Sunday 15 March 2020

செட்டி நாட்டு வழக்கப்படி இரு கை கூப்பி வணக்கம் தெரிவியுங்கள் 
சுகாதார ஆய்வாளர் பேச்சு 

கொரோனா  வைரஸ் விழிப்புணர்வு 


தேவகோட்டை நகராட்சி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணர்வு 


தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகராட்சி சார்பாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடைபெற்றது. ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மாணவர்களுக்குகொரோனா  வைரஸ் தொடர்பான விழிப்புணர்வும், கைகழுவும் முறைகளையும் விரிவாக விளக்கினார். உணவு பாதுகாப்பாக எவ்வாறு சாப்பிடலாம் என்கிற தகவலையும், கலர்  அதிகமான பொருட்களை கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். நகராட்சி பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமு  ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர் .மாணவர்கள் அய்யப்பன், நதியா ஆகியோர் கை கழுவும் முறைகள் குறித்தும், வைரஸ் குறித்தும் விரிவான தகவல்களை வழங்கினார்கள் .நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 படவிளக்கம் : தேவகோட்டை நகராட்சி சார்பாக சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மாணவர்களுக்கு கைகழுவும் முறைகளையும் , பொது சுகாதாரம் குறித்தும் விரிவாக விளக்கினார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment