Saturday 28 March 2020

*இல.சண்முகசுந்தரம் @சம்ஸ் அக்குஹீலர்:*
கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா?
*கேஸ் 31 வாழ்ந்தது போன்று நீங்களும் வாழாதீர்கள்..*

பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?
இச்சந்தேகம்தான் எல்லோரையும் இப்போது வாட்டுகிறது. *கைகழுவினால் போதாது, மாஸ்க் போட்டாலும் போதாது, வீட்டைவிட்டே வெளியவே வரக்கூடாது* என்றளவிற்கு நிலைமை சிக்கலாகிக்கொண்டே போகிறது.

*ஆனால், பயம் துளியும் வேண்டாமென்கிறது இந்தக் கட்டுரை. வாசியுங்கள்.
நண்பர்களுக்கும் அனுப்பிப் பயன்பெறச் செய்யுங்கள்.*

இந்த வைரஸ் எப்படிப் பரவுகிறது என மருத்துவர்கள் சொல்வதை முதலில் பார்ப்போம். 2020, மார்ச், 23 பிபிசி இணையம் பின்வருமாறு சொல்கிறது.

இந்த கோவிட் 19 வைரஸ் முதன்முதலில் *காய்ச்சலாகத் துவங்கும். பின்னர், வறட்டு இருமல். அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக்கோளாறுகள்* ஏற்படும். ஆனால், *இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரசாலும் ஏற்படக்கூடியவையே..*

ஆக, ஒரு விசயம் மிகவும் தெளிவாகிறது.  *கொரோனா வந்த அன்றே யாரும் மரணமடைவதில்லை.* நோய் தீவிரமடைய குறைந்தது ஐந்து நாட்கள் ஆகிவிடுகிறது. *பாதிப்பு துவங்கும்போதே, முதல் ஐந்து நாட்களில் நமது உடல் அந்த வைரசை எதிர்த்துப் போரிட்டு கொன்றுவிட்டால் நாம்  முழு நலம்.* நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

அதையும் ஒரு ஆதாரத்தோடு இணைத்துள்ளேன். படியுங்கள். 2020, மார்ச், 15 பிபிசி இணையம் பின்வருமாறு கூறுகிறது.

ஆரம்ப கட்டத்தில் நீங்கள் நோயுற மாட்டீர்கள். கொரானா வைரஸ் தொற்று பரவிய 10 பேரில் எட்டு பேருக்கு கோவிட் - 19 நோய் லேசான பாதிப்பாக அமையும். *காய்ச்சலும், இருமலும் தான் இதற்கான முக்கிய அறிகுறிகளாக* உள்ளன. உடல் வலிகள், தொண்டை வறட்சி, தலைவலியும் கூட வரலாம்.

காய்ச்சலும், அசௌகரியமாக உணர்தலும், தொற்று பரவியதற்கு எதிராக உங்கள் உடலிலுள்ள நோய் எதிர்ப்பாற்றலின் செயல்பாட்டால் ஏற்படக் கூடியவை. *ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து உடலானது சைட்டோகின்ஸ் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்யும்.* இவை தான் நோய் எதிர்ப்பாற்றலாக செயல்படும் எனும் அந்தச் செய்தியில் அப்போது சில தொந்தரவுகள் ஏற்படுமென்கிறது.

அச்சமயத்தில் மருத்துவமனையின் விசேச சிகிச்சை முறை எதுவும் தேவையில்லை. இந்த நிலை சுமார் ஒரு வாரத்துக்கு இருக்கும் -  இக்கட்டத்திலேயே பெரும்பாலானோர் குணமாகிவிடுவர். வைரஸை எதிர்த்து நோய் எதிர்ப்பாற்றல் போராடும் காரணத்தால் இவ்வாறு நடக்கும்.
*இதுதான் பி.பி.சி. செய்தியாகும். விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சொல்வதாகும்.*

ஆக, *ஒரு விசயம் மீண்டும் மீண்டும் தெளிவாகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட உடனேயே யாரும் மரணமடைவதில்லை.*

குறைந்தது ஐந்து நாட்களாக அது *சாதாரண வைரசாகவே* இருக்கிறது. அப்போது,  உடலானது தனது நோயெதிர்ப்பு சக்தி கொண்டு வைரசை ஒழிக்கப் போரிடுகிறது.

*நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நோய்க்கு எதிராகப் போரிடுகிறேன். எனக்கு ஒய்வுகொடு* என்று  உடல் நம்மிடம் தனது மொழியில் காய்ச்சல் மற்றும் உடல் அசதியை ஏற்படுத்தி நமக்குச் சொல்கிறது. தொண்டைவலி, சளி, வறட்டு இருமலும் கூடவே இருக்கலாம். ஆனால், அது *உடனடி மரணத்தை ஏற்படுத்துவதில்லை.*  ஒரு வாரம் வரை இந்நிலை நீடிக்கிறது.

இப்போது *பசி, தாகம் அதிகம் இருக்காது. அசதியும், தூக்கமும் அதிகமிருக்கும்.* ஆம். பசியின்மை, மாறுபடும் தாகம், அதிக அசதி, அதிக தூக்கம் என்பதெல்லாமே உடலின் செயல்கள் ஆகும். நோயெதிர்ப்பு சக்தி செய்யும் செயல்பாடுகளாகும்.

 அப்போது நோய் ஆபத்தை நோக்கி தீவிரமடைவதில்லை. ஆனால், *மூன்று வேளையும் சாப்பாடு, ஓய்வின்மை, கெமிக்கல் பானம், பாக்கெட் ஸ்நாக்ஸ், தூக்கமின்மை என தனது தவறுகளை யார் தொடர்கிறார்களோ அவர் ஆபத்தை தானாய் வரவழைத்துக் கொள்கிறார்.*
இதுதான் உண்மையாகும்.

இதற்கான இன்னொரு ஆதாரமாக, காய்ச்சல் என்றால் என்னவென்று  மற்றொரு மருத்துவரின் பேட்டியைப் பார்க்கலாம்.

*காய்ச்சல் என்பது உண்மையில் ஒரு நோய் அல்ல.* காய்ச்சல் வந்து விட்டாலே சிலர் தனக்கு பெரும் நோய் வந்து விட்டதோ என்று எண்ணி அச்சம் கொள்கிறார்கள். *காய்ச்சல் என்பது பல்வேறு வகையான நோய்கள் வருவதற்கு முந்தைய எச்சரிக்கை அறிகுறியே ஆகும்.* உடலில் கிருமித் தொற்று ஏற்படும்போது, அதை எதிர்த்து போராடும் உடல் எதிர்ப்புச்சக்தியின் போராட்டமே காய்ச்சல் எனப்படும். (2017, ஜூலை 24 விகடன் இணையம்)

ஆக, காய்ச்சல் என்பது உடலில் நோயெதிர்ப்பு சக்தியின் எச்சரிக்கை அறிகுறியே ஆகும்.

*அப்போது யார் அதை உணர்ந்து உடலுக்கு ஒத்துழைக்கிறாரோ, அவர் முழு நலம் பெறுகிறார்.* கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தானாக எந்த மருந்தும் இல்லாமல் *80% குணமாகின்றனர்* என்று அரசும், மருத்துவர்களும், மருத்துவத்துறையும், விஞ்ஞானிகளும் இதைத்தான் மாறி மாறிக்கூறுகின்றனர்.

இதையும் ஒரு ஆதாரத்துடன் பார்க்கலாம்.

*கேஸ் எண்: 31.* தென்கொரியாவின் 31வது கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 61. *2020 பிப்ரவரி 10* அன்று காய்ச்சல் வந்திருக்கிறது. *ஐந்து நாட்கள்* கழித்து, *பிப்.15* அன்று மதியம் *பப்பட் விருந்துக்கு* நண்பருடன் ஹோட்டல் சென்று சாப்பிட்டுள்ளார். அதன் பின்னரே அவருடைய நிலை மோசமாகியுள்ளது. *பிப்.17* அன்று அவர் கேஸ் 31 என்று அறிவிக்கப்படுகிறார். *THE HINDU, 25.03.2020.*

காய்ச்சல் வந்தபோது இவர் *ஒய்வெடுக்கவில்லை.* மாறாக ஊர் *சுற்றியிருக்கிறார்.* இடைப்பட்ட நாட்களில் நிச்சயம் *பால், பிரெட், பிஸ்கட், இனிப்பு, பாட்டில் பானங்கள், பிராசஸ்டு, பேக்கேஜுடு, ஹெல்த்தி ஹைஜீனிக் புட்ஸ்* தான் சாப்பிட்டிருப்பார். அவருக்கு பசியும் இருந்திருக்காது என்று நாமக்கு தெரியும். .

ஆம். இதுதான் நோயின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் கதையாய் இருக்கும். விசாரித்துப் பாருங்கள் அல்லது காய்ச்சல் வரும்போது துவக்க நாட்களில் பட்டினி இருந்து பரிசோதித்துப் பாருங்கள். அரசே ஆபத்து வரும்போது மட்டும் சிகிச்சை போதுமென்கிறது. ஆகவே, தான் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறது அரசும்.

ஆம். இப்போதுகூட, *சமூக விலகல்* என்பதன் நோக்கம், *சளி, காய்ச்சல் என முதற்கட்டத்தில் உள்ளோர்கள், வீட்டிலேயே ஒய்விலேயே இருந்தால் குணமாகிவிடுவார்கள்* என்பதுதான். நவீன மருத்துவமே ஆனாலும், நோய் பரவினால் சிகிச்சையளிக்கும் அளவிற்கு அரசு மருத்துவமனைகளில் அவ்வளவு மருந்தும், மருத்துவ வசதியும் கிடையாது என்பதே மருத்துவ உண்மையாகும்.

ஆம். *உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு ஆற்றலின் முன்புதான் இப்போது உலகமே சரணடைந்திருக்கிறது என்பதே உண்மையாகும்.*

எனவே, கொரோனாவைத் தடுக்க, வருமுன் காக்க இப்படிச் செய்வோம்.

1. சளி, காய்ச்சல் அறிகுறிகள் துவங்கிய உடனேயே பசியைக் கவனிப்போம். *பசியின் அளவிற்கேற்ப* மட்டுமே சாப்பிடுவோம்.
2. தாகம் ஏற்படும் போது மட்டும் நீர் அருந்துவோம்.
3. அசதிக்கு ஓய்வெடுப்போம். *தொலைக்காட்சி, செல்பேசி* பார்ப்பதுகூட கண்ணுக்கு கடும் வேலையாகும் என்றறிக.
4. தேவைப்படும் போதெல்லாம் அவசியம் தூங்குக. அத்தோடு *இரவில் 9 மணி முதல் 5 மணி வரை கட்டாயத் தூக்கம் தேவையான ஒன்றாகும்.* நிறைய பேர்கள் இதை அலட்சியம் செய்வதால் பிற்கால *உடல், மன, வாழ்க்கை* சிக்கல்கள் பல நிறைந்ததாக ஆகிவிடுகிறது.

இந்த நான்கே போதும். *கொரோனா யாரையும் அத்தனை எளிதில் பலி கேட்பதில்லை.* தவறான விழிப்புணர்வுச் செய்திகளால், பழக்கங்களால் தன்னையே கொரோனாவுக்கு ஒப்புக் கொடுத்தால் தான் ஆயிற்று.

அடிக்கடி நாம் செய்யும் அப்படியான தவறு ஒன்றையும் பார்த்துவிடுவோம்.  முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடன் அதிகம் விற்பனையானது எது தெரியுமா?

பால் பவுடர் மற்றும் பால் சார்ந்த வெண்ணெய், நெய், பன்னீர் மற்றும் பிஸ்கெட் போன்ற *பாக்கெட் உணவுப் பொருட்களே* விற்றுத் தீர்ந்ததாம். அத்தோடு, *அமுல், பார்லே, கோத்ரேஜ் நிறுவனங்களின் உணவுப்பொருட்கள் 10 முதல் 15 சதம் ஒரிரு நாளில் மட்டும் அதிகம் விற்பனையாகியுள்ளது.* ஆகவே 30 சதம் உற்பத்தி உடனே பெருகியதாம். *THE HINDU, 25.03.2020.*

இதுதான் நடுத்தர, பணக்காரர்கள் நம்பும் ஹைஜீனிக் லைப் ஸ்டைல். அதாவது, இப்போது *நோயெதிர்ப்பு சக்தியே இல்லையெனப் புலம்பும் பல ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் உணவுப் பழக்கம்* தான், இப்போது இவற்றை *வீட்டில் வேலையின்றி இருக்கையில், இல்லாத பசியில்* குடும்பமாய் சாப்பிடுவோம். *இவை நமது நோயெதிர்ப்பு சக்தியை வளர்க்குமா? அல்லது முடக்குமா?*
உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

*"மனித குலத்தின் தேவையினை மட்டுமே எல்லாவல்ல இயற்கையால் நிறைவு செய்ய இயலுமே தவிர, ஒட்டுமொத்த மனிதகுல பேராசையினை அல்ல"*  --மகாத்மா காந்தி--

நிறைவு. நன்றி.

*நமது கருத்துரை:* தமிழர்களின் பாரம்பரிய அஞ்சறைப் பெட்டியை நிரப்பி வையுங்கள். கூடவே எதெல்லாம் நெஞ்சு சளியை நீக்குமோ அவற்றில் உங்களுக்கு கிடைக்கும் ஓரிரு பொருளை அளவாய் வாங்கி பயன்படுத்திக் கொண்டே இருங்கள்.

நாமும் நாடும் நலமாய் இருக்க, யாரையும் நிந்திக்காமல், வீட்டின் எல்லைக்குள்ளேயே தங்கியிருங்கள்.

*உற்றாரையும் உலகத்தையும் நலம்பெறவே "வாழ்க வையகம் ! வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !!! என்று வாழ்த்திக்கொண்டே இருங்கள்.*

*வாழ்க வையகம் !*
*வாழ்க வையகம் !!*
*வாழ்க வளமுடன் !!!*

No comments:

Post a Comment