Tuesday 8 February 2022

 செஸ் விளையாட்டில் காயின்களுக்கு புள்ளிகள் எத்துணை ? 

குவைத் சதுரங்க  பயிற்சியாளர் நேரடி விளக்கம் 





 

தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க பயிற்சி அறிமுகம் நடைபெற்றது.ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பயிற்சியில் அறிமுக உரையாற்றிய குவைத் நாட்டில் செஸ் பயிற்சியாளராக இருக்கும் வள்ளி சரண் பள்ளி மாணவர்களிடம் பேசும்போது , ஆரம்ப காலங்களில் செஸ் விளையாட எனக்கு தகுதி இல்லை என்று ஒதுக்கி வைத்து விட்டார்கள்.பிறகு நானாக பல்வேறு முயற்சிகள் எடுத்து,செஸ் விளையாட்டை கற்று கொண்டு இன்று சர்வேதச பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறேன் என்றார். சதுரங்கத்தில் உள்ள பல்வேறு காயின்கள் தொடர்பாகவும், அவற்றின் புள்ளிகள் குறித்தும் பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்.மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க பயிற்சி அறிமுகம் நடைபெற்றது.குவைத் நாட்டில் செஸ் பயிற்சியாளராக இருக்கும் வள்ளி சரண் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கம் தொடர்பான பல்வேறு நுணுக்கங்களை விளக்கினார்.

 

 

வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=r0NkhTYrdbo&t=47s

 https://www.youtube.com/watch?v=7yFiHM3y-Kc

 https://www.youtube.com/watch?v=8aZ6P0q8MYA

 

 

 

 

No comments:

Post a Comment