Thursday 12 December 2019

 இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., வகை 50வது ராக்கெட் வெற்றிக்கு மாணவர்கள் பாராட்டு 

 பயங்கரவாத செயல்கள் நடப்பதை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க உதவும் இஸ்ரோவின் செயற்கைகோள்  வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பாராட்டு தெரிவித்த மாணவர்கள் 







 தேவகோட்டை -  பயங்கரவாத செயல்கள் நடப்பதை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க உதவும் இஸ்ரோவின் ராக்கெட் வெற்றிக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்   வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
                                               பி.எஸ்.எல்.வி சி-48  ராக்கெட் மூலம்  புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) செயற்கைகோளுடன் இணைந்து அமெரிக்காவுக்குச் சொந்தமான 6 செயற்கைக்கோள்களும், இஸ்ரேல், இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டன.  இந்தியாவிற்கு சொந்தமான  'ரிசாட் - 2பி.ஆர்.1  செயற்கைகோள் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.இந்தியாவில் உள்ள கட்டடங்கள் உட்பட, பூமியின் அனைத்து பகுதிகளையும் துல்லியமாக படம் பிடிக்கும் கருவிகள், இந்த செயற்கைக்கோளில் இடம் பெற்றுள்ளன.மேலும், நாட்டின் எந்த பகுதிகளிலும், பயங்கரவாத செயல்கள் நடப்பதை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க முடியும். இந்த செயற்கைக்கோள் வாயிலாக, இந்தியாவை முழுமையான கண்காணிப்பில் வைத்திருக்க முடியும் . பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்; ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும், 75வது ராக்கெட் என்ற சிறப்பை பெறுகிறது. என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் தலைவர் சிவன் மற்றும் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.

பட விளக்கம்: பயங்கரவாத செயல்கள் நடப்பதை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க உதவும் இஸ்ரோவின் ராக்கெட் வெற்றிக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்   வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


 அதிநவீன ரேடார் செயற்கைக்கோளான, ரிசாட்- -2பி.ஆர்.1 சிறப்பு குறித்து விரிவாக பேசும் இளம்  மாணவர் அய்யப்பன் மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் மாணவர்கள் - வீடியோவாக காணலாம் .
https://www.youtube.com/watch?v=byhOXXkJK2M


 

No comments:

Post a Comment