Friday 3 December 2021

எய்ட்ஸ் விழிப்புணர்வு

நான்கு வழிகளில் எய்ட்ஸ் பரவும் 

 ஆற்றுப்படுத்தனர் தகவல்







தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எயிட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார். தேவகோட்டை  அரசு மருத்துவமனை எய்ட்ஸ் ஆலோசகர் தெரசா  எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு  பேசுகையில்,சுத்திகரிக்கப்படாத ஊசி வழியாகவும்,பரிசோதிக்கப்படாத ரத்தம்,பாதுகாப்பில்லாத உடலுறுவு,எய்ட்ஸ் உள்ள கர்ப்பிணிகளின் மூலம் குழந்தைகளுக்கு பரவுதல் என நான்கு வழிகளில் எய்ட்ஸ் பரவலாம்.கை கொடுப்பதாலோ,இருமுவதாலோ, துணி உடுத்துதல்,சாப்பிடும் தட்டு வழியாகவோ பரவாது. அரசு மருத்துவமனையில் ஆற்றுப்படுத்துனர் என்கிற வகையில் எங்களால் முடிந்த அனைத்து விதமான மன நல பிரச்சனைகளுக்கும் மாணவர்களுக்கு நாங்கள் தீர்வு சொல்கிறோம்.மாணவர்களின் மனநல பிரச்சினைகளுக்கு எங்களை நேரிலும்,தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.தொடர்பு எண் : 9159045069. என்று கூறினார்.ஆசிரியர் ஸ்ரீதர்  நன்றி கூறினார்.மாணவர்கள் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.

படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எயிட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது..பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை வகித்தார். தேவகோட்டை  அரசு மருத்துவமனை எய்ட்ஸ் ஆலோசகர் தெரசா  எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு குறித்து பேசினார்.

 

வீடியோ 

 https://www.youtube.com/watch?v=jzZ0JPX7bpQ

No comments:

Post a Comment