Tuesday 13 April 2021

 

நிழல் இல்லாத நாள் பார்ப்பது எப்படி ?



தேவகோட்டை, காரைக்குடியில் எப்போது ?

சிவகங்கை மாவட்டத்தில் நாளை நாம் திறந்த வெளியில் நின்றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரியும், பக்கத்தில் நிழலாக தெரியாது என அறிவியல் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். நாளை நிழல் இல்லா நாள் . ‘‘பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இரண்டு முறை வரும். அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும். சூரியனின் வீழ்ச்சி அட்ச ரேகைக்கு சமமாக மாறும் போது பூஜ்ஜிய நிழல் நிகழ்ச்சி நடக்கிறது. சூரிய கதிர்கள் தரையில் உள்ள பொருட்களில் செங்குத்தாக விழும் இந்நிகழ்வால் நிழல் பக்கத்தில் தெரியாது. நமது காலடியில் கீழே தெரியும். இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் இம் மாதம்  நாளை ஏப்ரல் 15ம் தேதி தேவகோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளில் 12 மணி 15 நிமிடங்களில் நாம் நின்றால் சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரியும் பக்கத்தில் நிழலாக தெரியாது’’

மிக எளிதாக செய்து  பார்ப்பது எப்படி ?


நிழல் மறைவதைப் பார்ப்பது மிகவும் எளிது. உங்கள் வீட்டில் உருளை வடிவில் இருக்கும் எந்த பொருளையாவது செங்குத்தாக ஒரு சமதளத்தில் நிறுத்துங்கள். பவுடர் டப்பா, டார்ச் லைட், கோந்து பாட்டில், ஸ்பிரே பாட்டில் எதுவாக இருந்தாலும் சரி. நீங்கள் நிறுத்துவது சமதளமாக இருக்கிறதா என்று அறிய, ரசமட்டக் கருவி (ஸ்பிரிட் லெவல் Spirit level) பயன்படுத்தலாம். அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் குமிழ்மட்ட செயலியை (spirit level / bubble level Mobile App) நீங்கள் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

தளத்தின் மீது ரசமட்டக் கருவி (அ) குமிழ்மட்ட செயலியுடன் கூடிய அலைபேசியை வைக்கும்போது குமிழானது கருவியின் மையத்தில் இருந்தால், அது சமதளமாக இருக்கிறது என்று அறிந்துகொள்ளலாம். இந்த சமதளத்தின் மீது நாம் தயாராக வைத்துள்ள உருளை வடிவ பொருட்களை செங்குத்தாக நிறுத்தவும்.

நண்பகல் ஆரம்பிக்கும் முன்பே உங்கள் சோதனையைத் தொடங்கிவிடுங்கள். இப்போது அந்தப் பொருளின் நிழல் மேற்கு திசையில் விழும். நேரம் செல்லச் செல்ல நிழலின் நீளம் குறைந்து உங்கள் பகுதியில் சரியாக நண்பகலில் நிழல் முற்றிலுமாக மறைந்துவிடுவதைக் காணலாம். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய நிகழ்வை நண்பர்களுடன் தனித்தனியாக பாதுகாப்புடன் கண்டுகளியுங்கள்.

சிறிது நேரத்தில், சூரியன் மேற்கு நோக்கி சரியச் சரிய, நிழலானது கிழக்கு திசையில் நீண்டுகொண்டே போகும். இந்த நிழலின் நீளத்தை அளந்து தான் முற்காலத்தில் நேரத்தை கணக்கிட்டனர்.


No comments:

Post a Comment