Wednesday 4 December 2019

மிகப்பெரிய மேடையில் , ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்,கலைநிகழ்ச்சிகளும் , கடந்து வந்த பாதையும்




தேவகோட்டை - தேவகோட்டை கந்தசஷ்டி விழாவில் கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் எங்கள் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பொது மக்கள் அளவில் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது .கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கந்தசஷ்டி விழாவில் எங்கள் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன .இந்த ஆண்டு பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு நாங்கள் இந்த கலை நிகழ்ச்சிகளை நடத்தினோம் குறிப்பிடத்தக்கது .ஏனென்றால் மழைக்காலமாக இருப்பதாலும்,பொருளாதார ரீதியாக சுமாராக உள்ள மாணவர்களாக இருப்பதாலும் பல மாணவர்களுக்கு பல்வேறு நிலைகளில் மழையின் காரணமாக உடல் உபாதைகள் ஏற்பட்டு விடுமுறை எடுத்தார்கள் .ஆசிரியர்களும் சில நேரங்களில் உடல் உபாதை காரணமாக விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது . பள்ளிகள் மழையின் காரணமாக விடுமுறை விடப்பட்டது . இந்த முறை மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பது மிகப்பெரிய அளவில் ஒரு சவாலாகவே இருந்தது . 10 மாணவர்கள் ஒரு நிகழ்வில் பங்கேற்கிறார்கள் என்றால் அதில் ஐந்து மாணவர்கள் வருவார்கள் . மீதி ஐந்து பேர் விடுமுறை எடுத்து விடுவார்கள் . அவர்களை பலகட்ட முயற்சிக்கு பிறகு பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு கூடுதல் நேரம் பயிற்சி அளித்து நல்ல நடனத்தை நாங்கள் இந்த கந்தசஷ்டி விழாவில் வழங்கி உள்ளோம். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள எங்கள் பள்ளி மாணவர்கள் பல முயற்சிகளுக்குப் பிறகு அவர்களுக்கு பயிற்சி அளித்து மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட காரணமாக அமைந்திருந்தது .ஆசிரியர்களும் மிகுந்த அளவில் முயற்சி எடுத்து மாலை வேளையில் மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுத்து அதற்காக அவர்களுக்கு கடலை போன்ற பல்வேறு உணவுகளையும் மாலை வேளைகளில் தினசரி மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளோம். அதற்காக ஒவ்வொரு நாளும் சத்துணவு உதவியாளர் உதவியுடன் இன்று மாலை என்ன உணவு வழங்குவது என முடிவு செய்து மாணவர்களுக்கும் வழங்கினோம்.காலையில் வரும் மாணவர்கள் மாலை வரை இருந்து பயிற்சி எடுக்கும்போது அவர்களுக்கு மாலை உணவும் வழங்கினோம் என்பது மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கந்த சஷ்டி விழா கலை நிகழ்ச்சிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்தோம். கந்தசஷ்டி விழா அன்று நிகழ்ச்சிகள் முடிவடைந்து , இரவு மாணவர்களை பத்திரமாக பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான உணவினையும் பள்ளியின் சார்பாக வழங்கி அனைத்து நிகழ்வுகளையும் வெற்றிகரமாக முடித்தோம் என்றால் அதற்கு காரணம் அனைவருடைய ஒத்துழைப்பும் என்பது குறிப்பிடத்தக்கது . கந்தசஷ்டி விழாவின் மிகப்பெரிய மேடையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மாணவர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான விஷயம். தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வரும் அனைத்து தரப்பினருக்கும் ,எங்கள் பள்ளி நிர்வாகத்துக்கும் ,பெற்றோருக்கும் ,மாணவர்களுக்கும் ,கந்தசஷ்டி விழா குழுவினருக்கும் அனைவருக்கும் எங்கள் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலமாக எங்கள் பள்ளியில் உள்ள பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இந்நிகழ்வு ஒரு உந்து சக்தியாக அமைந்தது என்றே சொல்லலாம்.
மாணவர்களுடைய திறமையை வெளிப்படுத்தி அதற்காக மிகப் பெரிய மேடையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் எங்கள் பள்ளியின் நிகழ்ச்சி நடைபெற்றது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது . இது போன்ற நிகழ்வுகளின் மூலமாக மக்கள் மிகப்பெரிய வரவேற்பை மாணவர்களிடத்தில் உண்டு செய்து இருக்கிறார்கள் .இளம் மாணவர்களின் நடனம் ,நாட்டியம், பேச்சு ,வில்லுப்பாட்டு, என்று பல்வேறு வகையில் யோகா உட்பட மிக அருமையான நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்திய எங்கள் பள்ளி மாணவர்களை இந்த நேரத்தில் பாராட்டுகிறோம் .பயிற்சி கொடுத்து ஆசிரியர்களும் அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இரவு மாணவர்களை மீண்டும் பத்திரமாக பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர்களுக்கு வேண்டிய உணவினையும் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக உணவு அளித்து அனுப்பி வைத்தது மிகப்பெரிய அளவில் அவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த வெற்றி அனைவருடைய ஒத்துழைப்பின் காரணமாக ஏற்பட்ட வெற்றி அனைவருக்கும் நன்றிகள் பல. இந்த ஆண்டு கருப்பர் நடனம் நடக்கும்போது மேடைக்கு முன்பாகவும் , மேடையை சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் பல பொதுமக்கள்,பெண்கள் சாமி ஆடியது குறிப்பிடத்தக்கது. விழாவில் நடனம் ஆடிய இளம் மாணவர்களுக்கு ஒரு மாதம் முன்பே திட்டமிட்டு உடைகள் பொருத்தமாக வாங்க செய்து அதனை அருமையாக வேடமிட்டு நிகழ்வில் அரங்கேற்றியது பெரும்பாலான மக்களிடம் வரவேற்பை பெற்று இருந்தது.இளம் மாணவர்கள் மிக பெரிய மேடையில் ,புகழ் பெற்ற மேடையில் தங்களின் நடனம் நிகழ்ந்ததை அவர்கள் பெரிய மனிதர்கள் ஆன பிறகு எண்ணி பெருமைப்படுவார்கள் என்பது நிச்சயம் நன்றி.
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.

No comments:

Post a Comment