபாடு நடைபெற்றது. அம்பாளும் இருந்தார்கள். மிகவும் பழமையான கோயிலாக இருந்தது. அங்கு உள்ள சிற்பங்கள் மிக அருமையாக இருந்தன. 

                      கோபுரங்கள் நிறைய வடிவில் அமைக்கப்பட்டிருப்பது. சோபா போன்று கல்லிலேயே  செய்து அசத்தி இருந்தார்கள். அவற்றையெல்லாம் ஒரு 40 நிமிடங்களுக்கு மேலாக ரசித்து விட்டு அங்கிருந்து நாங்கள் கிளம்பி கல்லத்திரி  நோக்கி சென்றோம். 

                           கல்லத்திரி நோக்கி செல்கையில் தைக்கிறே  என்கிற ஊரில் சாந்தி சாகர் ஹோட்டல் என்பதில் காலை உணவு சாப்பிட்டோம். காலை உணவில் தட்டு இட்லி வழங்கினார்கள். 

                                  போண்டா சூப் என்பது போண்டாவை சாம்பாரில் போட்டு கொண்டு வந்து தருவதாக தெரிவித்தார்கள். பிசிபேளாபாத் என்பது  சாம்பார் சாதம் .  ஆனால் அது மிகவும் காரமாக இருந்தது. பூரி, கிழங்கு கொடுத்தார்கள். இந்த உணவு மிகவும் நன்றாக இருந்தது. 

                                                  அங்கிருந்து கள்ளத்திரி நோக்கி , சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.அங்கே  கோயில் உள்ளது. இந்தக் கோயில் பழங்காலத்து கோயில் ஆகும் . அங்கு பார்க்கிங்குக்கு 20 ரூபாய் ஊராட்சியில் இருந்து வசூல் செய்கிறார்கள் . 

                                         கோவில் அருகில் சிறிய  அருவி தான் வருகின்றது. தண்ணீரில் நடந்துதான் கோவிலுக்கு செல்ல வேண்டும்.மேலே சென்றால் நன்றாக அருவித் தண்ணீர் கொட்டுகிறது. ஆண்கள் குளிக்கலாம் . 

                           அருவியில் தண்ணீர் மிகவும் குறைவாக வந்ததால் நாங்கள் அங்கிருந்து நேராக கெம்மென் குண்டா என்பதை நோக்கி சென்றோம். கல்லத்திரியில்  இருந்து சுமார்  10 கிலோ மீட்டர்தான் கெம்மென் குண்டா . 

                                கல்லத்திரியில் இருந்து கெம்மென் குண்டா நோக்கி செல்லும் வழியில் ஹப்பி  பால்ஸ் என்பது இருக்கின்றது. இதற்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஜீப் வழியாக செல்ல முடியும் . சுமார் இரண்டரை மணி நேரம் இந்த பால்ஸ் சென்று வருவதற்கு நேரம் செலவாகும்.

                                  நாங்கள் காலை 10:30 மணி ஆன பொழுது சென்றோம். அங்கே தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த வேறு 5 நண்பர்கள் எங்களிடம் பேசினார்கள். எட்டுப் பேருக்கு ஒரு ஜீப் என்றும்,  ஒரு ஜீப்க்கு 4000 ரூபாய் என்றும் தெரிவித்தார்கள். நாங்கள் ஐந்து பேர் இருக்கின்றோம். நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து கொள்ளுங்கள் என்று எங்களிடம் தெரிவித்தார்கள். 

                                   எங்களது வாகன டிரைவருக்கு இந்த பால்ஸ்  செல்வதற்கு விருப்பம் இல்லை . அவர் இது தேவையில்லை, வேண்டாம் என்று எங்களிடம் தெரிவித்தார்.  ஆனால் எங்கள் அண்ணன் திரு.  அண்ணாமலை அவர்கள் தான் இந்த திட்டம் முழுவதையும் எங்களுக்கு வடிவமைத்திருந்தார் . 

                                  அண்னண் அவர்களோ இல்லை கண்டிப்பாக நீங்கள் இந்த பால்ஸ்  சென்று வாருங்கள் என்று எங்களிடம் தெரிவித்தார். அதற்கு தோதாக தமிழ்நாட்டு நண்பர்களும் எங்களுக்கு கிடைத்ததால் நாங்கள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே  காத்திருந்து பிறகு ஜிப் அனைத்தும் வந்த பிறகு கிளம்பிச் சென்றோம். 

                                        தமிழ்நாட்டை சேர்ந்த நண்பர்கள் நேற்று இந்த இடத்திற்கு வந்ததாகவும், மணி மாலை 4.30 ஆகி விட்டதால் ஜீப் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் , அதனால் அருகில் உள்ள ஊரில் ற்றோம் எடுத்து தங்கி விட்டு , இன்று காலை மீண்டும் இந்த அருவிக்கு செல்ல வந்து இருப்பதாகவும் கூறினார்கள்.

                                                 இந்த அருவி  ,  கர்நாடக காட்டுப் பகுதிகளுக்குள் தங்குவதற்கு ஜங்கிள் ரிசார்ட் என்கிற ஆன்லைன் மூலமாக நாம் புக் செய்து கொள்ளலாம் என்பதை அங்கே தான் நாங்கள் தெரிந்து கொண்டோம். அனைத்துமே ஆன்லைன் மூலம் புக் செய்து கொள்ளலாம்.

                                            முதலில் வனச்சரகத்தில் ஆரம்பத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் அதலபாதாளத்தில் மிகவும் ரிஸ்க்கான ஒரு பயணத்தில் ஜீப் ஓட்டுநர் எங்களை அழைத்துச் சென்றார் .எங்களை அழைத்துச் சென்ற ஜீப் ஓட்டுனரின் பெயர் சேத்தன். 

                                                அருவிக்கு செல்லும் காட்டு பகுதிக்குள் 42க்கும் மேற்பட்ட புலிகள் அந்த காட்டின் உள்ளே இருப்பதாக எங்களிடம் தெரிவித்தார். எனவே 15 ஜீப் மட்டுமே ஓடுவதாக தெரிவித்தார்.

                             ஒரு ஜீப்க்கு 2000 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். 40 நிமிட பயணத்திற்கு பிறகு எங்களை ஒரு இடத்தில் இறக்கி விட்டு அங்கிருந்து சிறிது தூரத்தில் இடதுபுறம் திரும்பி ஒரு கிலோமீட்டர் நடந்தே செல்லுங்கள்,  வழியில் மூன்று பாலம்  வரும், அந்த பாலங்களை  தாண்டி சென்றால் உங்களுக்கு ஃபால்ஸ் தெரியும் என்று தெரிவித்தார். 

                                   ஆனால் டிரைவர் எங்களுடன் வரவில்லை. நாங்களும் முதலாவதாக சென்றதால் மிகவும் யோசித்து யோசித்து தயங்கி தயங்கி மூன்று பாலங்களையும்  கடந்து சென்றோம் . பாலத்தின் அருகே செல்லும் போது தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. 

                                                       எனது மகன் அங்கே எதிர்த்தார் போல் வந்த ஒரு பெண்மணிக்கு வழி விடுவதற்காக ஒதுங்கியபோது உள்ளே விழுந்து விட்டார். பிறகு அவரை சிரமப்பட்டு தூக்கி அங்கிருந்து பால்ஸ்  நோக்கி நாங்கள் அழைத்து சென்றோம்.நல்ல வேளை எனது மகனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அது ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. 

                                        பால்ஸ்  என்றால்  மிக அருமையான பால்ஸ் .  மிக அதிகமான உச்சியிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. அந்த இடமே சிறிது நேரம் மழை பெய்வது போல் இருக்கின்றது. பிறகு லேசான வெயில் அடிக்கின்றது. அந்த தண்ணீர் குளிர்ச்சியுடன் குளம் போல் அங்கு இருக்கின்றது. அதன் வழியாக கிளம்பி செல்கிறது. 

                                          நாங்கள் அங்கே நன்றாக குளித்துவிட்டு,  எங்களை அனுப்பிய டிரைவர் சரியாக ஒரு மணி நேரம் 40 நிமிஷத்தில் திரும்பி வந்துவிட வேண்டும் என்று தெரிவித்தார். நாங்கள் 11. 40க்கு அங்கே சென்றோம். மீண்டும் ஒன்று பத்துக்கு  எல்லாம் வந்துவிடவேண்டும்.                 

                                 ஒன்று பத்துக்கு மேல் ஆனால் 500 ரூபாய் தரவேண்டும் என்று எங்களிடம் தெரிவித்தார். நாங்களும் 12 மணியிலிருந்து 12 40 வரை நன்றாக குளித்து விட்டு, அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பி 1 மணிக்கு  மீண்டும் வந்து சேர்ந்தோம். 

                                       ஜீப்  டிரைவரிடம் கேட்டோம், நீங்களும் எங்களுடன் வரவேண்டும் தானே ஏன் வரவில்லை?  என்று கேட்டோம். அதற்கு அவர் எங்களிடம் சரியான பதில் கூறவில்லை. அவரிடம்  இது தவறான செயல்  என்று தெரிவித்து விட்டு அவருடன் ஜீப்பில் மீண்டும் ஒன்று முப்பது மணி போல் கிளம்பிய இடத்திற்கு வந்து சேர்ந்தோம். 

                            இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் இந்த அருவியில் பெண்கள் உடை மாற்றுவதற்கு என்று எந்தவிதமான அமைப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது . புலிகள் வசிக்கும் பகுதிக்குள் டிரைவர் வராமல் சென்றது நல்ல செயல் அல்ல என்று பின்னர் தெரிந்து கொண்டோம்.டிரைவர் வந்து இருந்தால் இன்னும் பாதுகாப்பாக இருந்து இருக்கும்.

                             மீண்டும் நாங்கள் மேலே 10 கிலோ மீட்டரில் உள்ள கெம்மனகுண்டி நோக்கி தொடர்ந்து சென்றோம். அங்கே கெம்மன் குண்டா பகுதியில் ரோஜா கார்டன் உள்ளது. 

                                      ரோஜா கார்டனில் விதவிதமான பூக்கள் உள்ளது. நாங்கள் சென்ற நேரம் மதியம் 2 மணி. சாப்பிடவும் இல்லை. அதனால் எங்களுக்கு மிகுந்த அயர்ச்சியாக இருந்தது. அந்த இடத்திற்கு மாலையில் செல்வதுதான் சிறந்தது .

                                     ஏனென்றால் இங்கே பத்ராவதி ஆறு ஓடுவதை இன்னும் மேலே சென்று நடந்து போய் பார்க்கலாம். மேலும் சூரியன்  மறைவதையும்  நாம் காண முடியும். ஆனால் இவையெல்லாம் மதியம் 2 மணிக்கு நாங்கள் சென்றதால் எங்களால் ரசித்து பார்க்க இயலாத சூழ்நிலை இருந்தது.  

                    இருந்த போதிலும்  45 நிமிடம்  வரை அங்கேயே இருந்து விட்டு மீண்டும் கீழே இறங்கி வந்தோம். கீழே இறங்கி வரும் பொழுது மலையில் இருந்து கீழே இறங்கியவுடன் பல்லாவா   என்கிற ஊரில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். 

                                        மாலை மூன்று மணி போல் அங்கே நாங்கள் சாப்பிட்ட பொழுது எங்களுக்கு தட்டு இட்டிலியும், சோறும், உருளைக்கிழங்கும், தயிரும், சாம்பாரும் பரிமாறப்பட்டது.சப்பாத்தியும் எங்களுக்கு கிடைத்தது.

                          அங்கே அந்த உணவை  சாப்பிட்டு விட்டு அங்கிருந்து நாங்கள்  சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள முள்ளங்கிரி பீக் என்கிற பகுதி நோக்கி சென்றோம். காடுகளுக்குள்தான் எங்கள் பயணம் முழுவதும்.

                                       மலைகளின் நடுவே காடுகளின் உள்ளே பயணிப்பது புதிய அனுபவம் ஆகும்.கொண்டை ஊசிகள் வளைவுகளும் இதற்கு செல்லும் வழியில் உள்ளது. முள்ளங்கிரி பீக்  உச்சியில் இருக்கின்றது. மாலை ஐந்து முப்பது மணி போல் சென்றோம். 

                                      பீக் செல்லும் பொழுது ஐந்து கிலோமீட்டருக்கு முன்பாக ஒரு பால்ஸ்  உள்ளது. அந்த பால்ஸ்க்கு  எங்களை  டிரைவர் அழைத்துச் செல்லவில்லை. ஏனெனில் அவர் ஏற்கனவே ஹபி பாலசுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியதால் நாங்கள் சென்றதில் இருந்தே அவருடைய முகம் நிலை மாறிவிட்டது. 

                                              எனவே டிரைவர்  எங்களை அந்த பால்ஸ்   செல்வதற்கு தடுத்து விட்டார். அந்த அருவியும்  நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறங்கி  15 நிமிடங்களுக்கு மேல் ஜீப்பில் ட்ராவல் பண்ணி தான் அந்த பால்ஸ்  சென்று அடையலாம். 

                                      ஆனால் அந்த தகவலை நாங்கள் கேட்டும் அவர் மறுத்துவிட்டு,அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக எங்களை பீக்குக்கு நேராக அழைத்துச் சென்றுவிட்டார். 

                                 ஐந்தரை மணிக்கு நாங்கள் முள்ளங்கிரி பீக்  அடைந்த பொழுது மிகவும் பனி மூட்டமாக இருந்தது. குளிர் என்றால் அப்படி ஒரு குளிர். பல நூறு படிகள் மேல் ஏறினால் கோயில் இருப்பதாகவும், அங்கே உச்சியில் குளிர் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்கள், ஆனால் எங்களால் சில படிகள் மட்டுமே மேலே ஏற முடிந்தது. 

                                           ஏனெனில் பனிமூட்டம் அதிகமானதால் தொடர்ந்து ஏற இயலவில்லை. குளிர் அதிகமாக இருந்தது. காற்றும் அதிகமாக இருந்தது. காற்று அதிக இரைச்சலுடன் அங்கே காணப்பட்டது. அந்த இடத்திலிருந்து நமக்கு பல்வேறு இடங்கள் அருமையாக தெரிந்தது. 

                                             நாங்கள் 45 நிமிடம் அங்கே இருந்துவிட்டு, மாலை  ஆறே கால் மணி போல் அங்கிருந்து கிளம்பினோம். அங்கிருந்து கிளம்பி 115 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஷிமோகாவை  இரவு எட்டரை மணிக்கு அடைந்தோம். 

                                          கெம்மன் கொண்டா பகுதியிலிருந்து முள்ளங்கிரி  செல்லும் பொழுது என் மகனுக்கு வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டது. எனவே அவரால் தொடர்ந்து இந்த பயணத்தில் பங்கேற்க இயலவில்லை. 

                                     தமிழ்நாட்டில் பல மலைகள் நாங்கள் சென்ற பொழுதும் ,வாகன ஓட்டுனர் மிகவும் இயல்பாக பொறுமையாக ஓட்டுவார்கள். ஆனால் கர்நாடகாவில் வாடகைக்கு எடுத்த கார் ஓட்டுனர் மிகவும் வேகமாக, திருப்பங்களில் மிக வேகமாகவும் , அனைத்து இடங்களில் மலை  பகுதியாக இருப்பதால் அவர்களுக்கு அது பழகியதால் வேகமாக செல்வதால் எனது மகனால் தொடர்ந்து அமர்ந்து இருக்க இயலவில்லை. 

                                            வெளி இடங்களுக்கு வர இயலாமல் காரின் உள்ளேயே படுத்து கிடந்தார். எனவே கர்நாடகா செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். 

                                              

                                                 முள்ளங்கிரியில்  இருந்து  இறங்கி வரும் பொழுது வழியில் ஒரு வித்தியாசமான காயை பார்த்தோம். அது பச்சைக் கலரில் இருந்தது . 

                                   உடனடியாக வாகனத்தை நிறுத்தி அந்த பச்சைக்காய் என்ன என்று கேட்டோம். அதற்கு செக்கொத்தா பழம் என்று கூறினார்கள். உள்ளே சிகப்பாக இருந்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்று எங்களது வாகன டிரைவர் கூறினார். 

                                               உடனடியாக நாங்கள்  அந்த பழத்தில் இரண்டை வாங்குகிறோம். வீட்டின் முன்பாக அந்த பழத்தை வைத்து விற்கும் ஒரு அம்மா,  எங்களிடம் பேசும் பொழுது சிகப்பாக இருக்கும் பழம் 50 ரூபாய் என்றும், சாதாரணமாக ஓரளவு சிகப்பாக உள்ளே இருக்கும் பழம் இரண்டு 70 ரூபாய் என்றும் தெரிவித்தார். 

                                          எங்களது டிரைவரோ ஒரு பழத்தை நறுக்கி காண்பியுங்கள் என்று கேட்டார். அந்த அம்மாவும் உடனடியாக கத்தி கொண்டு வந்து நறுக்கி காண்பித்தார்கள். உள்ளே நன்றாக சிகப்பாக இருந்தது. 

                                         அதனை அறுத்துப் பார்த்தால் சாத்துக்குடி போன்று பழம் சின்னதாக இருந்தது. இந்த பழம்  நன்றாக சிவப்பாக இருந்தது. சாப்பிடுவதற்கும் புளிப்புச் சுவையுடன் மிளகாயை தொட்டு சாப்பிடும் பொழுது நன்றாக இருந்தது. 

                                 அந்த பழத்தில் இரண்டை வாங்கி கொண்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். வழியில் டிப்பூர் என்கிற ஊரில் வாழைப்பழம், மாம்பழம், திராட்சை பழம் என்று அனைத்து விதமான பழங்களும்  சரியான விலையில் எங்களுக்கு கிடைத்தது. 

                                              பழங்களை  வாங்கிக் கொண்டு,  பிறகு எங்களது உறவினரின் வீட்டிற்கு செல்வதற்காக ஷிமோகாவில் உள்ள வெங்கடேஸ்வரா ஸ்வீட் ஸ்டாலுக்கு சென்றோம். இந்தக் கடையில்தான் ஸ்வீட்கள் நன்றாக கிடைக்கும் என்று எங்களது வாகனத்தின் டிரைவர் கூறினார். அந்த அடிப்படையில் அங்கே சென்று ஸ்வீட்டும் வாங்கி வந்தோம்.

                      இரவு உணவை ஜிவெல் ராக் ஹோட்டலின்  அருகே உள்ள சுபம் ஹோட்டலில் சாப்பிட்டோம். செட் தோசை என ஒரு ஆர்டர் கொடுத்தோம். 

                                     செட் தோசை என்றால் இரண்டு கல் தோசைகள் கொண்டு வந்து கொடுத்தார்கள். எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. தோசையும், சப்பாத்தியும், பூரியும் மற்ற உணவுகளும் அந்த கடையில் நல்ல முறையில் கிடைத்தது. உணவும் நன்றாக இருந்தது.

                                       இடையில் முள்ளங்கிரி பீக்கில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சிக்மாகுளூர் உள்ளது.அங்கு தங்கி இருந்தால் அடுத்த நாள் சிருங்கேரி செல்ல மிக எளிதாக இருந்திருக்கும் என்பது எங்களுக்கு பிறகுதான் தெரிந்தது.அதனால் முள்ளங்கிரி சென்றால் சிக்மாகுளூரில் தங்கி கொள்ளலாம்.

                            
                    மீண்டும் இரவு ஷிமோகா வந்து திரு.அண்ணாமலை அண்ணன் அவர்களை சந்தித்து அடுத்த நாள் பயணத்திட்டம் குறித்து கேட்டோம். அவர்களும் அடுத்த நாள், அதற்கடுத்த நாளும் பயணத்திட்டத்தை இரவு பத்தரை மணிக்கு தருவதாக தெரிவித்தார்.

                        இந்த டிரைவரை மாற்றி விடுங்கள் என்று கேட்டுக்கொண்டோம், அவரும் சரி என்று தெரிவித்தார், ஆனால் டிரைவர் மாறினாரா என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் ,சுற்றுலா தொடரும்,இன்று ஒருநாள் முழுவதும் நாங்கள் பயணம் செய்த மொத்த பயண தூரம் 272 கிலோமீட்டர் ஆகும்.

                              இந்த பயணத்தில் எங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு தொடர்ந்து போன் செய்யும்போதெல்லாம் தெளிவாக தகவலை தெரிவித்து உதவிய அண்ணன் திரு.அண்ணாமலை அவர்களுக்கு நன்றிகள் பல.

 

 

 

 

No comments:

Post a Comment