Saturday, 13 October 2018

அதிர்ச்சிக்கு உள்ளாகிய மறைவு

திரு.சங்கர் ( சங்கர் ஐ .எ .எஸ்.அகாடமியின் நிறுவனர் )
அவர்கள் விகடன் அறம் செய விரும்பு மூலம் எனக்கு அறிமுகமாகி கடந்த ஒரு ஆண்டுகாலமாக தொடர்ந்து அவருடன்தொடர்பில் இருந்தேன்.ஆனால் இது வரை நேரில் பார்த்தது கிடையாது.போனில் மட்டுமே பேசி உள்ளார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதத்தில் பேசுமாறு அழைப்பு விடுத்தேன்.ஒரு மாதத்துக்கு முன்பு சங்கர் அவர்களே என்னை தொடர்பு கொண்டு ஒட்டன்சத்திரத்தில் எனக்கு ஒரு திருமண வரவேற்பு மாலை 7 மணி அளவில் உள்ளது .அந்த நிகழ்வுக்கு வரும்போது உங்கள் பள்ளிக்கு வருகிறேன் என்று கூறினார்.ஆனால் அன்று விடுமுறை தினம் என்று சொன்ன உடன் ,சார் அடுத்த மாதம் கண்டிப்பாக வந்துவிடுகிறேன் சார் என்று சொன்னார்.பிறகு கடந்த வாரம் தொடர்பு கொண்டபோது சார் இரண்டு நாள் கழித்து (அதாவது கடந்த செவ்வாய் கிழமை அன்று ) 09/10/2018 அன்று மதியம் 3 மணிக்கு தொடர்பு கொள்ள சொன்னார் . நான் பணி காரணமாக இரவு 8 மணி அளவில் அழைத்தேன்.சார் வியாழன் அன்று 11/10/2018 அன்று காலை 11 மணிக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னார்.நானும் அலுவலக சூழ்நிலையில் மறந்து விடுவோம் என்று எண்ணி அலாரம் வைத்து சரியாக காலை 11 மணிக்கு போன் செய்தேன்.அவரோ,சார் அரைமணி நேரத்தில் அழைக்கின்றேன் என்று சொல்லி வைத்துவிட்டார்.ஆனால் மதியம் ஒரு மணி வரை அழைப்பு இல்லை.

                              எப்போதுமே நான் போன் செய்த உடன் அழைப்பை ஏற்று எடுத்து பதில் சொல்வார் .சில நேரங்களில் பிசியாக இருந்தால் ,மெசேஜ் கொடுத்து மீண்டும் மீண்டும் சில மணி நேரம் கழித்து மெசேஜில் குறிப்பிட்ட நேரம் அழைத்து பேசுவார்.ஆனால் அன்றைய தினம் ஏனோ மீண்டும் அழைக்கவில்லை.
                                        சுமார் 1.30 மணி இருக்கும் ,உணவு சாப்பிட அமர்ந்து அப்போதுதான் சாப்பிட ஆரம்பித்தேன்.திரு.சங்கர் அவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு.நான் போன் அழைப்பை ஏற்று ,சார் சாப்பிட்டு கொண்டு உள்ளேன்.மீண்டும் அழைக்கின்றேன் என்று சொன்னேன்.சரி என்று வைத்துவிட்டார்.மீண்டும் சில நிமிடங்கள் கழித்து , திரு சங்கர் அவர்களை தொடர்பு கொண்டபோது,வருகிற 03/12/2018 ,டிசம்பர் மாதம் 3ம் தேதி திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்து சுமார் இரண்டு மணி நேரம் மாணவர்களிடம் கலந்துரையாடி செல்வதாக கூறினார்.காலையில் 11 மணிக்கு தொடர்பு கொண்ட பிறகு , பிளைட் டிக்கெட் போட்டு உள்ளதாகவும்,திரும்பி மீண்டும் சென்னை செல்வதற்கு ரிட்டர்ன் டிக்கெட் போட்டு உள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார்.பலமுறை நான் விட முயற்சியுடன் தொடர்பு கொண்டதாலேயே ,தான் டிக்கெட் போட்டு விட்டு பள்ளிக்கு ,வருகையை உறுதி செய்ததாக என்னிடம் சொன்னார்.என்னிடம் காலை 11 மணிக்கு பேசிய  பிறகுதான் ,டிக்கெட் போட்டதாகவும் சொன்னார்.மகிழ்ச்சியுடன் பேசினார்.நானும் நன்றி தெரிவித்தேன்.
                                 திரு.சங்கர் அவர்களின் வருகை தொடர்பாக     எனது நண்பர்கள் சிலரிடம் அன்று இரவு சொல்லி இருந்தேன்.சென்னையில் இருந்து 12/10/2018 அன்று காலை எனது நண்பர் ஒருவர் போன் செய்து,சார் இன்று நான் எனது அலுவலகத்துக்கு வரும் வழியில் பெரிய டிராபிக் ஜாம்.25 நிமிடம் லேட் .ஏன் என்று விசாரித்ததில் திரு.சங்கர் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.நீங்கள் நேற்று இரவு பேசும்போது ,உங்கள் பள்ளிக்கு வருவதாக சொன்னீர்களே,அவர்தான் சார் இறந்து விட்டார் என்று சொன்னார்.என்னால் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் இருந்தேன்.டிசம்பர் 3ம் தேதி வருவதாக திட்டமிடல் செய்து,வருகிறேன் என்று சொன்னவர் தீடிர் மறைவால் அதிர்ச்சி தாக்கியது.

                                        பிறகுதான் ,தெரிந்தது அவரது சாதனைகள்.வியந்து விட்டேன்.இன்று விவசாய கல்லூரிக்கு சென்று இருந்தேன்.அங்கு ,அவருக்காக ஒரு இரண்டு நிமிடம் மாணவர்களுடன் மௌன அஞ்சலி செலுத்தினால் அவரது ஆன்மா சாந்தி அடையும் என்று எண்ணிய போது , அதனையே பள்ளியின் தாளாளர் திரு.சேது குமணன் அவர்கள் சொல்லி அஞ்சலி செலுத்தினோம்.ஆனால் நான் சொல்ல நினைத்ததை சொல்லவில்லை. ஆனால் தாளாளர் அவர்களும் அதே சிந்தனையில் இருந்து உள்ளது பிறகுதான் தெரிந்தது.
                                           பல்வேறு திட்டமிடல் உள்ள ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியாக உள்ளது.கிராம பள்ளி மாணவர்களின் கனவை நனவாக்கிய திரு.சங்கர் அவர்களின் இழப்பு வருந்தத்தக்கது.

வருத்தத்துடன்,

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம் .
No comments:

Post a Comment