Tuesday 10 December 2019

தினமும் செய்தித்தாள் படித்தால் ஆட்சிப் பணிக்கு எளிதாக வரலாம்  

பாரதியார் விழாவில் ஐபிஎஸ் பேச்சு 

ஐ.பி.எஸ்.உடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல் 

பெற்றோர் ஹெல்மட் அணிந்தால் மட்டுமே வண்டி சாவியை கொடுங்கள் 

மாணவர்களுக்கு ஐ .பி.எஸ்.அறிவுரை






 பாரதியார் பிறந்த நாள் விழா 


 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதியார் விழாவில்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கினார் .

              ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார் . தேவகோட்டை உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஐ.பி.எஸ், மாணவர்களுக்கு  பரிசுகளை வழங்கினார் .அப்போது அவர் பேசுகையில், பாரதியார் விழாவில் இப்பள்ளியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டிகளில் பேசிய மாணவர்கள் அருமையாக பேசினார்கள் .இந்திய ஆட்சிப் பணிக்கு வருவதற்கு இளம் வயது முதல் தினசரி செய்தித்தாள் வாசியுங்கள்.  சில ஆங்கில வார்த்தைகளையும் தினமும் படித்துக்கொள்ளுங்கள் .இளம் வயதிலேயே ஒரு குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் . செய்தி தாள் வாசிக்கும்போது  உங்களுக்கு அதிகமான அளவில் பொது அறிவு வளரும் . பொது அறிவு இருந்தால்தான் ஆட்சிப்பணி போன்ற அரசு பணிகளில் வெற்றி பெற எளிதாக இருக்கும். காவல்துறை உங்கள் நண்பன் .உங்கள் அப்பா அம்மாவிடம் ஹெல்மெட் அணிந்தால் தான் வண்டி சாவி தருவேன் என்று எடுத்துக்கூறுங்கள் . ஹெல்மெட் அணியாவிட்டால் வண்டி சாவியை கொடுக்காதீர்கள். எங்கள் பள்ளிக்கு வந்த தேவகோட்டை ஏ .எஸ்.பி.சொன்னார் என்று சொல்லுங்கள்.காவல்துறை எப்பொழுதுமே உங்களது பாதுகாப்பை மிக கவனமுடன் கண்காணிக்கிறது .தேவகோட்டையில் 75க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அவை அனைத்தையும் கண்ட்ரோல் அறை ஒன்றை உருவாக்கி அங்கிருந்து கண்காணிக்க உள்ளோம் .தொடர் முயற்சி செய்தால் வெற்றி உறுதி. இளம் வயது முதலே நீங்கள் அனைவரும் தொடர் முயற்சி எடுக்க வேண்டும். செய்தித்தாள் வாசிக்க வேண்டும். கல்லூரிப் படிப்பு முடித்து நீங்கள் தொடர்ந்து வாசிப்பையும்  வளர்த்துக்கொண்டால் ஐ..பி.எஸ், ஐ.ஏ .எஸ், போன்ற பணிகளுக்கு வரமுடியும். அரசு பணியில் இருந்தால் அனைவருக்கும் உதவி செய்ய இயலும் .உதவி செய்வதற்காகவே அரசுப் பணிக்கு நான் வந்துள்ளேன் .நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சி செய்து அரசுப் பணியை பெற வேண்டுமென்று  கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். மாணவர்கள்  வெங்கட்ராமன், ஸ்ரேயா, ஜனஸ்ரீ, ஆகியோர் பல்வேறு கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர் . சிறப்பாக  பாரதியார் ஓவியம் வரைந்த ஐயப்பன், ராகேஷ் ஆகியோருக்கும் ,பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற ஜோயல் ,தேவதர்ஷினி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.

 படவிளக்கம்:தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதியார் விழாவில் மாணவர்களுக்கு தேவகோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  ஐ.பி.எஸ். பரிசுகளை வழங்கினார் . அருகில்  பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் உள்ளார்.

No comments:

Post a Comment