Sunday 13 February 2022

 விண்ணில் சீறி பாய்ந்த பி.எஸ்.எல்.வி.-சி 52 ராக்கெட் வெற்றிக்கு 
பள்ளி மாணவர்கள் பாராட்டு


 

 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பி.எஸ்.எல்.வி.-சி 52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
                                                 பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி இன்று  பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது .     இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான முதல் ராக்கெட் இன்று ஏவப்பட்டது .     இந்த ராக்கெட்டில், 1,710 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.-04 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொறுத்தப்படுகிறது. இது பூமியிலிருந்து 529 கி.மீ. தூரத்தில் சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப்பாதையில் சுற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

                                        விவசாயம், வனம் மற்றும் தோட்டங்கள், மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீரியல் மற்றும் வரைப்படங்கள் போன்ற பயன்பாடுகளுக்கு  உதவும் என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பி.எஸ்.எல்.வி.-சி 52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு   வண்ண பலூன் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்

 வீடியோ : 

 https://www.youtube.com/watch?v=sZH0rdYZUiw

 

 

 

 .

No comments:

Post a Comment