Sunday 23 January 2022

 கூகுள் மீட்டு மூலமாக பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 

 மூன்றாம் வகுப்பு உட்பட இளம் வயது மாணவர்கள்  இணையம் வழியாக ஆர்வத்துடன் பாடம் கற்றல் 

 

 













தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கூகுள் மீட் மூலமாக இணைய வழிக் கல்வி துவக்கப்பட்டது.

                   பள்ளி திறப்பதற்கு  முன்பாக இப் பள்ளி ஆசிரியர்களுக்கு கூகுள் மீட்டு வழியாக பாடம் நடத்துவது எப்படி என்பதை பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் விரிவாக விளக்கினார். அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று கூகுள் மீட் ஆப் ஓபன் செய்வது தொடர்பாக விளக்கங்கள் கொடுத்து, அதனை ஓபன் செய்து கொடுத்தார்கள். அதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு கூகுள் மீட் மூலமாக நேரடி ஆன்லைன் கல்வி வழங்கப்பட்டது. மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர். ஆசிரியர்கள்  முத்துலட்சுமி, செல்வ மீனாள்,  ஸ்ரீதர் ஆகியோர் இணையம் வழியாக கூகுள் மீட்டுக்கொண்டு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தினார்கள். பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கூகுள் மீட் வழியாக பாடம் நடத்துவதை பாராட்டினார்கள். தொடர்ச்சியாக மாணவர்களுக்கு கூகுள் மீட் வழியாக பாட ஒப்படைப்புகள் வழங்கப்பட்டு வாட்ஸ்அப் குழுக்கள்  வழியாக திருத்தி கொடுக்கப்படுகின்றது.

          இப்பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதால் ஒரு சிலரிடம் மட்டுமே ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ளது. அவ்வாறு ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ள ஒரு சில மாணவர்களையும் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கும் கூகுள் மிட்டை டவுன்லோட் செய்து அதன் வழியாக பாடங்கள் கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு சில மாணவர்கள் இணையம்  வழியாக இணைந்தாலும் இன்னும் சில மாணவர்கள் விரைவில் இணைய உள்ளார்கள் . ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாத மாணவர்களுக்கு தொலைபேசி வழியாகவும்,நேரிலும் ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு பெற்றோர்களின் மூலம் பாட ஒப்படைப்புகளை பள்ளிக்கே கொண்டு வர செய்து வீட்டு பாட நோட்டுக்களை திருத்தி கொடுத்து வருகின்றனர். 

 

படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கூகுள் மீட்டு வழியாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறார்கள். மாணவர்கள் ஆர்வமுடன் கூகுள் மீட் வழியாக பங்கேற்று பாட ஒப்படைப்பு களை வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வருகிறார்கள். பொதுமக்கள் இதற்கு பெரிதும் பாராட்டு தெரிவித்து உள்ளார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கூகுள் மீட்டு வழியாக படிப்பதை ஆர்வமுடன் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

 

No comments:

Post a Comment