Friday 29 April 2022

மாவட்ட ஆட்சியர் கையால் பரிசு பெற்ற பள்ளி மாணவி 

ரூபாய் 2000ம் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்று நடுநிலைப் பள்ளி மாணவி சாதனை 

அண்ணல்  அம்பேத்கார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் வெற்றி பெற்று அசத்திய மாணவி 

 







தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கையால் பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெற்றார்.

                                                 தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் இப்பள்ளி மாணவி பி.நதியா மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்து வெற்றி பெற்றார்.மாணவிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி ரூபாய் 2000 பரிசுக்கான காசோலையும் ,பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் நாகராஜன் உடன் இருந்தார்.மாவட்ட அளவில் உயர்நிலை,மேல்நிலை,நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என 51 பேர் பங்கேற்ற இப்போட்டியில் இப்பள்ளி மாணவி பி.நதியா வெற்றி பெற்று மூன்றாம் பரிசினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பரிசு பெற்ற மாணவியை பள்ளி செயலர் அரு .சோமசுந்தரம், தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர்கள் லெட்சுமி தேவி,மாலதி,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.இம்மாணவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களால்  பாராட்டு கடிதம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவி பி.நதியா தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி  ரூபாய் 2000 பரிசும்,பாராட்டு சான்றிதழும் வழங்கினார் .சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் நாகராஜன் உடன் இருந்தார்.

 

வீடியோ :

 https://www.youtube.com/watch?v=9L2xgAkt_Ac

 

No comments:

Post a Comment