Saturday, 25 October 2025

 ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின்  1ம் வகுப்பு மாணவியின் பேச்சை காண 27/10/2025 அன்று ( மாலை சரியாக 6.05 மணிக்கு ) வாருங்கள்.முழு நிகழ்ச்சியையும் ( 1 மணி நேரம்) இளம் வயது  மாணவிகள்   தொகுத்து வழங்க உள்ளார்.மகிழ்ச்சியாக இருக்க பாடல்கள்,கருத்து மிக்க பேச்சுக்கள்,  என அனைத்தையும் காண வாருங்கள்.

       


             

தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் 
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின்   சார்பாக கலை நிகழ்ச்சிகள் 27/10/2025

 தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில் 27/10/2025 அன்று  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சிகளை மாலை சரியாக 6.05 மணிக்கு கண்டு மகிழ  அனைவரும் வாருங்கள்.இதில் கீழ்க்கண்ட வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 1 முதல் 8 வரை உள்ள மாணவ,மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது.கீழ் கண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குபவர் இப்பள்ளியின் இளம் வயது மாணவிகள் ஹாஷினி, நந்தனா ஆகியோர்  என்பது குறிப்பிடத்தக்கது.

1.வரவேற்புரை -

2. ஐயப்பன் பாட்டு - குழு நடனம் 

3. நாயன்மார்கள் கதை - பேச்சு 

4. காவடி ஆட்டம்  - குழு நடனம் 

5. நகரத்தார் சிகரத்தார் பேச்சு -  

6.பஞ்சபுராணம் பாடல் - 

7.சிலம்பம் பாட்டு - குழு நடனம் 

8.செட்டிநாட்டு நகரத்தார் சாப்பாடு - கலந்துரையாடல் 

9.கும்மியடி பெண்ணே  - குழு நடனம் 

10.கண்ணனின் உறைவிடம் எங்கே ? பேச்சு 

11. கோலாட்டம் - குழு நடனம் 

12.சுந்தரகாண்டம் பாடல் 

13.முருகனின் வாழ்க்கை வரலாறு - பேச்சு 

14. நன்றியுரை 



இவை அனைத்தையும் கண்டு மகிழ ,மாணவ,மாணவியரை வாழ்த்துவதற்கும் அன்புடன் அழைக்கின்றோம்.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை .






No comments:

Post a Comment