Saturday, 25 October 2025

 மாணவர்களுக்கு நிதி திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் 

தலைமை ஆசிரியர் வேண்டுகோள் 

பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் 






தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது. 

                                தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது. இதில் பள்ளியில் பயிலும்  மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் பெற்றோர்களிடம் பேசும்போது, மாணவர்களிடம் இளம் வயதில் நிதிமேலாண்மை திட்டமிடலை கற்றுக்கொடுக்குமாறும், பெற்றோர்களையும் நிதி திட்டமிடல் செய்யுமாறும்  , கேட்டுக்கொண்டார்.பெற்றோர்கள் பலரும் பள்ளியில் நடைபெறும்  நிகழ்வுகளை பாராட்டி பேசினார்கள். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சிறப்பாக பேசிய பெற்றோர்கள் அன்னபூரணி மற்றும் நாகராஜ் ஆகியோருக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது. இதில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.இதில் பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி பேசினார்.சிறப்பாக பேசிய பெற்றோர்கள் அன்னபூரணி மற்றும் நாகராஜ் ஆகியோருக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.



வீடியோ :  https://www.youtube.com/watch?v=DfdTiXPnVYM


https://www.youtube.com/watch?v=NudfhQlqc4o

No comments:

Post a Comment