Thursday 26 December 2019

ஆசிரியர்களுடன் பெற்றோர்கள் கலந்துரையாடல்

5,8 வகுப்புகளுக்கு பொது தேர்வு குறித்து விழிப்புணர்வு 







 தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பெற்றோர்கள்  ஆசிரியர்களுடன்   கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது.
                              
                            நிகழ்வுக்கு வந்தவர்களை ஆசிரியை முத்து லெட்சுமி  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் ஆறுமுகம்   முன்னிலை வகித்தார்.மாணவர்களின் நடத்தை,தனித்திறமைகள்,கல்வி தொடர்பான முன்னேற்றம் குறித்து பெற்றோர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் பதில் அளித்தனர்.மாணவர்கள் பள்ளியில் ஆண்டு முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனர்.ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கந்தசஷ்டி விழாவில் சிறப்பாக நிகழ்ச்சிகள் வழங்கியதற்கு பெற்றோர்கள் சார்பாக ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.சிறப்பாக பேசிய மாணவர்கள் மகாலெட்சுமி,வெங்கட்ராமன்,முகல்யா ஆகியோருக்கும்   பரிசுகள் வழங்கப்பட்டது.பெற்றோர்கள் சார்பாக வைதேகி,ராஜலட்சுமி,அருள் ஜூலியா, சிவகாமி,அரசு பள்ளி ஆசிரியை ராணி,முன்னாள் மாணவிகள் சொர்ணாம்பிகா ,காயத்ரி,தனலெட்சுமி ஆகியோர் பள்ளியின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டி பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பெற்றோர்கள்  ஆசிரியர்களுடன்   கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது.மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment