தமிழக அரசின் அரும்பு,மொட்டு,மலர் பயிற்சி நூல் வழங்குதல்
எண்ணும் , எழுத்தும் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குதல்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எண்ணும் ,எழுத்தும் பயிற்சி கையேடு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கு அரும்பு ,மொட்டு,மலர் பயிற்சி கையேடுகள் பள்ளிகளில் வழங்கப்பட்டது.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடுகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள் .ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் .தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் , பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடுகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள் .
வீடியோ : https://www.youtube.com/watch?v=COMpRBAnfk8
No comments:
Post a Comment