Sunday 22 December 2019

 மனிதம் மலர செய்யும் அறந்தாங்கி திசைகள் அமைப்பு

சமூகத்தை விழிப்படைய செய்து ,விடியலை நோக்கி அழைத்து செல்லும் திசைகள்













குடும்ப விழா

     திசைகள் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நடைபெற்ற திசைகள் விழா மிகப்பெரிய விழாவாக பல்வேறுபட்ட தரப்பினரும் . குடும்பத்துடன் கலந்து கொண்ட ஒரு மிக அருமையான நிகழ்வாக அமைந்திருந்தது.

வக்கீல் சங்க தலைவரின் ஊக்கப்படுத்தும் உரை

        தலைமை ஏற்று பேசிய வழக்கறிஞர்கள்  முன்னாள் தலைவர் வெங்கடேசன் அவர்கள், பல்வேறு விஷயங்களை மிக அருமையாக எடுத்து வைத்தார்கள் .அவர்கள் பேசிய ஒவ்வொரு செய்தியும்  மிகவும் அருமையாக இருந்தது. கருத்துக்களை கூர்மையாக வைத்தார்கள். பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டி அறிவுரை வழங்க வேண்டிய இடத்தில் அறிவுரை வழங்கி திசைகள் இனி மேல் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பது முதற்கொண்டு அனைத்து தகவலையும் மிக அருமையாக எடுத்துக் கூறினார்கள் .

 திசைகள் பொருளாளரின் வரவேற்பு

                                 திசைகள் விழாவிற்கு நான் வந்தவுடன் முதலில்  பொருளாளர் திரு முபாரக் அவர்கள் என்னை எம்ஜிஆர் பேருந்து நிறுத்தத்தில் இறங்க சொல்லி,  மாரி மருத்துவர் அவர்களையும் ,வெங்கடேஷ் மருத்துவர் அவர்களையும் இருந்த அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.

மருத்துவ தோழர்களுடன் கலந்துரையாடல்

                  இது  வரை மருத்துவர் வெங்கடேஷ் அவர்களை தொலைபேசி மூலமாகவே பேசி இருக்கின்றேன். சென்னை சென்ற பொழுது கூட என்னால் சந்திக்க இயலவில்லை .ஆனால் இப்போது அவருடன் நேரில் பேசி பழகி பல்வேறு கருத்துக்களை அவருடன் என்னால் தொடர்பு ஏற்படுத்த முடிந்தது. மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. மருத்துவர் மாரி அவர்களை திசைகள் மின்னிதழ் வழியாகவும் திசைகளின் வழியாகவும் பார்த்து இருக்கின்றேன். ஆனால் அவர்களுடன் நீண்ட நேரம் பேச வேண்டிய ஒரு சூழ்நிலையும் அவர்களை அவர்களது தனிப்பட்ட தகவல்களை அதாவது எவ்வாறு தனிப்பட்ட மனிதராக போராடினார் ,வெற்றி பெற்றார் அயல் மாநிலத்தில் சென்று மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றார் ,தனிமனிதனாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .அதற்கு ஒரு ஆளுமை வேண்டும். அந்த ஆளுமை அவரிடம் அதிகமாக இருப்பதை என்னால் காண முடிந்தது .உணரமுடிந்தது பேச முடிந்தது .இந்த விஷயங்களை எனக்கு மருத்துவர் மஸ்ரூக் அவர்கள் தான் அதிக அளவில் தகவல்களை சொன்னார்கள் .அவரை குறித்து வியந்து பாராட்டி பேசினார்கள். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

 பனங்கிழங்கு இனிப்பு உருண்டை

        பொருளாளர் முபாரக் அவர்களது வீட்டில் இருந்து வந்த பணம் கிழங்கு ஸ்வீட் உருண்டை மிக அருமையாக இருந்தது .அதையும்  ஆர்வமுடன் மருத்துவர் அவர்களும் நாங்களும் நன்றாக சாப்பிட்டோம் .பிறகு சுந்தரம் பேக்கரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு வந்த பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது .திசைகள் கட்செவி என் மூலமாக வாட்ஸ் அப் இன் மூலமாக இதுவரை பார்த்து வந்த பெரும்பாலான நண்பர்களை அன்று சந்திக்க முடிந்தது. தோழர்கள் இருவரும் அவர்களுடைய பேச்சு மிக அருமையாக அமைந்தது .அவருடைய சிந்தனைகள் கருத்துக்கள் போன்ற திசைகள் தொடர்பான கருத்துக்களையும் மிக அருமையாக எடுத்துரைத்தார்கள். அனைவரிடமும் இனிமையாகப் பழகினார்கள் .

 விருது பெறுவது மகிழ்ச்சியான தருணம்

          விருது பெறுவது என்பது எல்லோருக்கும் ஒரு சந்தோசமான ஒரு நிகழ்ச்சி .விருது கிடைக்கும் பொழுது இன்னும் நாம் அதிகமாக செயல்பட வேண்டும் .என நாம் செயல்பட்டதற்கு ஒரு உந்துதல் சக்தியாகவும் இது அமைகிறது என்பதே உண்மை .இந்த நிகழ்வுகளின் ஊடே நான் மருத்துவர் வெங்கடேஷ் அவர்கள் பேசும்பொழுது அவரையும் அறியாமல் அவர் உணர்ச்சிவசப்பட்டு அதை என்னால் காண முடிந்தது. ஆனால் பல நண்பர்களின் கருத்துக்களை ஒரே மேடையில் எதிர் எதிர் கருத்துக்களை எடுத்து வைக்க கூடிய வாய்ப்பை வழங்கியுள்ளது மிகவும் பாராட்டிற்கு உரியது .திசைகள் நிகழ்வில் அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கி அதை பேசக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாக மாற்றியது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது .தொகுத்து வழங்கிய டெய்சி ராணி அவர்களும் ,நண்பர் அவர்களும் மிக அழகாக தொகுத்து வழங்கினார்கள் .இதுபோன்று தொகுத்து வழங்குவது என்பது சூழ்நிலையை கருதி அனைவரது பேச்சையும் பார்த்து பேச வேண்டிய தருணத்தில் இருந்தார்கள் .

 ஆச்சிரியப்படவைத்த ஆளுமை

           ஆசிரியை பாரதி அவர்களின் இழப்பு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அதுபோன்ற சூழ்நிலையையும் அவரது தந்தையார் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் நம்பிக்கையூட்டும் வகையில் பேசியது இன்னும் ஆறுதலாக இருந்தது .எவ்வளவு பெரிய பக்குவம் இருந்தால் இவ்வாறு பேச முடியும் என்பதை நான் அந்த இடத்தில் உணர்ந்தேன் .அது எனக்கு மிகவும் புதிய விஷயமாக இருந்தது .ஏனென்றால் மைக்கை வாங்கி கொண்டு அழுவார்கள் அல்லது அவர்களை ஆறுதல் படுத்த நாம் செல்ல வேண்டுமானால், அவரது தந்தையார் பேசும்பொழுது அனைவருக்கும் நன்றி தெரிவித்து மருத்துவர் அவர்களது தகவலையும், டெய்சி ராணி அவர்களையும் அனைவரையும் அவர் அவருடைய எண்ண ஓட்டங்கள் உள்வாங்கி அனைவருக்கும் ஆறுதல்  தெரிவிக்கும்  விதம் பேசியதே திசைகளின் எண்ண ஓட்டம் எனலாம்.

திசைகள் குழுவினரின் உழைப்பு - பெரும் பாராட்டு


       அந்த அளவிற்கு இந்த திசைகள் குழுவினர் நன்றாக உழைத்து இருக்கிறது .என்றுதான் சொல்ல வேண்டும் . நிகழ்வின் ஆரம்பத்தில் அறிமுகத்தில் மருத்துவர் தட்சணாமூர்த்தி அவர்கள் பேசும்பொழுது பல்வேறுபட்ட கருத்துகளை எடுத்து வைத்தார்கள் ,ஏன்  இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது, ஆரம்பிக்கும் போது என்னென்ன பிரச்சனைகள் இருந்தது ,ஆரம்பித்த பிறகு அந்த பிரச்சனைகளின் உடைய தாக்கத்தை எந்த அளவுக்கு திசைகள் அமைப்பு குறைத்துள்ளது, என்பது போன்ற தகவல்களை மிக அழகாக அருமையாக சுவையாக எடுத்து வைத்தார் என்பதே உண்மை . மிகப்பெரிய வெற்றியை அறந்தாங்கியில் குழந்தை இறப்பு இல்லாமலிருப்பது கேட்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .

எங்கள் பள்ளிக்கு உத்வேகம் அளித்த ஆசிரியர் ஜெயராஜ் அவர்களின் உரை :

            நேற்றைய திசைகள் நிகழ்வில் பேசிய ஆசிரியர் திரு ஜெயராஜ் அவர்கள் எங்கள் பள்ளி பற்றிய பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தார்கள் .இதுவரை இரண்டு துணைவேந்தர்கள் பள்ளிக்கு அழைத்து வந்தது தொடர்பாக மிகவும் உள்வாங்கி உணர்வுபூர்வமாக பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. துணைவேந்தர் அவர்களை  நடுநிலைப் பள்ளிக்கு அழைத்து வந்த நிகழ்வை நினைவுபடுத்தியது   எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இருந்தபோதிலும் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் எங்கள் பள்ளி தொடர்பாகவும், துணைவேந்தர் வந்தது தொடர்பாக கூறும் போது மிகப்பெரிய உந்து சக்தியான வார்த்தை. ஆகவே அவைகள் எனக்கு தெரிந்தது இன்னும் நாங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு திசைகள் குழு நல்ல உதவியாக இருக்கிறது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது .துணை வேந்தர்கள் இருவரும் 4 முறை எங்கள் பள்ளிக்கு வந்துள்ளார்கள் என்பது மிகப்பெரிய விஷயம் என்று நாங்கள் எண்ணுகிறோம். அதுபோன்று திரு ஜெயராஜ் அவர்கள் பேசும் பொழுதும், கருத்துகள் பதியும் போது எங்கள்  பள்ளி வாழ்க்கைகான  கல்வியை வழங்கி வருவதாக தெளிவாக குறிப்பிட்டார்கள் . அதன் அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த தொடர்ந்து இயங்குவதற்கான அனைவருடைய ஒத்துழைப்பும் எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. வங்கிக்குச் செல்லும் போதும் ,காவல் நிலையம் செல்லும் பொழுதும், நீதிமன்றம்  செல்லும் பொழுதும், பாஸ்போர்ட் அலுவலகம்  சொல்லும்பொழுதும்  அங்குள்ள  அலுவலர்கள் அனைவரும் எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறார்கள் .அவர்களுடைய ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வுகள்  அனைத்தையும் தொடர்ந்து செயல்படுத்த முடிகிறது .இந்த விஷயத்தை எங்களுக்கு உணர்வுபூர்வமாக உள்ளுணர்வாக எடுத்து வழங்கிய திரு ஜெயராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. 

சமுதாய மாற்றத்தை நோக்கி திசைகள் அமைப்பு :

         அங்கு  சந்தித்த பல்வேறு நண்பர்களும் பலதரப்பட்ட தகவல்களை உள்ளடக்கி அவர்களும் சந்திக்கும் பொழுது இன்னும் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணரத்தினார்கள். கண்டிப்பாக நல்ல மாற்றங்கள் விரைவில் வரும் சமுதாயத்தில் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. கேள்வி கேட்கும் ஞானத்தை வளர்க்கக்கூடிய புத்தகங்களை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் திசைகள் அமைத்திருக்கும் சமுதாய மாற்றத்தை, அடுத்தவர்களுக்கு  உதவிக் கொண்டிருக்கும் திசைகள் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ,என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ,விருது கொடுத்ததற்கும் விருது கொடுப்பதற்காக தேர்வு செய்திருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,

விழாவிற்கான உழைப்பு போற்றுதலுக்குரியது :

       விருது வழங்கும் ஒரு நிகழ்வின் போதும், விருது தயார் பண்ணி அதற்கு உரியவர்களை தேர்ந்தெடுத்து அந்த விருதினை சரியான இடத்தில் கொண்டு போய் சேர்த்து அதற்கான ஏற்பாடுகள் செய்வது என்பதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது .ஆனால் இதை மிக அருமையான முறையில் செம்மையான முறையில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் திசைகள் குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .அங்கு இருந்தவர்கள் பேசும்பொழுது திசைகள் குழுவில் வாட்ஸ்அப் குழுவில் யார் வேண்டுமானாலும் தைரியமாக பேச முடியும் என்கிற ஒரு உத்வேகத்தை கொடுத்தார்கள். அது அதுதான் உண்மை ஏனென்றால் இன்று பல இடங்கள் நாம் பயந்து பயந்துதான் பேசிக்கொண்டிருக்கிறோம் ,அந்த பயம் இல்லாமல் கேள்வி கேட்கும் உரிமையை கேள்வி கேட்கும் இடத்தில் தட்டிக்கொடுத்து செயல்படுத்துவது மிகுந்த அளவில் வாட்ஸ்அப் குழு உதவியாக உள்ளது என்பதே உண்மை. பல்வேறு மருத்துவர்களையும் ,பல்வேறு ஆசிரியர்களும், பல்வேறு நண்பர்களையும், பல துறையில் இருப்பவர்களையும், நான் அங்கே சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கிறது என்பதை உண்மை.

 பாராட்டுக்குரிய திசைகளின் ஐம்பதாவது இதழ் :

திசைகளின்  ஐம்பதாவது இதழைப் படிக்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது .என்னுடைய கருத்துக்களையும் எங்கள் பள்ளி தொடர்பான கருத்துக்களையும் இன்னும் பல்வேறு தகவல்களையும் குறிப்பாக வெங்காயம் அது போன்று பல்வேறு விஷயங்களையும் நீங்கள் உள்ளே புகுத்தி இருந்ததும் அதை வண்ண இதழில் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. திசைகள் மின்னிதழ் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து செயல்படவும் ,ஆயிரம் இதழ்கள் தொடர்ந்து செல்லவும் என்னுடைய வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 

திசைகளின் மின்னிதழுக்கு நன்றி :

       முன்பு கூறியது போன்று அரசுப் பள்ளி  மாணவர்களின் படங்கள் இதுபோன்று நாளிதழ்களில் வெளிவரும் பொழுது அவர்களுக்கு மிகுந்த மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சி அவர்கள் 40 வருடம் 50 வருடம் கழித்து பழைய நினைவுகளை ஆவணப்படுத்தி இதுபோன்ற பத்திரிக்கையை எடுத்து பார்க்கும்போது அவருடைய வெற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்கான வாய்ப்பையும் தொடர்ந்து திசைகள் மின்னிதழ் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திசைகள் இதழ் வெளிவருவது தொடர்பான வெற்றி ரகசியம் கூறிய பூங்குன்றன் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள் :

         திசைகள் இதழின் ஆசிரியரும் பூங்குன்றன் அவர்கள் ஏற்புரை வழங்கும் பொழுது, திசைகள் மின்னிதழ் இவ்வாறெல்லாம் சிரமப்பட்டு வருகிறது ,என்பதை மிக அழகாக எடுத்துக் கூறினார். எனக்கே பல நேரங்களில் ஆச்சரியமாக இருக்கும், டைப் அடிப்பது என்பது மிக மிக கடினமான காரியம். அத்துடன் அதற்கேற்ப படங்களை தேர்வு செய்து பக்கங்களை தொகுத்து அந்த பக்கங்கள் மாறாமல் வெளிவருவது என்பது சாதாரண விஷயமல்ல. அந்த விஷயத்தை மிக அழகாக நாசூக்காக எவ்வளவு சிரமப்படுகிறோம் என்பதையும், உழைப்பு என்ன என்பதை எல்லாம் மிக அழகாக பூங்குன்றன் அவர்கள் எடுத்துக் கூறினார்கள் .எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் சமுதாய நோக்கினால் மட்டுமே அதை மட்டுமே நோக்கி செயல்படக் கூடிய திசைகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அருமையான,அன்பான உணவுடன் வரவேற்ற ஜோதி மெஸ் உரியமையாளருக்கு வாழ்த்துக்கள் :

       திசைகள் நிகழ்வு முடிந்து அனைவரும் ஜோதி மெஸ்  பயணப்பட்டோம். ஜோதி மெஸ் ன் உரிமையாளர் திரு கருப்பையா அவர்கள் எங்களை நன்றாக இன்முகத்துடன் வரவேற்றார்கள். அங்கு உணவும் நல்ல முறையில் இருந்தது .இட்லி ,தோசை, சப்பாத்தி ஆகியவை மிகவும் அருமையாக இருந்தது .குறிப்பிடத்தக்க விஷயம். அவர்கள் நன்றாக உபசரித்தார்கள் என்பதே உண்மை.  அங்கு உணவு அருந்தி விட்டு வெளியே வந்த பிறகு அப்துல் பாரி சார் அவர்கள்என்னிடம்  பத்திரமாக போய் சேர்ந்த உடன்  தகவல் சொல்லுங்கள் என்று பல தடவை என்னிடம் கூறினார்கள் .பிறகு திசைகளின் தோழி செல்ல மனோகரி அவர்களுடைய உதவியுடன் அவர்களது வாகனத்தில் காரைக்குடியில் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன் .மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .

 தலைவரின் அறிமுக உரை அருமை :


       திசைகளின் தலைவர் மருத்துவர் தட்சணாமூர்த்தி அவர்கள் பேசும்போது கூறிய விஷயங்கள் இன்னும் எனது மனதுக்குள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றது .அவற்றில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் நான் நன்றாக யோசித்து  கொண்டிருக்கின்றேன்.  தட்சிணாமூர்த்தி மருத்துவர் அவர்கள் மிகவும் அன்பாக அனைவரிடம் பழகினார்கள் . ஒரு கூட்டு முயற்சிக்கு நிச்சயமாக ஒரு நல்ல தலைவன் வேண்டும் .அந்த நல்ல தலைமை மருத்துவர்  தட்சிணாமூர்த்தி அவர்களிடம் மிக அதிகமாக இருக்கின்றது ..அவர்களுடைய ஒத்துழைப்பின் படி இன்னும் அதிகமான தலைவர்களை அவர்கள் உருவாக்கவேண்டும். அதிகமான சமூக மாற்றங்களை உண்டாக்க வேண்டும் அதற்கான முயற்சிகளை அவர்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் இந்த நேரத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .நன்றி


 சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்  எங்கள் பள்ளியின் செயல்பாடு :

 திசைகள் தலைவர் தக்ஷிணாமூர்த்தி பேசும்பொழுது மாதவிடாய் தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினார்கள். நாங்களும் மாதவிடாய் தொடர்பாக கடந்த 7 ஆண்டுகளாக அரசு மருத்துவரை பெண் மருத்துவரை அழைத்து மாணவிகளுடன் ஆறு, ஏழு ,எட்டு படிக்கும் மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் சுமார் இரண்டரை மணி நேரம் கலந்துரையாட செய்கின்றோம் .ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மருத்துவரை அழைக்கின்றோம். அப்போது அவர்கள் புதிய புதிதாக தகவல்களை சொல்கிறார்கள்.ஏன்  என்றால் பள்ளி நேரத்திலேயே பல மாணவிகள் வயதுக்கு வந்து விடும் காரணத்தினால் அவர்கள் அது தொடர்பாக பயந்து பயந்து போய் இருக்கிறார்கள் .அந்த பயத்தைப் போக்குவதற்கான தொடர்ந்து இது போன்ற செயல்களையும் ,சுத்தம் பேண வேண்டும் என்பதற்காகவும் இதனைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம் , இது போன்ற செயல்பாடுகளே சமூக மாற்றத்திற்கான காரணியாகும்.அந்த நேரத்தில் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

கூட்டு முயற்சியின் வெற்றி :

                   திசைகள் குழுவின் தலைவர் தக்ஷிணாமூர்த்தி அவர்கள் நிகழ்வின் ஆரம்பம் முதல் கடைசி வரை மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் .தலைவராகவும் மாறினார் .தொண்டராக இருந்தவர் .தலைவராகவும் செயல்பட்டார் .ஓடி ஓடி அனைத்து வேலைகளையும் செய்தார் .ஒரு நிகழ்வு நடத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு மிகவும் அருமையான முன்னேற்பாடுகள் பல நாட்களாக செய்ய வேண்டும் .ஒரு வாரம் முன்பாகவே அண்ணாதுரை சார் என்னை போனில் அழைத்தார்கள். மீண்டும் இரண்டு நாட்களுக்கு முன்பாக கன்ஃபார்ம் செய்தார்கள் .தொடர்ச்சியாக இந்த வேலைகள் பார்த்தால் தான் இவ்வளவு பேருக்கு விருதுகள் அளித்து அவர்களை ஊக்கப்படுத்தி  உள்ளனர்.அனைவரும் ஒற்றுமையாக செயல்பட முடியும் .5 மணிக்கு ஆரம்பித்த நிகழ்வு இரவு 9 மணி வரை எந்தவிதமான பிசிறு இல்லாமல் மிக அருமையாக சென்றது. அதற்கு தலைமை ஏற்று நடத்திய தக்ஷிணாமூர்த்தி மருத்துவர்கள் அவருடன் இணைந்து பணியாற்றிய அனைத்து திசைகள் நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  நன்றி.

அன்புடன் 

 லெ . சொக்கலிங்கம்,
 தலைமை ஆசிரியர்,
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ,
தேவகோட்டை .
சிவகங்கை மாவட்டம்.
8056240653

2 comments:

  1. Very nice sir very thanks for thisigal

    ReplyDelete
  2. அருமை சார்... திசைகளோடு தங்கள் பயணம் தொடர வேண்டுகிறேன்

    ReplyDelete