Saturday 25 December 2021

 

 போக்ஸோ விழிப்புணர்வு 

 பாலியல் தொல்லை தருபவர்களை  எதிர்த்து நில்லுங்கள்

 அனைவரிடமும் இரண்டு அடி தள்ளி நின்றே  பேசுங்கள்

 சப் இன்ஸ்பெக்டர் அறிவுரை 

 






தேவகோட்டை :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ‘போக்சோ’ சட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

போக்சோ சட்டம் :

                  ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார். போக்சோ சட்டம் குறித்து தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் போது மணி   பேசுகையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் தான் போக்சோ சட்டம். 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். 

 பாலியல் தொந்தரவுகள் :

                                      பாலியல் தொடுதல், பாலியல் சீண்டல்கள் கொடுப்பவர்களை எதிர்த்து நில்லுங்கள். துணிந்து விரட்டுங்கள். விழிப்புணர்வுடன் இருந்து உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் உள்ளவர்களுடன் கவனமாக இருங்கள். அவர்களால் உங்களுக்கு சில நேரங்களில், சில நபர்களால் பாலியல் தொந்தரவுகள் ஏற்படலாம். எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் அவர்கள் கொடுக்கும் உணவுகளை அப்பா அம்மாவின் அனுமதி இல்லாமல் சாப்பிட வேண்டாம் . சில நேரங்களில் சில நபர்கள் மயக்க மருந்துகளை தடவி கொடுக்கலாம். 

இரண்டு அடி தள்ளி நில்லுங்கள் :

                          ஆசை வார்த்தை கூறி பேசுபவர்களையோ, தொடுபவர்களையோ  அருகில் நெருங்க விடாதீர்கள். அனைவரிடமும் இரண்டு அடி தள்ளி நின்றே  பேசுங்கள். நெருங்கிய நண்பர்கள் அழைக்கும் விருந்துக்கு தனியாக  செல்ல வேண்டாம். 

ஹெல்மட் அணிந்து வண்டி ஓட்ட சொலுங்கள் :

                         18 வயது ஆனபிறகு வாகனம் ஓட்ட லைசென்ஸ் எடுத்து வாகனம் ஓட்டுங்கள். அதற்கு முன்பாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள். ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்ட வேண்டாம். ஹெல்மெட் அணிந்துதான் வண்டி ஓட்ட வேண்டும் என்று உங்களது பெற்றோர்களிடமும் வலியுறுத்துங்கள். 

காவலன் ஆப் பயன்படுத்துங்கள் :

                    காவலன் ஆப்பை  உங்கள் மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் தனியாக செல்லும் பொழுது ஏதேனும் உதவி தேவைப்பட்டால் காவலன் எஸ் ஓ எஸ் ஆப் மூலமாக போலீசாரை தொடர்பு கொண்டால் உடனடியாக உங்களுக்கு காவல் உதவி கிடைக்கும். 

பேருந்துகளில் ஏற்படும் பாலியல் தொல்லைகளை எதிர்த்து நில்லுங்கள் :

                                 செல்போனை கவனமாக பயன்படுத்துங்கள்.தேவையில்லாத நோட்டிபிகேஷனை தொடாதீர்கள்.அவைகள் உங்களுக்கு தொல்லை தரும்.பேருந்துகளில் தவறாக தொடுபவர்களை கவனமுடன் இருந்து எதிர்த்து போராடுங்கள். தவறான பாலியல் தொல்லை வரும்போது தயங்காமல் காவல் துறையை தொடர்பு கொள்ளுங்கள் .என்றார் .நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றியுரை கூறினார்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ‘போக்சோ’ சட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.போக்சோ சட்டம் குறித்து தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் போது மணி பள்ளி மாணவர்களுக்கு விளக்கினார்.

 

வீடியோ :   

 https://www.youtube.com/watch?v=2NVpFjAR_f0

 https://www.youtube.com/watch?v=sMp-uGQA1jw

 https://www.youtube.com/watch?v=UCT24lzRCgs&t=1s


 

 

1 comment: