Friday 23 February 2018

பசுமை படை பரிசளிப்பு  விழா 



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பசுமை படை பரிசளிப்பு  விழா நடைபெற்றது.விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை தாங்கி பேசுகையில் , மாணவர்கள் அனைவரும் இளம் வயதிலேயே செடிகள் வளர்த்து பசுமையை உருவாக்க வேண்டும் .மாணவர்கள் மனதில் நம்பிக்கையினை வளர்த்து கொள்ள வேண்டும் .நீங்கள் வளர்க்கும் இந்த மரங்கள் பிற்காலத்தில் அனைவருக்கும் பயன்படும்.என்று பேசினார்.ஆண்டு முழுவதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பசுமை தொடர்பாக மாணவர்கள் ரஞ்சித்,கார்த்திகேயன் பேசினார்கள்.செடிகள் புதிதாக நடப்பட்டன.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பசுமை படை பரிசளிப்பு விழாவில் தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

No comments:

Post a Comment