Friday 11 September 2015

               சேமிப்பும் சேவையும் திட்ட தொடக்க விழா

                           தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  சேமிப்பும் சேவையும் என்கிற திட்டம் துவக்க விழா நடைபெற்றது.


                                   விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரை நிகழ்த்திய தினத்தை முன்னிட்டு சேமிப்பும் சேவையும் சுவாமிஜியின் பெயரால் என்கிற திட்டதை  தேவகோட்டை தபால் அலுவலக தலைமை அதிகாரி ராமசந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும்,விவேகானந்தர் கூறியுள்ள பொன்மொழிகள் குறித்தும்,அதனை மாணவர்கள் கடைபிடிப்பதற்க்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.இத்திட்டத்தின்படி மொத்தம் 81 நாட்கள் உண்டியல் மூலம் பணம் சேமித்து அதனை பள்ளியின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தவும் ,மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கம் ஏற்படுத்தவும் வழிவகை செய்கிறது.1ம் வகுப்பு திவ்யஸ்ரீ ,3ம் வகுப்பு கிஷோர் குமார் , ஜனஸ்ரீ ,கீர்த்தியா,4ம் வகுப்பு தனுதர்ஷினி,6ம் வகுப்பு சக்தி,7ம் வகுப்பு சாய் புவன்,8ம் வகுப்பு முனீஸ்வரன் ஆகியோர் விவேகானந்தர் வேடம் அணிந்து அவர் குறித்து பேசினார்கள்.மாணவ,மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். சென்னை  ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வழிகாட்டுதலின்படி இவ்விழா நடைபெற்றது.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  சேமிப்பும் சேவையும் என்கிற திட்டம் துவக்க விழா தேவகோட்டை அஞ்சலக தலைமை அதிகாரி ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment