இந்த மாத சுட்டி விகடன் (30/09/2015) இதழில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் FA செயல்பாடுகள் அவர்களது படங்களுடன் வெளியாகி உள்ளது.
இந்த மாத சுட்டி விகடன் (30/09/2015) இதழில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் FA செயல்பாடுகள் அவர்களது படங்களுடன் வெளியாகி உள்ளது.
ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தேவகோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற திருப்பல்லாண்டு ஒப்புவித்தல் போட்டியில் 7 பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் அதற்கான பாடல்களை முழுவதும் ஒப்புவித்து பரிசுகளை வென்று வந்தனர்.பயற்சி அளித்த ஆசிரியை கலாவல்லி அவர்களையும்,கலந்து கொண்ட அனைவரும் வெற்றி பெற்றதை தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டினார்.
Tuesday, 22 September 2015
புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி
2015 மாணவர் மேடைபோட்டியில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்
பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
சுட்டி தமிழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி குரல் கேளுங்கள்
இன்றைய சுட்டி தமிழில்(044-66802905) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவியும்,சுட்டி ஸ்டாருமான மு.தனலெட்சுமி பேசுவதை கீழ்க்கண்ட எண்ணில் டையல் செய்து கேட்கவும். ( இரவு 12 மணி வரை கேட்கலாம் )கேட்டுவிட்டு வாழ்த்துக்களை சொல்லுமாறு அன்புடன் கொள்கிறேன்.
Friday, 18 September 2015
சுட்டி கிரியேசன்ஸ் அழகிய கடல் சிங்கம் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ஆனந்த விகடன் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் அறம் செய விரும்பு திட்டத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தேர்வு
நண்பர்களே ,இந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் ஆனந்த விகடன் குழுமம் இணைந்து செயல் பட உள்ள அறம் செய விரும்பு திட்டத்தில் சேவை செய்ய என்னை தேர்ந்தெடுத்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும்,ஆனந்த விகடன் குழுமத்திற்கும் எனது நன்றி.( எனது படமும் ,பேட்டியும் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்துள்ளது )
லெ .சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர் , சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.
Saturday, 12 September 2015
போட்டிகளில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்குதல்
விருது பெற்றவர்கள் புதிய தலைமுறை கல்வி இதழில் அட்டை படத்தில்
இந்த வாரம் புதிய தலைமுறை கல்வி இதழில் மேலும் புதிய தலைமுறை கல்வி வால் போஸ்டரிலும் ,புத்தகத்தின் அட்டை படமாகவும் புதிய தலைமுறை ஆசிரியர் விருது-2015 பெற்றவர்கள் தொடர்பான கட்டுரை வெளியாகி உள்ளது.ஆசிரியர்களின் சாதனைகளை உலகு அறிய செய்துள்ள புதிய தலைமுறை குழுமத்திற்கு நன்றி
விருது பெற்றவர்கள் புதிய தலைமுறை இதழில்
இந்த வாரம் புதிய தலைமுறை இதழில் புதிய தலைமுறை ஆசிரியர் விருது-2015 பெற்றவர்கள் தொடர்பான கட்டுரை வெளியாகி உள்ளது.
Wednesday, 9 September 2015
சிவகங்கை மாவட்டத்தில் PBL பயிற்சி
கடந்த வாரம் சிவகங்கை மாவட்ட த்தில் சிவகங்கை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற PBL பயிற்சியில் கருத்தாளராக நான் கலந்து கொண்டு பயற்சி அளித்தபோது எடுத்த படங்கள்.சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.திருப்புவனத்தை சார்ந்த அறிவியல் ஆசிரியை சித்ரா அவர்கள் சக பயிற்சியாளராக கலந்து கொண்டார்.அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் திருமதி.வசந்தி அவர்கள் தலைமை தாங்கி பயற்சி குறித்து உரை நிகழ்த்தினார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.ரதி மாலா அவர்கள் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.ஆசிரியர்கள் அனைவரும் நிறைய தகவலுடன் உற்சாகமாக பயிற்சி முடித்து சென்றனர்.
Monday, 7 September 2015
அறிவியல் பாடல் ஒப்புவித்தல் போட்டி
தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் பாடல் ஒப்புவித்தல்
போட்டியும்,பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
மாநில அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2015 பெறும் ஒரே பள்ளி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, அதன் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா ஒலிபரப்பு ஆகும் நாள் மற்றும் நேரம் நாள் : சனிக்கிழமை (05/09/2015) நேரம் :மாலை 5:30 முதல் 7.00 மணி வரை மறு ஒலிபரப்பு : ஞாயிறு (06/09/2015) நேரம் :மாலை 4.30 முதல் 6.00 மணி வரை
திருமதி. மாலதி ராஜேந்திரன் IAS. ( director of textbooks organization) அவர்களை நேற்று DPI வளாகத்தில் நடைபெற்ற PBL பயிற்சியின்போது சந்திக்க வாய்ப்பு கிடைத்தது..!! ஆசிரியை திருமதி.சித்ரா மற்றும் திருமதி.உமா மகேஸ்வரி ஆகியோருக்கு நன்றி.
தமிழ்நாடு தொடக்க கல்வி துணை இயக்குனர் ( உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ) திரு.செல்வராஜ் அவர்களுடன்
தமிழ்நாடு பள்ளி கல்வி துறை திரு.அறிவொளி மற்றும் திரு. குமார் அவர்களுடன்
தமிழ்நாடு பள்ளி கல்வி துறை திரு.கருப்பசாமி அவர்களுடன்
Tuesday, 1 September 2015
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றபோது படப்பிடிப்பு குழுவினருடன் பள்ளி மாணவ,மாணவியர்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றபோது மாணவ,மாணவியர் சான்றிதழ்களுடன் ,தலைமை ஆசிரியர்,ஆசிரியர் ,ஆசிரியைகள்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் படப்பிடிப்பு
புதிய தலைமுறை (தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை குழுமம் ) ஆசிரியர் விருது 2015 -க்கு தேர்வாகியுள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி படப்பிடிப்பு குழுவினர் படப்பிடிப்பு நடத்தினர் .
தேவகோட்டை-
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள்
தினத்தையொட்டி மத்திய அரசின் அஞ்சல் துறையால் தேசிய அளவில் நடைபெற உள்ள
போட்டிக்கு பள்ளி அளவில் மாணவர்களை தேர்வு செய்யும் அஞ்சல்தலை வடிவமைப்பு
போட்டி நடைபெற்றது.