Tuesday, 14 October 2025

 

பாஸ்போர்ட்  அலுவலகத்துக்கு  களப்பயணம் சென்ற நடுநிலைப் பள்ளி மாணவர்கள்







தேவகோட்டை –   தேவகோட்டை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் களபயணம் சென்றனர்.அப்போது அஞ்சல்துறையின் தேவகோட்டை தலைமை தபால் அதிகாரி செல்வராஜ்  மாணவர்களை வரவேற்றார். பின்னர் பாஸ்போர்ட் அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து பாஸ்போர்ட் அலுவலர்கள்  ஷர்மிளா மற்றும் மாதவன்  ஆகியோர் விரிவாக விளக்கினார்கள்.

                   பாஸ்போர்ட் தேவைப்படுபவர்கள் முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.பிறகு விண்ணப்பித்த கடிதத்தோடு ,  ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். இவ்வாறு கொண்டு வரும்போது சான்றிதழின் நகலையும், அந்த நகலில் சான்றிதழ் உண்மைத்தன்மை கொண்டது என்ற சுய சான்றொப்பம் இட்டு வழங்க வேண்டும்.

                            பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது, முகவரிக்கான சான்றிதழும் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கான சான்றிதழும் இருக்க வேண்டும். முகவரி விவரத்தைச் சரிபார்க்க ஆதார் கார்டே போதுமானது.

                                இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர். நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.மாணவர்களை அழைத்து செல்ல ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்து இருந்தார்.

 

பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து பாஸ்போர்ட் அலுவலர் ஷர்மிளா மற்றும் மாதவன் ஆகியோர் விரிவாக விளக்கினார்கள். 

 

வீடியோ :  https://www.youtube.com/watch?v=mJnOUzBCGA0

No comments:

Post a Comment