Wednesday 28 February 2018

தேசிய அறிவியல் தினம் 
 
 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
                              விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அறிவியல்  சோதனைகளை நேரடியாக மாணவர்களே  மாயப்பந்து சோதனையை கிருத்திகாவும், எரிவதற்கு காற்று அவசியம் சோதனையை நித்யகல்யாணியும்,காற்றில் கார்பன்டை ஆக்ஸைடு சோதனையை காயத்ரியும்,பன்முக எதிரொலிப்பு சோதனையை சக்தியும்,உப்பு நீரின் அடர்த்தி கண்டுபிடித்தல் சோதனையை அஜய் பிரகாஷும்,காற்றில் அதிர்வுகள் சோதனையை ரஞ்சித்தும்,சின்னம்மாளும்  நேரடியாக செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர்.அறிவியல் தினம் தொடர்பாக மாணவர்கள் உமாமகேஸ்வரி,கார்த்திகேயன் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தினை முன்னிட்டு மாணவர்களே அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்து அசத்தினார்கள்.

No comments:

Post a Comment