Friday 9 February 2018

 விழிப்புற்ற குடிமகன் பயிற்சி திட்டம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விழிப்புற்ற குடிமகன் பயிற்சி திட்டம் நடைபெற்றது.



                                                     பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.டெல்லி ராமகிருஷ்ணா மடத்தின் பயிற்சியாளர் மாதவ ரமணன் மாணவர்களுக்கு நல்ல குடிமகனாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விவேகானந்தரின் வாழ்க்கை சம்பவங்களை விளக்கமாக எடுத்து கூறி பயிற்சி அளித்தார்.மாணவர்கள் ஜெயஸ்ரீ,காயத்ரி,கீர்த்திகா,நந்தகுமார்,ராஜேஷ்,நித்திய கல்யாணி உட்பட பலர் பயிற்சி குறித்த தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.

படவிளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விழிப்புற்ற குடிமகன் பயிற்சி திட்டத்தில் டெல்லி ராமகிருஷ்ணா மடத்தின் பயிற்சியாளர் பயிற்சி அளித்தார் .உடன் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

No comments:

Post a Comment