Thursday 15 April 2021

 நிழல் இல்லாத நாள் 

நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் பார்த்த மாணவர்கள் 





தேவகோட்டை - சிவகங்கை மாவட்டத்தில்   இன்று நாம் திறந்த வெளியில் நின்றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரிந்தது., பக்கத்தில் நிழலாக தெரியாததை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

                                தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்த்து அதன் அறிவியல் விவரங்களை தெளிவாக எடுத்து கூறினார்கள்.நிழல் இல்லாத நாள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ஆகியோர் இணையம் வழியாக மாணவர்களுக்கு கொடுத்த தகவலில், ‘‘பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இரண்டு முறை வரும்.சூரியனின் வீழ்ச்சி அட்ச ரேகைக்கு சமமாக மாறும் போது பூஜ்ஜிய நிழல் நிகழ்ச்சி நடக்கிறது. சூரிய கதிர்கள் தரையில் உள்ள பொருட்களில் செங்குத்தாக விழும் . அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும்.  இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் இம் மாதம்   ஏப்ரல் 15ம் தேதி தேவகோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளில் 12 மணி 15 நிமிடங்களில் நாம் நின்றால் சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரியும் பக்கத்தில் நிழலாக தெரியாது’’

மிக எளிதாக செய்து  பார்ப்பது எப்படி ?

                         நிழல் மறைவதைப் பார்ப்பது மிகவும் எளிது. உங்கள் வீட்டில் உருளை வடிவில் இருக்கும் எந்த பொருளையாவது செங்குத்தாக ஒரு சமதளத்தில் நிறுத்துங்கள். நண்பகல் ஆரம்பிக்கும் முன்பே உங்கள் சோதனையைத் தொடங்கிவிடுங்கள். இப்போது அந்தப் பொருளின் நிழல் மேற்கு திசையில் விழும். நேரம் செல்லச் செல்ல நிழலின் நீளம் குறைந்து உங்கள் பகுதியில் சரியாக நண்பகலில் நிழல் முற்றிலுமாக மறைந்துவிடுவதைக் காணலாம். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய நிகழ்வை நண்பர்களுடன் தனித்தனியாக பாதுகாப்புடன் கண்டுகளியுங்கள்.என்று தெரிவித்து இருந்தார்கள்.இதனை கருத்தில் கொண்டு இப்பள்ளி மாணவர்கள் ஈஸ்வரன்,முத்தய்யன் ,திவ்யஸ்ரீ ,ஆகியோர் தங்கள் வீடுகளின் அருகில் நிழல் இல்லாத நாளை உருளை வடிவ பொருளை வைத்து செய்து பார்த்தனர்.தங்களின் நிழல் தங்களுக்கு தெரியாததை கண்டு ஆச்சிர்யப்பட்டனர்.தங்களுடன் படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் எடுத்து கூறினார்கள்.தமிழ்நாடு அறிவியல் இயக்க வலைதல பதிவுகள் , தகவல்கள் தங்களுக்கு நல்ல உதவியாக இருந்ததாக கூறினார்கள்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நிழல் இல்லாத நாளை தங்களின் வீடுகளில் இருந்து உருளை வடிவ பொருளை கொண்டு செய்து பார்த்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ஆகியோர் இணையம் வழியாக மாணவர்களுக்கு நிழல் இல்லாத நாள் குறித்து விளக்கி கூறினார்கள்.

 

 வீடியோ 

  https://www.youtube.com/watch?v=QnNpWz77aho

 https://www.youtube.com/watch?v=LbIqMGMDn_s

No comments:

Post a Comment