Tuesday 17 December 2019

 பள்ளி மரத்தடியில் படித்து ஆராய்ச்சியாளர் ஆனேன்

அரசுப்பள்ளியில் படித்ததாலேயே 
வாழ்வின் உயரத்தை எட்டி உள்ளேன்

சிங்கப்பூர் பல்கலைக்கழக இணை இயக்குனர் பேச்சு

ஆசிரியர்களின் பிரம்படியினால்
செம்மையாக வளர்ந்து உள்ளேன்

செல் உயிரியல் ஆராய்ச்சியாளர் மாணவர்களுக்கு அறிவுரை 







தேவகோட்டை-  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழக இணை இயக்குனர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

                             பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் வரவேற்றார்.ஹங்கேரி நாட்டின் ஆராய்ச்சியாளர் பலாஸ்  தலைமை தாங்கினார். சிங்கப்பூர்  நான்யாங் பல்கலைக்கழக செல் உயிரியல் ஆராய்ச்சியாளர் பரசுராமன் பத்மநாபன் மாணவர்களுடன்  கலந்துரையாடி பேசுகையில் , நாங்கள் படிக்கும் பொழுது ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பார்கள். எதற்காக என்றால் நாங்கள் செம்மையாக வளரவேண்டும் என்பதற்காகத்தான் அடிப்பார்கள். அரசுப்பள்ளியில் மரத்தடியில் படித்தேன்.  மரத்தடியில் படிக்கும் பொழுது மழை பெய்தால் பள்ளி விடுமுறை விட்டுவிடுவார்கள். 10 வயது வரை அரசு பள்ளியில்  எங்கள் கிராமத்தில் இருந்த பள்ளியில் படித்துவிட்டு பிறகு சிதம்பரத்திற்கு ஐந்து கிலோமீட்டர்  மிதிவண்டியில் சென்று என்னுடைய படிப்பைத் தொடர்ந்தேன். அரசு பள்ளியில் படித்ததால் வாழ்வின் உச்சத்தை அடைந்து உள்ளேன். உலகின் பல்வேறு நாடுகளுக்கும்  சென்று வந்துள்ளேன் . உலகத்தின் மிகப்பெரிய  பல்கலைக்கழகமான ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். இந்த உயரத்திற்கு காரணம் என்னுடைய கல்வி மட்டுமே .கல்வியுடன் பணிவும் இருந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடையலாம். தமிழ்நாட்டில் குக்கிராமத்தில் பிறந்த நான் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளேன் என்று சொல்லலாம். அதற்கு காரணம் , ஆசிரியர் சொற்படி கேட்டு நன்றாக படித்ததால் தான் நல்ல நிலையில் உள்ளேன்.அரசு பள்ளியில் படித்து நல்ல நிலைக்கு வந்துள்ள  என்னையே நீங்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். என்று பேசினார். மாணவர்கள் கீர்த்தியா, ஐயப்பன்,சிரேகா, பாலசிங்கம், ஜனஸ்ரீ ,ஜோயல்,நதியா,வெங்கட்ராமன் உட்பட பலர் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர் .சிறப்பாக கேள்விகள்  கேட்ட  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

 படவிளக்கம் :  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழக இணை இயக்குனர் பரசுராமன் பத்மநாபன் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
உடன் ஹங்கேரி நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் பலாஸ் , பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளனர்.


மேலும் விரிவாக : 

மிதிவண்டியில் சென்று மேல்படிப்பு படித்து உலகத்தின் உயர்ந்த பல்கல்கலைக்கழகத்தில் பணியாற்றினேன் 

டியூஷன் எடுத்த வருமானத்தை எனது படிப்புக்கு பயன்படுத்தினேன் 

 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஹங்கேரி நாட்டின் ஆராய்ச்சியாளர் பலாஸ் தலைமை தாங்க ,சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழக இணை இயக்குனரும்,  செல் உயிரியல் ஆராய்ச்சியாளருமான பரசுராமன் பத்மநாபன் மாணவர்களிடம் கலந்துரையாடினார் .அப்போது அவர் பேசுகையில், 

ஆசிரியர்கள் அடிப்பது நாம் செம்மையாக வரவேண்டும் என்பதற்காகவே !

           என் முன்னால்  அமர்ந்து இருக்கும் உங்களை நான் கடவுளாக தான் பார்க்கிறேன். இதில் எத்தனையோ வருங்கால மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், என பல்வேறு துறைகளுக்கு செல்லக் கூடியவர்கள் மறைந்திருக்கிறார்கள் . அரசியல்வாதிகள் கூட இருக்கலாம்.  இப்போது உங்களையெல்லாம் ஆசிரியர்கள் அடிப்பதில்லை. நாங்கள் படிக்கும்போது பிரம்பால் அடிப்பார்கள். எதற்கு ? நாம் செம்மையாக வளரவேண்டும் என்பதற்காகத்தான். 

மரத்தடி பள்ளியில் படித்து உலக பல்கலைக்கழக்தில் பணியாற்றினேன்

                                       நான் சிதம்பரம் அருகே குக்கிராமத்தில் மரத்தடி பள்ளியில்தான் படித்தேன்.நீங்க எல்லாம் தற்பொழுது எனக்கு எதிரில் நாற்காலியில்  அமர்ந்து இருக்கிறீர்கள் .எங்கள் பள்ளியில் எந்த வசதியும் அப்பொழுது கிடையாது .அரசுப் பள்ளியில்தான் படித்தேன். மழை பெய்தால் பள்ளிக்கு விடுமுறை அளிப்பார்கள் .ஒருபக்கம் சந்தோசமாக இருக்கும். மறுபக்கம் கணக்குப் பாடம், வீட்டுப்பாடம் ,அடுத்த நாளைக்கும் சேர்த்து கொடுத்துவிடுவார்கள். அதுவும் நம்மை செம்மை செய்வதற்காக என்பது எனக்கு பின்பு தான் புரிந்தது . 

பழைய உணவை சாப்பிட்டு சிரமமான சூழ்நிலையில் படித்தல் :


                  எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு பேர். நான் இரண்டாவது மகனாக பிறந்தேன். 10 வயதில் என் தந்தை இறந்துவிட்டார் .எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது .குடும்ப சுமை என்னை நோக்கி வந்ததால் நான் படிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. எனது அண்ணனுக்காக நான் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பதினொன்றாம்  வகுப்பிற்கு சிதம்பரம் நோக்கி 5 கிலோமீட்டர் மிதிவண்டியில் சென்று தான் படிக்க வேண்டும். சிரமப்பட்டுதான் நான் சென்று படித்தேன் . எங்கள் வீட்டில் மூன்று ஏக்கர் நிலம் இருந்தது. ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் .விவசாயம் செய்ய வேண்டும் .அப்பொழுது எங்கள் பள்ளியில் மதிய உணவு  எல்லாம் கிடையாது . ஒரு வேளைதான் உணவு  அம்மா சமைப்பார்கள் .அந்த அளவுக்கு வீட்டில் வறுமை. இரவு மீதமுள்ளதை தண்ணீர் ஊற்றி வைக்கும் போது பழைய கஞ்சி தான் காலை உணவு . அதை சாப்பிட்டதால் தான் இன்றுவரை உறுதியாக இருக்கிறேன்.வீட்டில்  விவசாயம் பார்க்க வேண்டும். படிக்கவும்  வேண்டும் என நினைத்து விவசாய நிலத்தில் விளையும் காய்களை காலையில் மார்க்கெட்டில் கொடுத்து விற்று விடுவேன். மாலை வேளையில் நான்கு வீடுகளுக்கு சென்று டியூஷன் எடுத்தேன் . டியூசனுக்கு ஒரு வீட்டிற்கு 50 ரூபாய் கிடைக்கும் . நான்கு வீடுகளுக்கு மாதம் 200 ரூபாய் கிடைக்கும் . அதை வைத்துதான் மேற்படிப்பு படித்தேன்.என் அம்மாவின் உழைப்பு தான் எனக்கு முயற்சி செய்யத் தூண்டுதலாக இருந்தது .பி.எஸ்.சி. விலங்கியல்  படித்து விட்டு பிறகு  மீண்டும் மேலும் மேலும் உள்ள படிப்புகள் எல்லாம் படித்தேன் .

கல்விதான் சொத்து

                              உலகத்திலேயே தாயை போன்ற சிறந்த உறவு வேறு எதுவுமே இருக்க முடியாது . வாழ்க்கையில் எப்பொழுதுமே பணிவு வேண்டும் .நீங்கள் இங்கு படித்த ஆத்திச்சூடி போன்ற அறநூல்கள்  பொன்மொழிகள் . வேறு  எந்த மொழியிலும் இல்லாத தனித்துவம் தமிழ் மொழிக்கே உள்ளது . தமிழைப் போல் எளிதானது எதுவுமில்லை . ஒருவர் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். எளிமையாக இருக்கவேண்டும். மற்றவருக்கு கெடுதல் செய்யக்கூடாது. அன்பாக நடந்து தப்பு செய்பவர்களை திருத்தவேண்டும். அடிக்கக்கூடாது . இப்பொழுது இந்த இளம் வயதில் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் வாழ்க்கையில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.  கல்வி ஒன்றுதான் அறிவைப் பெருக்கி வாழ்க்கையை வளமாக்கும்.   நானே இதற்கு வாழும் உதாரணம் . படித்தால் நல்ல உயரத்திற்கு செல்லலாம்.  நல்ல எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது.  நான் முதலில் நன்றாக படித்து மத்திய அரசு நிறுவனத்தில் ஆறு  வருடத்திற்கு மேலாக பணியாற்றினேன். பின்பு அமெரிக்காவில் உள்ள உலகத்திலேயே இரண்டாவது பல்கலைக்கழகமான ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சென்று சில வருடங்கள் பணியாற்றினேன் . இப்பொபொழுது சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றி வருகின்றேன். அங்கு  இணை இயக்குனராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றேன். என்னுடைய இயக்குனர் தான் இங்கு உங்கள்  அமர்ந்திருக்கக் கூடிய பலாஸ்  ஆவார்கள். அவர் மிகப்பெரிய மனிதர். நோபல் பரிசு குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார்.அவர் உங்களை சந்தித்தது உங்களுக்கு கிடைத்த வரம். எனவே உங்களது வாழ்க்கை உங்கள் கையில் தான் இருக்கிறது . 

முயற்சி செய்தால் வெற்றி உறுதி - நானே உதாரணம்

     நீங்கள் முயற்சி எடுத்தால் மிகப்பெரிய வெற்றியாளராக வரமுடியும். அதற்கு மிகப்பெரிய உதாரணம் நானும் ,என்னுடன் அமர்ந்திருக்கும் பலாஸ்  அவர்களும்ஆவோம். நாங்களே உங்களுக்கு வாழும் உதாரணங்கள் . தற்போது மாதத்திற்கு இரண்டு முதல் நான்கு முறை விமானத்தில்  சென்று வந்து கொண்டு இருக்கின்றேன். உலகத்தில் நான் பார்க்காத இடங்களை இல்லை. அனைத்து நாடுகளுக்கும் சென்று வந்துவிட்டேன். அனைத்து மொழிகளையும் படித்துவிட்டேன் . இவ்வளவும் இருந்தும் எனது  பணிவு தான் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது .கல்வி ஒன்றுதான் உங்களை  வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாளராக மாற்றும்.  சிலபேர் பி.எஸ்.சி. விலங்கியல் படித்து அதனில் வேலை கிடைப்பது சிரமம் என்பார்கள். ஆனால் நான் முயற்சி செய்து எனக்கான வேலையை நானே தேடிக் கொண்டேன். அதனால்தான் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை எளிதாக அடைய முடிந்தது. என்னுடைய இலக்கு நோபல் பரிசு பெறுவது தான். நோபல் பரிசுக்கான ஆராய்ச்சிகளை நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன். இவ்வாறு பேசினார் .

மாணவர்களின் கேள்விகளுக்கு  பதில் :

மாணவர்கள் பல்வேறு கேள்விகளைசிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழக இணை இயக்குனர் பரசுராமன் பத்மநாபன் அவரிடம் கேட்டார்கள் அதற்கு அவர் கூறிய பதில்கள் வருமாறு:

ஜோயல் ரொனால்ட் (கேள்வி):  மைக்ரோ பயாலஜியின் கடைசி ஆராய்ச்சி என்ன ?

பதில் : மூளையை எப்படி சிந்தித்துக் கொண்டே இருக்கிறது என்பதை  நானும் பலாஸ் அவர்களும் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கின்றோம் .

கீர்த்திகா (கேள்வி) : விவசாயம் மற்றும் தொழிசாலையில்  நுண்ணுயிரியின்   பங்கு என்ன ?

பதில் : விவசாயத்தில் நுண்ணுயிரி தீங்கு தரும். நல்லதும் தரும். விவசாயத்திற்கு, தொழிலுக்கு நுண்ணுயிரி முக்கியம். ஒரு இலையில் பச்சையும் இருந்தால்தான் செடி வளர முடியும் .அந்த பச்சையம் எல்லாவற்றையும் நுண்ணுயிரி தின்றுவிடும். அதனால் செடி வளர முடியாது .என விவசாயத்தில் நுண்ணுயிரி ஆராய்ச்சி என்பது மிகவும் முக்கியமானது.

நதியா (கேள்வி) :  நீங்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளும் பொழுது தீங்கு தரும் நுண்ணுயிர் இடம் இருந்து உங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? 

பதில் :  கையுறை அணிந்து கொள்வோம் .உடம்பில் கோட் போட்டுக் கொள்வோம். நுண்ணுயிரி நம் மேல் பட்டால் நமக்கு பழகிவிடும் . எங்களுக்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு பராமரித்து கொள்வோம்.

 ஐயப்பன் (கேள்வி) :  சிலர்  நுண்ணுயிரிகள் பிரிவு  மட்டுமே படிக்கிறார்கள். சிலர்  நுண்ணுயிரிகள் மற்றும் நோய் தடுப்பு இயக்கம் சேர்ந்து படிக்கிறார்கள். நீங்கள் எவ்வாறு படித்தீர்கள்?

பதில் :  நான் நுண்ணுயிரியல் மற்றும் நோய்த் தடுப்பில் சேர்ந்து படித்தேன். நுண்ணுயிரிகள் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.

வெங்கட்ராமன் (கேள்வி) :  மைக்ரோபயாலஜி  பற்றி சில விஷயங்கள் சொல்லுங்கள் சார்?

பதில் :  மைக்ரோபயாலஜி பற்றி பல குறிப்புகள் உள்ளன.நீங்கள் மேல் வகுப்பு படிக்கும்போது உங்கள் புத்தகத்தில் அனைத்து தகவலும் இருக்கும் .

ஜனஸ்ரீ (கேள்வி) புற்றுநோய் சிகிச்சைக்கு நுண்ணுயிரிகள் பயன்படுகிறதா?

பதில் :  புற்றுநோய் சிகிச்சைக்கு நுண்ணுயிரியல் பயன்படுகிறது.

பாலசிங்கம் (கேள்வி ) : மைக்ரோ ஓவனில் சமைத்து சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

பதில் :  மைக்ரோ ஓவனில் சமைத்து சாப்பிட்டால் புற்றுநோய் வராது.

நதியா (கேள்வி ) : ஸ்வீடன் நாட்டிற்கு எத்தனை வருடமாக சென்று இருக்கிறீர்கள்?

பதில் :  சுவீடன் நாடு ரொம்ப பிடிக்கும்.அங்கு  மொத்த மகள் மக்கள் தொகை தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தொகைதான் .எனவே அங்கே இரண்டு பேர் இருந்தால் ஒரு வீடு கொடுப்பார்கள் மூன்றாவதாக குழந்தை வந்தால் இன்னொரு ரூம் உள்ள வீடு கொடுப்பார்கள் மிகவும் அருமையான ஊர் ஸ்வீடன் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஈஸ்வரன்  (கேள்வி) :  மைக்ரோபயாலஜி படித்தால் எந்த துறையில் எந்த வேலை கிடைக்கும்? 
பதில் :  எந்த துறையில் எந்த வேலை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் .அனைத்துக்கும் வசதியான இடம் மைக்ரோபயாலஜி படிப்பு மருத்துவத்துறை .

திவ்யஸ்ரீ (கேள்வி) : மருத்துவத்துறையில் நுண்ணுயிரியலின் பங்கு என்ன?

பதில் :  மருத்துவத்துறையில் நுண்ணுயிரிகளின் பங்கு இருக்கிறது .அதற்கு ஒரு உதாரணம் இன்சுலின் .

அஜய் ( கேள்வி ) : மைக்ரோபயாலஜி என்பது எந்த மொழியிலிருந்து வந்தது?

பதில் : இலத்தீன் மொழியிலிருந்து வந்தது .

ஜோயல் ( கேள்வி ) : விவசாயம் மற்றும் தொழில்துறையில் நுண்ணுயிரியின் பங்கு என்ன?

பதில் :  காய்கறிகளில் பாக்டீரியா பரவுகிறது .தாவரத்தின் இலைகளில் பச்சையம் உள்ளது .இலைகளில் உள்ள பச்சையத்தை பாக்டீரியா அழித்து விடுகிறது. இதனால் விளைச்சல் குறைகிறது. தாவரத்தின் பொருட்களை மக்கச் செய்ய நுண்ணுயிரிகள் பயன்படுகிறது .

சிரேகா (கேள்வி) : புற்றுநோய் சிகிச்சைக்கு நுண்ணுயிரிகள் பயன்படுகிறதா?

பதில் :  அமெரிக்கா போன்ற நாடுகளில் நுண்ணுயிரிகள் பயன்படுத்தப்படுகிறது .புற்றுநோய் இருக்கக்கூடிய செல்களை அழித்து விடுகிறது .  

ஆகாஷ் ( கேள்வி ) : நீங்கள் எதை பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்கள் ? 

பதில் : மூளை தொடர்பான ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

கன்னிகா (கேள்வி) : நுண்ணுயிரி எங்கெல்லாம் பயன்படுகிறது ?

பதில் :  உணவு துறை மருத்துவத் துறையில் நுண்ணுயிரி இல்லாமல் இல்லை. எல்லாத்துறையிலும் நுண்ணுயிரி உள்ளது.

கனிஸ்கா ( கேள்வி) :  சிங்கப்பூரில் என்ன மொழி பேசுவார்கள் .நான்கு மொழி ஆட்சி மொழியாக உள்ளது .சீன மொழி, மலாய் மொழி, தமிழ் மொழி ,ஆங்கில மொழி.

மகாலெட்சுமி (கேள்வி ) : மைக்ரோபயாலஜி படிக்க என்ன படிக்க வேண்டும்?

பதில் : பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பிரிவு எடுத்து படிக்க வேண்டும் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புக்கு பிறகு ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டும்.

மகாலிங்கமூர்த்தி (கேள்வி ) : நுண்ணுயிரியல் தேர்ந்தெடுத்த  நோய் தடுப்பில் எவ்வாறு பயன்படுகிறது?

பதில் :  நோய் தடுப்பில்  நன்மையும் உண்டு தீமையும் செய்யும் நுண்ணுயிர்கள் உள்ளன. உணவுப்பாதையில் சரியாக செரிமானம் ஆகி நுண்ணுயிரிகள் நன்மை தரும் செய்யும் சுகாதாரமான வந்தால் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பாதுகாக்கலாம். 

அய்யப்பன் ( கேள்வி):  உணவுத்துறை நுண்ணியல் தொடர்பு உள்ளதா ?

பதில் : ஆம் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் பல உணவுகளில் உள்ளது .

 இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழக இணை இயக்குனர் தொடர்ந்து பதில் அளித்தார்.


 மிதிவண்டியில் சென்று மேல்படிப்பு படித்து உலகத்தின் உயர்ந்த பல்கல்கலைக்கழகத்தில் பணியாற்றினேன் - வீடியோ  

 https://www.youtube.com/watch?v=l8PLADHtWW8






No comments:

Post a Comment