Sunday 30 January 2022

 தேவகோட்டை பள்ளியில் சத்துணவு மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள்,விலையில்லா முட்டை வழங்கல்

 ஒவ்வொரு மாணவருக்கும்  ஐந்து  முட்டைகள் நேரடியாக சத்துணவு மையங்களில் வினியோகிக்கப்பட்டது

 




தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருள்கள்,முட்டைகள்  வழங்கப்பட்டது.
                               கொரோனா தொற்று பரவலால்  பள்ளிகள் திறக்காத நிலையில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருள்களை பள்ளிகளின் மூலம் நேரடியாக  வினியோகிக்கபட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு முட்டைகள் மற்றும் உலர் உணவு பொருள்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,கருப்பையா , சத்துணவு அமைப்பாளர் பரமேஸ்வரி , சமையலர் தமிழரசி   ஆகியோர் செய்து இருந்தனர்.சரியான நேரத்தில் இந்த பொருள்கள் தங்களுக்கு உதவியாக இருந்ததாக மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

ட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு முட்டைகள் மற்றும் உலர் உணவு பொருள்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் வழங்கினார்இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர்,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி,கருப்பையா  ,சத்துணவு அமைப்பாளர் பரமேஸ்வரி ,சமையலர் தமிழரசி  ஆகியோர் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment