Tuesday 30 October 2018

 தீடிர் ஸ்ட்ரைக்கால் மாணவர்களுக்கு உதவிய ஆசிரியைகள் 

மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து பரிமாறிய பள்ளி ஆசிரியைகள் 


ஆசிரியைகள் சமையல் செய்து மாணவர்களுக்கு உணவு வழங்கல் 



 



தேவகோட்டை - சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கான சத்துணவு சமைக்கும் பணியில் ஆசிரியைகள் ஈடுபட்டு மதிய உணவை மாணவர்களுக்கு பரிமாறினார்கள்.
                            
                                       அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்க நிலையில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக காலை உணவு உட்கொள்ளாமல்தான் பள்ளிக்கு வருகிறார்கள்.இந்த நிலையில் மதிய உணவு ஒன்றுதான் அவர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதம்.பள்ளி விடுமுறை என்றால் அவர்களுக்கான உணவை பெற்றோரின் வழியாக சாப்பிட்டு கொள்வார்கள்.ஆனால் பள்ளி இருக்கும் நாட்களில் மதிய சத்துணவை நம்பித்தான் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள்.பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் மதிய சத்துணவை சாப்பிடும் பள்ளிகளும் உள்ளன . பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் சத்துணவை நம்பி வரும் நிலையில் உள்ள  பள்ளிகளுக்கு,மாணவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு சத்துணவு ஊழியர்கள் வரவில்லை என்ற நிலையில் ,மாணவர்கள் சாப்பாடு திண்டாட்டம்  ஆகிறது.காலையிலும் சாப்பிடாமல் வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆசிரியைகளே மதிய உணவை சமைத்து மாணவர்களுக்கு பரிமாறினார்கள்.மாணவர்களும் மதிய சத்துணவை ஆசிரியைகள் சமைத்து பரிமாறியதற்கு நன்றி தெரிவித்தனர்.



பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கான சத்துணவு சமைக்கும் பணியில் ஆசிரியைகள் ஈடுபட்டு மதிய உணவை மாணவர்களுக்கு பரிமாறினார்கள்.


          

No comments:

Post a Comment