Tuesday 1 September 2015

                     மத்திய அரசின் அஞ்சல் துறையின் ஓவிய போட்டி


தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி மத்திய அரசின் அஞ்சல் துறையால்  தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு  பள்ளி அளவில் மாணவர்களை தேர்வு செய்யும் அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.


                                  இப்போட்டிக்கு வந்திருந்தோரை மாணவி ராஜேஸ்வரி  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி   மத்திய அரசின் அஞ்சல் துறை சார்பாக "மழையில் ஒரு நாள்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான அஞ்சல் தலை வடிவமைப்பு  ஓவிய போட்டி தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரிவாக எடுத்து கூறினார்.ஓவிய போட்டியை ஆசிரியை முத்து மீனாள் நடத்தினார் . இப்போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட மாணவர்களில் தேசிய அளவில் கலந்து கொள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.போட்டியில் கலந்துகொண்ட மாணவ,மாணவிகளில் மாணவர்கள் பிரிவில் முதல் பரிசை 8ம் வகுப்பு வீரன் முகேஷ் , 2ம் பரிசை 6ம் வகுப்பு ராஜேஷ், 3ம் பரிசை 8ம் வகுப்பு வசந்தகுமார்,மாணவிகள் பிரிவில் முதல் பரிசை 8ம் வகுப்பு தனம்,இரண்டாம் பரிசை நித்ய கல்யாணி,மூன்றாம் பரிசை சுமித்ரா ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றனர்.ஆறுதல் பரிசாக நான்காம் வகுப்பு சபரி,7ம் வகுப்பு பரமேஸ்வரி ஆகியோர் பெற்றனர்.நிறைவாக மாணவர் ரஞ்சித் நன்றி கூறினார்.

பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி மத்திய அரசின் அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment