Thursday, 26 December 2024

 பேசும் காலண்டர் 

காலண்டர்களில் புதுமை 

காலண்டரில் காணொளிக் காட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை ரசித்து செய்தோம் 

தயாரிப்பாளர் பேட்டி 



காரைக்குடி - காலெண்டர் பேசுகிறதா ? ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான் நண்பர்களே ! நானும் இதுபோன்றுதான் ஆச்சிர்யத்துடன் பார்த்தேன். சிவகாசி கற்பகா காலெண்டர் பேசுகிறது.

                                      நண்பர்களே கடந்த சில வருடங்களாக தொடர்ந்து காலண்டர்களில் மிகப்பெரிய கேக் கொண்ட காலண்டரை பயன்படுத்தி வருகின்றேன்.

                              மிக அருமையான தகவலை கூறக் கூடிய தினம் ஒரு வாசகமும், மருத்துவ குறிப்புகளும், அந்த நாளின் சிறப்புகளும் என அனைத்து தகவலும் மிக அருமையாக மல்டி கலரில் அச்சிடப்பட்டு உள்ளது. 

                             இதுவரை காரைக்குடியில் உள்ள ஒருவரிடம்  இந்த சைஸ் ( 27.5 cm  மற்றும் 33.5 cm ) அளவுள்ள காலெண்டர் கேக் வாங்கி வந்தேன். இந்த ஆண்டு அவர் நான் விற்கவில்லை என்று கூறிவிட்டார்.

                      எனவே பல நண்பர்களிடம் விசாரித்து பேசி ஏழு நாட்களுக்கும் மேலாக இருபதுக்கும் மேலான தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிறைவாக சிவகாசியில் உள்ள கற்பக காலண்டர் நிறுவனர் ஜெய்சங்கர் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

                                          ஜெய் சங்கர்  அவர்களும் என்னிடம் அன்பாக பேசினார்கள். அவர்களிடம் பேசிய பிறகுதான் கடந்த ஆண்டு காலண்டரில் க்யூ ஆர் கோடு இருப்பதைப் பார்த்தேன்.

                                 அந்த கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தபோது அந்த நாளின் சிறப்புகளை வீடியோவாக பார்க்கும் வகையில் இருந்தது. காலண்டர் பேசியது. எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.

                            இதுகுறித்து ஜெய்சங்கர் அவர்களிடம் விசாரித்தேன். காலெண்டராக  மட்டுமல்லாமல் அதை காணொளி காட்சியாகவும் மாற்ற வேண்டும் என்று ரசித்து நாங்கள் இதனை செய்தோம்.

                                    காலெண்டரை  ஸ்கேன் செய்தால் 365 நாட்களும் 365 விதமான தகவல்களை நீங்கள் காணொளியின் மூலம்  காணலாம். காலண்டரில் ஒரு புதுமையான முயற்சி என்று தெரிவித்தார்.

                          எனக்கு இது மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்த காலெண்டரில்   மிகவும் அருமையான வாசகங்களை தேர்ந்தெடுத்து பதிவு செய்துள்ளார்கள்.

                                        கடந்த ஆண்டு என் நண்பர் ஓவருவருக்கும் இந்த காலண்டரை வழங்கினேன்.

                                          நண்பரும்  அவர் பணியாற்றும் பள்ளியில்  , பள்ளியின்  வெளி சுவற்றில் இந்த காலண்டரில் வரும் வாசகங்களை தினசரி "தினம் ஒரு பொன்மொழி" என்ற தலைப்பில் கரும்பலகையில் எழுதி போடுவதாக   கூறினார். 

                            சாலைகளில் செல்லும் பலரும் ஆர்வத்துடன் நின்று  இதனை படித்து விட்டு செல்வதாக  என்னிடம் கூறி மகிழ்ந்தார்.

                                கேலண்டர் என்றால் இலவசமாக பெற்று விட்ட நமக்கு காலண்டரை காசு கொடுத்து வாங்கினால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை கற்பகா காலண்டர் மூலமாக அறிந்துகொண்டேன்.

                 எனவே நண்பர்களே பேசும் காலண்டரை வாய்ப்பு இருந்தால் நீங்களும் வாங்கி பயன்படுத்தி பாருங்கள். 

                              சிவகாசி  கற்பகா காலண்டர் நிறுவனர்  ஜெய்சங்கர். தொடர்பு எண் : 94431 32480 .

                                  புதிய ஆண்டில் பேசும் காலண்டரை பயன்படுத்தி பாருங்களேன்  .

நன்றி 

லட்சுமணன் 

காரைக்குடி 






No comments:

Post a Comment