Saturday 23 April 2022

உலக புத்தக தினம் : வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா 

  முதல் தலைமுறையாக மாணவர்களுக்கு பொது நூலகம் அறிமுகம் செய்தல் 

 






 

தேவகோட்டை - உலக புத்தக தினத்தினை முன்னிட்டு, நூலகத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
                சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உலக புத்தக தினத்தினை முன்னிட்டு தேவகோட்டை கிளை நூலகத்தை பார்வையிட்டு அங்கு நடைபெற்ற ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்றனர். நூலக பணியாளர் சுரேஷ் வரவேற்றார்.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் கலா தலைமை தாங்கினார்.  பேச்சு போட்டியில் முதலிடம்,இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்து  வெற்றி பெற்ற மாணவர்கள் முறையே நதியா, ஆகாஷ், நந்தனா ஆகியோருக்கும், ஓவிய போட்டிகளில் முதலிடம்,இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்து  வெற்றி பெற்ற மாணவர்கள் முறையே புகழேந்தி,ஸ்வேதா,கனிகா ஆகியோருக்கும் தேவகோட்டை கிளை நூலகர் ஜோதி மணி பரிசுகளை வழங்கினார்.அவர் பேசுகையில் ,உலக புத்தக தினம் என்பது பொதுமக்களிடத்தில் புத்தகத்தின் தேவையை எடுத்துச் சொல்வதற்கும், மாணவர்களுக்கு புத்தகம்  ஓர் அறிவுக் களஞ்சியம் என்பதை உணர்த்தவும், அறிவுத்திறனை மேம்படுத்தவும் நடத்தப்படுகிறது. நூலகத்தில், அனைவரையும் உறுப்பினராகவும், புரவலராகவும் தங்களை இணைத்துக் கொள்வதற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இந்த உலக புத்தகதினத்தில்    அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். என்று பேசினார்.10க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர். இவ்விழாவில் நூலக அலுவலர் மீனாள், வாசகர் மல்லிகா உட்பட ஏராளமான வாசகரகள் கலந்துகொண்டனர். மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள் , கருப்பையா ஆகியோர் செய்து இருந்தனர்.

 

படவிளக்கம் : உலக புத்தக தினத்தினை முன்னிட்டு, தேவகோட்டை கிளை நூலகத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு   நூலகர் ஜோதிமணி பரிசுகளை வழங்கினார்.

 

வீடியோ :

 https://www.youtube.com/watch?v=YiZetVqbnvk

  https://www.youtube.com/watch?v=io67KLnY4Eg

 https://www.youtube.com/watch?v=CC5wSzdGjCg

 

 

 

No comments:

Post a Comment