Friday 4 February 2022

தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்

தொழுநோயை தடுக்க சத்துள்ள காய்கறி,கீரைகளை சாப்பிடுங்கள் 

  தொழுநோய் மேற்பார்வையாளர் அறிவுரை 

குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கே தொழுநோய் வரும் வாய்ப்பு 

தொழு நோய் உள்ளவர்களை தொடுவதால் தொழுநோய் பரவாது 





 

 

 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கு தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு  நடைபெற்றது.
                                                        ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . கண்ணங்குடி  ஒன்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலையை மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் வெங்கட சுப்ரமணியன்   ,டேமியன் பவுண்டேஷன் இந்தியா டிரஸ்டின் மதுரை  மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் பால் துரை ராஜ் ஆகியோர்  மாணவ,மாணவிகளை முற்றிலுமாக பரிசோதனை செய்து மாணவ,மாணவியரிடம் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.    இது முற்றிலும் குணப்படுத்த   கூடிய நோய தான். இந்நோயை தடுக்க இளம் வயது முதலே சத்தான காய்கறிகள் ,கீரைகளை சாப்பிட வேண்டும். இளம் மாணவர்களாகிய நீங்கள் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வை உங்களை சுற்றி உள்ள அனைவரிடமும் சொல்லி இந்நோய் பரவமால் தடுக்க முயற்சி எடுங்கள் என பேசினார்கள் .தொழுநோய் தொடர்பான உறுதிமொழி அனைவரும் எடுத்துக்கொண்டனர். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்   நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் தொழு நோய் கண்டுபிடித்தல் மற்றும் விழிப்புணர்வு முகாமில் கண்ணங்குடி  ஒன்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலையை மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் வெங்கட சுப்ரமணியன்   ,டேமியன் பவுண்டேஷன் இந்தியா டிரஸ்டின் மதுரை  மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் பால் துரை ராஜ் ஆகியோர் மாணவர்களை பரிசோதனை செய்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

வீடியோ 

 https://www.youtube.com/watch?v=5y642MCwyFA

 https://www.youtube.com/watch?v=Wzckgnv2mWg

 https://www.youtube.com/watch?v=1RWBp3rfCvg

 

 

 

 

No comments:

Post a Comment