Friday 23 April 2021

 உலக புத்தக தினம் 

பெற்றோரை புத்தகம் படிக்க தூண்டிய பள்ளி 

கோடி முறை புரட்டினாலும் கோவிக்காமல் கற்று தரும் ஒரே ஆசிரியர் புத்தகம் - மாணவர்கள் கவிதை சொல்லி அசத்தல்



































 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி பெற்றோர்களுக்கு உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக விமர்சனம் போட்டி நடைபெற்றது. 

                              கொரோனா  காலமாக இருப்பதால் ஆன்லைன் வழியாக போட்டிகள் நடைபெற்றது. பெற்றோர்கள் தாங்கள் வைத்திருந்த புத்தகங்களை படித்துவிட்டு புத்தகங்களில் உள்ள தகவல்களை நூல் விமர்சனமாக எழுதி அனுப்பினார்கள் . மேலும் அதனை வீடியோவாக பேசியும் அனுப்பியிருந்தார்கள்.பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், செல்வ மீனாள், முத்துலட்சுமி ஆகியோர்   புத்தகம் படித்தால் சிந்திக்கும் திறன் வளரும் என்று கூறி மாணவர்களுக்கு ஓவிய போட்டியும், தான் படித்த புத்தகங்களில் உள்ள தகவல்களை எடுத்துக் சொல்லும்  விதமாக வீடியோவாக அனுப்பவும் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளி திறந்த பிறகு பரிசுகள் வழங்கப்படும் என பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார். உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போட்டிகள் நடைபெற்றது.பெற்றோர்கள் புத்தகங்களை படித்து விட்டு நூல் விமர்சனங்களை தாள்களில்  எழுதியும், வீடியோவாக அனுப்பியும் இருந்தனர்.

படவிளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு பெற்றோர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் ஸ்ரீதர் ,முத்துலட்சுமி ,செல்வ மீனாள் , முத்துமீனாள் ஆகியோர் ஆலோசனையின்படி பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பெருவாரியாக போட்டிகளில் பங்கேற்று நூல் விமர்னசம் செய்தனர்.

 வீடியோ 

 https://www.youtube.com/watch?v=28OuopLW9Oo

 https://www.youtube.com/watch?v=TXxY0dxqgAY

 https://www.youtube.com/watch?v=uOsVGNmRyhg

 

 

 

 

No comments:

Post a Comment