Tuesday 25 January 2022

 குடியரசு தின விழா

 
குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கி கொண்டாடுதல்

 

  கொரோனா நேரத்தில் அரசு மருத்துவமனை செவியலியரின் சேவையை பாராட்டி பள்ளி குடியரசு தின விழாவில் கொடியேற்ற செய்து பெருமைபடுத்திய பள்ளி

 






தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது.


                  ஆசிரியர் செல்வமீனாள்  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன் களப்பணியாளராக பணியாற்றும் அரசு மருத்துவமனை செவிலியர்களை பாராட்டும் விதமாக குடியரசு தின கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. காரைக்குடி  அரசு மருத்துவமனை முதுநிலை செவிலியர் ராமலெட்சுமி   கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில்,  கொரோனா நல்ல முறையில் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.முகமூடி கட்டாயம் அணியுங்கள்.கொரோனா காரணமாக மாணவர்கள் இல்லாமல் இந்த நிகழ்வு நடைபெறுவது எனக்கு வருத்தமாக உள்ளது.விரைவில் நல்ல முறையில் கொரோனா தொற்று மாறி மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என நம்பிக்கை உள்ளது. இன்று இந்த பள்ளியில் தேசிய கொடி ஏற்றியது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது என அரசு செவிலியர்  பேசினார். ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு
வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கும், சுதந்திர தின விழா,குடியரசு தின விழா என அனைத்து விழாவிற்கும்  சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.ஆசிரியை முத்துலெட்சுமி   நன்றி கூறினார்.ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,கருப்பையா நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு  தின விழாவில் காரைக்குடி  அரசு மருத்துவமனை முதுநிலை செவிலியர் ராமலெட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொடி ஏற்றி பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்  சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.

 

வீடியோ 

https://www.youtube.com/watch?v=vKPvTzwa_Qw


No comments:

Post a Comment