Tuesday 19 April 2022

 பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு  - மொபைல் வாகனத்தில்  படங்கள் காண்பித்து  விளக்கிய சார்பு ஆய்வாளர்

யாராக இருந்தாலும் குழந்தைகளாகிய உங்களை தவறான இடங்களில் தொட்டாலோ ,கிள்ளினாலோ 1098 யை அழையுங்கள்

 பெண்கள் முக்கியமாக அறிந்திருக்க வேண்டிய எண்கள் 1098,1091,181

 






 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்   பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

                                            தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் நிலையம் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் போதும்பெண் ,  குழந்தைகள் நல பணியாளர் ஜூலி , தலைமை காவலர் செல்வராணி ஆகியோர் கலந்து கொண்டு, குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பெண் குழந்தைகள் எவ்வாறெல்லாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும், குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளக்கி கூறி  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மொபைல் வாகனம் மூலமாக வீடியோவாக படங்கள் காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.குடும்பத்தில் யாரேனும் பிரச்சினை செய்தாலும்  1098,181,1091 ஆகிய எண்களில் அழைக்கலாம் என்றும், சிறு குழந்தைகளாகிய உங்களை யார் தொட்டாலும்,கிள்ளினாலும் ,அருகில் வந்தாலும் என்னை தொடாதீர்கள் என்று தைரியமாக  கூறுங்கள் என்று போலீஸார் அறிவுரை வழங்கினார்கள். ஆசிரியை  செல்வமீனாள் நன்றி கூறினார்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்   பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் போதும்பெண் ,  குழந்தைகள் நல பணியாளர் ஜூலி , தலைமை காவலர் செல்வராணி ஆகியோர் பங்கேற்றனர்.

 

வீடியோ : 

https://www.youtube.com/watch?v=x6aIlHzihsA

https://www.youtube.com/watch?v=RB9_LkruFrI


 


No comments:

Post a Comment