படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி
பள்ளி விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் ஒவ்வொரு மாணவரும் படிக்கும் வகையில் மாணவர்களின் வீட்டுக்கு நான்கு ,நான்கு புத்தகங்கள் கொடுத்து படிக்க சொல்லி பேசும்போது ,தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி அதிக அளவில் ஊர்புற நூலகங்களை திறந்துள்ளது.நூலகங்களில் அரியவகை புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன . பள்ளி விடுமுறையில் புத்தகங்களையும்,நூலகங்களையும் மாணவர்கள் பயன்படுத்தி அறிவை பெருக்கி கொள்ள வேண்டும் என்று பேசினார்.புத்தகம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்து மீனாள்,முத்து லெட்சுமி, ஆகியோர் செய்து இருந்தனர்.மாணவர்களுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில் படித்ததை கேட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
வீடியோ : https://www.youtube.com/watch?v=tHH_cd8h3K8
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
வீடியோ : https://www.youtube.com/watch?v=tHH_cd8h3K8
மேலும் விரிவாக :
வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் என்ன ?
பள்ளி விடுமுறையில் மாணவர்கள் வீடுகளில் படிக்க புத்தகம் வழங்கி அசத்திய பள்ளி
புத்தகங்கள் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு அறிவிப்பு
மாணவர்கள் நூலகங்களை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சு
கிழமைக்கு ஒரு வகுப்பு - கதை ,கருத்து சொல்ல வேண்டும் என்ற முறையினை பள்ளியில் செயல்படுத்தியதால் மாணவர்களிடம் வாசிப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி சொல்கிறார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
மாற்றம் தொடர்பாக மாணவர்களின் கருத்துக்கள் என்ன?
வாசிப்பை நேசிப்போம் - தைரியத்தை,தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ள வாசிப்பு -ஆறாம் வகுப்பு மாணவியின் கனவு
வாசிப்பை நேசிப்போம் - மாணவர்கள் அனைவருக்கும் கல்வியுடன் கூடிய பொதுவான தகவல்களில் புரிதல் ஏற்படுத்துதல்
தைரியத்தை,தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ள வாசிப்பு -ஏழாம் வகுப்பு மாணவரின் கனவு
தனது சொந்த கற்பனையில் கதை எழுதும் மாணவர்கள்
வாசிப்பை நேசிப்பாக்கி கதை எழுதும் ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தியுள்ள கதையை அறிந்து கொள்ள - படியுங்கள்
வாசிப்பு பழக்கத்தை எவ்வாறு மாணவர்களிடம் கொண்டு போய் சேர்த்தோம் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ ,சொக்கலிங்கம் கூறுகையில் :
கிழமைக்கு ஒரு வகுப்பு :
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக அனைவருக்கும் கல்வி இயக்கம் வழங்கிய புத்தகங்கள்,( புத்தக பூங்கொத்து ) மற்றும் பல்வேறு இதழ்களை படிக்க சொல்லி அதனை கிழமைக்கு ஒரு வகுப்பு என்று முறைப்படுத்தி காலை வழிபாட்டு கூட்டத்தில் இரண்டு மாணவர்கள் தாங்கள் படித்ததை தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.இதில் குறிப்பிட தக்க விஷயம் இந்த வாரம் சொன்ன மாணவர்களே மீண்டும் அடுத்த வாரம் சொல்லக்கூடாது.அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்.அதனை தொடர்ந்து ஓராண்டாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம் .மாணவர்களும் தைரியமாக,தன்னம்பிக்கையுடன் பல்வேறு தகவல்களை படித்து,கதைகளை படித்து சொல்லி வருகின்றனர்.நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து பல்வேறு புதிய தகவல்களை அறிந்து கொள்வதற்கும்,மேடை பேச்சு எளிதாக வருவதற்கும் இது உதவியாக உள்ளது.
விடுமுறையில் புத்தகங்கள் படிக்க வைத்தல் :
கோடை விடுமுறையில் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு அதனை படித்து வர சொல்லி,மீண்டும் பள்ளி திறந்ததும் வகுப்பு வாரியாக புத்தகங்கள் படித்ததை கேட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.இதனை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறோம்.இளம் வயதில் படிக்கும் மாணவர்களை புத்தகங்கள் வாசிக்க சொல்லி பழக்கப்படுத்துவதால் அவர்கள் புத்தக ஆசிரியர்கள்,வெளியீட்டாளர்கள் ,ஓவியம் வரைந்தவர்கள் உட்பட புத்தகத்தில் உள்ள அனைத்து தகவலையும் படித்து சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.மூன்றாம் பருவ கோடை விடுமுறையிலும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் கொடுக்கப்பட்டு ,புத்தகங்கள் படித்ததை கேட்டு அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
தகவல் பலகை வாசித்தல் :
வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்கள் தகவல் பலகையில் உள்ள தகவல்களை படித்து அதனையும் அவரவர் வகுப்புகளில் விளக்கி சொல்ல வேண்டும்.அதனையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம்.
நூலக பாடவேளை - புத்தகங்கள் வாசித்தல் :
வகுப்புகளுக்கும் தொடர்ந்து நூலக பாடவேளை வைத்து அதனிலும் புத்தகங்கள் படிக்க சொல்லி தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம்.வாரத்திற்கு ஒரு முறை புத்தகங்களை வகுப்புகளில் மாற்றி கொடுக்கிறோம்.தொடர்ந்து இந்த முயற்சி நடைபெற்று வருவதால் அதன் வெளிப்பாடாக மாணவர்கள் இளம் வயதில் பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்வதுடன் வாசிக்கும் பழக்கத்தை இளம் வயதில் நன்றாக கற்று கொள்கின்றனர்.
நாளிதழ்கள் - புத்தகங்கள் வாசித்தல் :
பல்வேறு நாளிதழ்களில் வெளிவரும் புத்தகங்களையும் , தினசரி தொகுப்புகளையும் மாணவர்களுக்கு வழங்கி அவற்றையும் படித்து விட்டு காலை வழிபாட்டு கூட்டத்தில் தொடர்ந்து சொல்ல சொல்கிறோம்.அதன் மூலம் அவர்கள் பல பொதுவான தகவல்களை தெரிந்து கொள்வதுடன் இளம் வயதில் பல்வேறு அரசு தொடர்பான தகவல்களை ,அறிவியல் தொடர்பான கருத்துக்களை,துணுக்குகளை அறிந்து கொண்டு அவற்றை சரியான நேரத்தில் பயன்படுத்துவவும் தெரிந்து கொள்கின்றனர்.
தைரியத்தை,தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ள வாசிப்பு -ஏழாம் வகுப்பு மாணவரின் கனவு :
எட்டாம் வகுப்பு படிக்கும் சிரேகா என்ற மாணவி சொல்லும்போது ,எங்கள் பள்ளியில் தொடர்ந்து இது போன்று புத்தகங்களுடன் பல்வேறு இதழ்களையும் படிப்பதுடன் அவற்றை தினசரி காலை வழிபாட்டு கூட்டத்தில் சொல்லும்போது அந்த தகவகல்கள் எனது மனதில் பதிந்து விடுகிறது.இப்போது நானே தைரியமாக ,தன்னம்பிக்கையுடன் பல தகவல்களை பேசி வருகின்றேன். முன்பெல்லாம் நான் வழிபாட்டு கூட்டங்களில்,மாணவர்களின் முன்பாக பேச தயக்கமாக இருப்பேன்.தொடர்ந்து பல இதழ்களை வசித்ததால் தற்போது எனக்கு தன்னம்பிக்கையுடன் தைரியமாக பேசும் ஆற்றலும் வந்துள்ளது.பல புத்தகங்களை தொடர்ந்து படித்து வருவதால் என்னால் சொந்தமாக கதை எழுதும் ஆர்வமும் எனக்கு வந்து உள்ளது.வாசிப்பை நேசிப்போம்.இன்னும் அதிகமாக படிப்பேன்.நான் இரண்டாம் பருவ விடுமுறையில் படித்து வந்த கதையை உங்கள் முன் சொல்லி உள்ளேன்.கண்டிப்பாக பிற்காலத்தில் இன்னும் அதிகமாக புத்தகங்கள் படிப்பேன்.கண்டிப்பாக வரும் காலத்தில் நிறைய நூல்கள் எழுதுவேன்.என்று கூறினார்.
நூல்களின் மூலம் புதிய மாற்றம் ஏற்படுத்துவோம் - தலைமை ஆசிரியர்
இன்னும் அதிகமான மாணவர்கள் தொடர்ந்து வாசித்து அதன் வாயிலாக பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதுடன் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு உள்ளனர்.இது தொடரும்.இன்னும் அதிகமான மாணவர்கள் தன்னம்பிக்கையுடன்,தைரியத்துடன் வெளி வந்து புத்தக விரும்பிகளாக,சிறந்த எழுத்தாளராக,படைப்பாளியாக உருவாவார்கள் என்பது உண்மை.பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள்,மாணவர்களின் ஒத்துழைப்புடன் வாசிப்பில் உயரத்தை தொடுவோம் இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தொடர்ந்து பாட புத்தகங்களை தாண்டி பல்வேறு புத்தகங்களை வாசிக்கும் மாணவர்கள் புத்தகங்களுடன் உள்ளனர்.
No comments:
Post a Comment