வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி,அறிவுசார் வளர்ச்சி,மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஒரு நுண்ணூட்ட சத்தாக வைட்டமின் ஏ விளங்குகிறது.இதனை தமிழக அரசு பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு வந்து மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் தேவகோட்டை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மேரி மற்றும் ஆரோக்கிய செல்வி ஆகியோர் வைட்டமின் ஏ நுண்ணூட்டச்சத்தை அனைத்து மாணவர்களுக்கும் கொடுத்தார்கள்.முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்து மீனாள் செய்து இருந்தார்.
பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமில் தேவகோட்டை நகராட்சி 6வது வார்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் நுண்ணூட்ட சத்து வைட்டமின் ஏ திரவத்தை மாணவ,மாணவியருக்கு கொடுத்தனர்.
பின் குறிப்பு :
குழந்தைகளின் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வைட்டமின் ஏ சத்து நான்கு மாதங்களில் குறைய ஆரம்பித்து ஆறு மாதங்களில் மிகவும் குறைந்து விடுகிறது.எனவே,வைட்டமின் ஏ சத்து 6 மாதம் முத்த ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை கொடுப்பது அவசியமாகிறது.

No comments:
Post a Comment