Tuesday 22 February 2022

 இனிய திருமண நல் வாழ்த்துக்கள் 

       










🛑🔴திரு செ.ராஜேந்திரன் ஐஏஎஸ் அவர்களின் புதல்வன் சரண் அவர்களுக்கும், கோபுரம் சினிமாஸ் - திரைப்பட தயாரிப்பாளர் திரு. ஜி. என். அன்புச்செழியன் அவர்களின் மகள் சுஷ்மிதா ஆகியோருக்கும் நடைபெற்ற திருமண நிகழ்வில் சென்னையில்  பங்கேற்ற மகிழ்வான தருணம். சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் பள்ளிக்கு மாணவர்களுடன் கலந்துரையாட வருகை தந்த திரு ராஜேந்திரன் ஐஏஎஸ் அவர்கள் பணி ஓய்வுக்குப் பிறகும் ஏழு ஆண்டுகள் கடந்தும் எனக்கு கடந்த வாரத்தில் தொலைபேசி மூலம் மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து பத்திரிக்கையும் எனது முகவரிக்கு அனுப்பி இருந்தார்கள் .அதன் தொடர்ச்சியாக அவர்களது திருமண நிகழ்வில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.  வாழ்த்துக்களுடன். 

லெ.சொக்கலிங்கம், 

தலைமையாசிரியர், 

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை. 

சிவகங்கை மாவட்டம்

 

 

No comments:

Post a Comment