Friday 28 January 2022

  மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் 

மொபைல் போன் இல்லாத மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கல்வி வழங்கிய ஆசிரியர்கள் 















தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மொபைல் போன் இல்லாத பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி கல்வி கற்பதற்கு ஆர்வமூட்டினார்கள்.

                                                   கொரனோ காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் , பள்ளி விடுமுறை நாள்களில் மொபைல் போன் உள்ள மாணவர்களுக்கு கூகிள் மீட் வழியாக பாடம் நடத்தினார்கள்.மொபைல் போன் இல்லாத மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமூட்ட இப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தினார்கள். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்திவருவது மாணவர்களின் பெற்றோர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

                                                     இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுகையில், " கொரோனா காலத்தால் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் சுமாராக  உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்தால் மட்டுமே அவர்களுக்கான எழுத்துப் பயிற்சி,  வாசித்தல் பயிற்சி தொடர்ச்சியாக கிடைக்கும். மொபைல் போன் உள்ள மாணவர்களுக்கு ஏதோ ஒரு அளவில் சொல்லிக்கொடுக்க முடிந்தது. எனவே மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி கற்பது பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாங்களே அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பாடம் நடத்தினோம் .. மேலும் தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி வழியாகவும் தினமும் படம் எடுத்து வருகிறது. 

                                அதை நினைவுபடுத்தும் வகையில் மாணவர்களின் வீடுகளில் உள்ள தொலைக்காட்சிக்கு அருகில் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்கள் மற்றும் அவற்றிற்கான நேரங்கள் குறித்த அட்டவணையை ஒட்டி வருகிறோம். இதன் மூலம் மாணவர்களின் பெற்றோர்கள் உரிய நேரத்தில் மாணவர்களை கல்வி தொலைக்காட்சியை பார்க்க வைக்கிறார்கள். மேலும் எங்களது ஆசிரியர்கள் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலமும் மாணவர்களை கல்வி கற்க வைத்து வருகிறார்கள்.  பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பே நாங்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தி வருவதற்கு சாத்தியமாக திகழ்கிறது"என்றார்.

 

 பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மொபைல் போன் இல்லாத பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி கல்வி கற்பதற்கு ஆர்வமூட்டினார்கள்.

 




No comments:

Post a Comment