Tuesday 6 April 2021

 தாமதமான தொடர்புக்கு நஷ்ட ஈடு வழங்கிய  நிறுவனம் 


 

                       நண்பர்களே சில நாட்களுக்கு முன்பாக தனியார் நிறுவனத்தின் டி டூ  ஹச் சாதனத்தை ரீ  லொக்கேஷன்  செய்வதற்காக தனியார் நிறுவனத்தின் டோல் பிரீ எண்ணில் அழைத்து தகவல்  தெரிவித்தேன். அப்பொழுது அவர்கள் உங்களது கணக்கில் பணம் இல்லாத காரணத்தினால் பணத்தை செலுத்தி  ரீசார்ஜ் செய்தால் தான் வேண்டுகோள் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்கள்.  மதியம் 2 மணி அளவில் அவர்கள் எனக்கு ரீசார்ஜ் செய்யுமாறு கூறினார்கள். இரண்டரை மணிக்கெல்லாம் ரீசார்ஜ் செய்து விட்டு மீண்டும் எனது கோரிக்கையை பதிவு செய்தேன். மதியம் 2.50 மணி போல் அவர்களது காரைக்குடி நிறுவனத்திலிருந்து என்னை அழைத்து ஒரு மணி நேரத்தில் வந்து ரீ  லோக்கேஷன் செய்து தருவதாக என்னிடம் கூறினார்கள். ஆனால் 3 மணி, 4 மணி, 5 மணி, 6 மணி என மனிதான் சென்று கொண்டே போனது .அவர்களிடமிருந்து எனக்கு எந்த அழைப்பும் இல்லை. மீண்டும் மாலை 6 15 மணி அளவில் தனியார்  நிறுவனத்தின் இலவச டோல் ஃப்ரீ எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் .அப்போது முதலில் பேசியவரிடம் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், தேவையில்லாத நேர விரையத்திற்கும்  என்ன காரணம் என்று கேட்டேன்.அவரால் எனது கேள்விக்கான பதில் கொடுக்க முடியவில்லை. எனவே நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எனது காலை கால் டிரான்ஸ்பர் செய்து அவரது சூப்பர்வைசர் வசம் கொடுத்தார். சூப்பர்வைசர் அவர்களாலும் எனது கேள்விக்கு சரியான பதில் சொல்ல இயலவில்லை. மீண்டும் எனது காலை கால் டிரான்ஸ்பர் செய்து மேனேஜர் அவர்களுக்கு கொடுத்தார்கள். அவரும் எனது தகவலை முழுவதுமாக உள்வாங்கி கொண்டு மாலை 7 மணிக்குள் உங்களுக்கு கனெக்சன் ரீ லோகேஷன் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.  எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், நேர விரையத்திற்கும் உரிய நஷ்டஈடு வழங்கப்படும் என்றும் என்னிடம் தெரிவித்தார். மேனேஜர் என்னிடம் கூறியவாறு மாலை ஏழு மணிக்கெல்லாம் தனியார் நிறுவனத்தின் அலுவலர் எங்களது இடத்திற்கு வந்து ரீ லோகேஷன் கனெக்சன் வழங்கினார்.அதற்கு உரிய தொகை 300 ரூபாயை ஆன்லைனிலேயே என்னை கட்ட சொல்லிவிட்டார்கள். வந்தவர் என்னிடம் எந்த விதமான பணமும் பெறவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

                                    நேரம் தாமதமானதற்கு உரிய நஷ்ட ஈடு தொடர்பாக எனக்கு எந்த தகவலும் இல்லை.மீண்டும் மறுநாள் காலை தனியார் நிறுவனத்தின் டோல் பிரீ எண்ணை அழைத்துப் பேசினேன். அப்பொழுது அவர்கள் மாலை 6 மணிக்குள் முடிவு சொல்வதாக தெரிவித்தார்கள். நான் அவர்களிடம் பேசும்போது, ஒரு பொழுது போக்கிற்காக வாங்கப்பட்டுள்ள சாதனம் தொடர்பாக இதே வேலையாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால் எனது பணி என்ன ஆவது? எனக்கு நிறைய மன உளைச்சல் ஏற்படுவதை தெரிவித்தேன். தொடர்ந்து இதுபோன்று தங்களது நிறுவனம் செயல்பட்டால்  நுகர்வோர் அமைப்பை நாட உள்ளதாகவும் தெரிவித்தேன். அதன் தொடர்ச்சியாக அன்று மாலை 6 மணி அளவில் என்னிடம் பேசினார்கள். மீண்டும் மறு நாள் காலை என்னிடம்  பேசி 16 ரூபாய் (அதாவது இரண்டு நாட்களுக்கான நேரத்தை எனக்கு கூட்டிக் கொடுத்து உள்ளனர்) எனது கணக்கில் வரவு வைத்துள்ளனர்.  சாதாரணமாக  ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்று நினைக்காமல் வாடிக்கையாளராக நம்முடைய உரிமையை நாம் கேட்கும் பொழுது நிச்சயமாக அதற்குரிய பதிலை அந்த நிறுவனம் வழங்கிய ஆக வேண்டும். அதன் அடிப்படையில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தொடர் முயற்சியின் காரணமாக இரண்டு நாட்களுக்கான  கூடுதல் நேரத்தை நஷ்ட ஈடாக பெற்றுள்ளேன் என்பதை இங்கே பதிவு செய்து கொள்கின்றேன். தொடர் முயற்சி வெற்றி தரும். பல்வேறு நிறுவனங்களிடம் இதுபோன்று தொடர்ந்து முயற்சி செய்து அவர்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களது தவறுகளின் மூலமாக நமக்கு உண்டான நஷ்டயீடு பெறுவதற்கு அனைவரும் முயல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 

லெ .சொக்கலிங்கம்,

 காரைக்குடி.

 

 

 

 

 

No comments:

Post a Comment