Tuesday 13 April 2021

  திகட்டும் வரை தித்திக்கட்டும் தமிழ் புத்தாண்டே வருக ! வருக ! என கவிதை கூறி வரவேற்ற மாணவர்கள் 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்

 
  வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாக  புத்தாண்டு வாழ்த்து கூறி அசத்திய பள்ளி மாணவர்கள்

 


















































 
தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில்  தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம் வரைந்தும் ,கவிதை சொல்லியும் ,   பேசியும் இணையம் வழியாக தங்களின் வரவேற்பை தெரிவித்தார்கள்.

                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ் புத்தாண்டுதினத்தை  முன்னிட்டு  ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள்   நடைபெறுவது வழக்கம். கொரோனாவால் பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு  தமிழ் புத்தாண்டை  வரவேற்கும் வகையில்  மாணவர்கள் வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்க   மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு  உதவுவது ஆகும் . ஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில்   பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு விரைவில்  பரிசுகள் வழங்கப்பட உள்ளது.போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தமிழ் புத்தாண்டு தொடர்பாக பல்வேறு புதிய தகவல்களை தெளிவாக பேசினார்கள்.இப்பள்ளி மாணவர்களுக்கு  ஆன்லைன் வழியாக  பாட  வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும்  , சதுரங்க பயிற்சிகள்  நடைபெற்று வருவதும்  ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள்  தெரிவித்தனர்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம், கவிதை,பேச்சு போன்ற போட்டிகளில் பங்கு கொண்டு ஆன்லைன் மூலம் வீடியோக்களை அனுப்பி இணையம் வழியாக வாழ்த்து தெரிவித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்தமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தனர். 


   கொரோனாவால் பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  வீட்டிலேயே  கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்று பேசிய வீடியோக்களை YOU TUBE யில் காணலாம். : 

 https://www.youtube.com/watch?v=EAdY2zb7Ic0

 https://www.youtube.com/watch?v=dZgdUHuVo8Y&t=1s

 https://www.youtube.com/watch?v=d88LOANN8p4

 

 https://www.youtube.com/watch?v=bIMmRmGXGa0

 

 

 

 

   


No comments:

Post a Comment